Showing posts with label மலைவேம்பு. Show all posts
Showing posts with label மலைவேம்பு. Show all posts

Wednesday

பணம் குவிக்கும் மலைவேம்பு

ரங்களின் பலன்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்போல் நீண்டுகொண்டே போகும். சாதாரண பென்சில் முதல் மிகப்பெரிய கப்பல்களைக் கட்டுவது வரை மரங்களின் பயன், பலன் ஏராளம்... ஏராளம்…
மரம் தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்த மனிதன் உள்பட பிற விலங்கினங்களையும் வளர்க்கிறது. கண்களை சற்றே அகலமாக விரித்துப் பார்த்தால், நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை விதமான மரப் பயன்கள். குடியிருக்க வீடு கட்ட, வீட்டை அடிகூட்ட, பர்னிச்சர்கள் செய்ய, வேளாண் கருவிகளுக்கு, மின்சாரப் பயன்கள், கைத்தறி நெசவு கருவி,
தண்டவாளங்களுக்கு சிலீப்பர் கட்டை, மீன்பிடிப் படகு கட்ட, விளையாட்டுக் கருவிகள் செய்ய, வார்ப்பட அச்சுகள் செய்ய, குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்ய என மரங்களின் பன்முகப் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பன்முகப் பயன்பாட்டில் நவீனகால பயன்பாடான ஒட்டுப்பலகை எனும் பிளைவுட், மிக நீண்டகாலமாக பயன்பட்டு வரும் காகிதம், விறகுகளை எரிபொருளாகப் பயன்படுத்தி உண்டாக்கும் மின்சாரம் போன்றவையும் உண்டு.