Pages

Monday

தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இஸ்ரேல் நாட்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் மூலம் உரம் போடுதல், பசுமைக் குடில்கள் அமைத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதற்காக தமிழக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டிற்கு 17 ந் தேதி (சனிக்கிழமை) அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்காக 8 நாள் சுற்றுப்பயணத்திற்கு தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த குழுவில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரிய தலைவர் கே.பி.ராமலிங்கம், துணைத்தலைவர் கே.செல்லமுத்து, தமிழ்நாடு ரெயில்வே மண்டல உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ப.கவுசிக் உள்பட 21 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களை வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பிவைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source:http://nakkheeran.in/users/frmNews.aspx?N=18756


1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete