வாழையை நடவு செய்தால் ஒவ்வொரு மாதமும் அறுவடை
இதுவரை கரும்பு சாகுபடி பற்றி முழுமையாகப் பார்த்தோம். அடுத்து ஜீரோ பட்ஜெட் முறையில் வாழை சாகுபடி பற்றிப் பார்ப்போம்.
உலகம் முழுவதும் பயிரிடப்படும்
பிரபலமான பயிர் வாழை. ஆப்பிரிக்காதான் வாழையின் பிறப்பிடம். அதை உலகுக்கு
அறிமுகப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.
நம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால்,
ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி
செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி,
விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி...