Showing posts with label முயல் வளர்ப்பு. Show all posts
Showing posts with label முயல் வளர்ப்பு. Show all posts

Wednesday

கோழி, முயல் வளர்ப்பில் சாதிக்கும் காய்கறி வியாபாரி

விருதுநகரிலிருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில் வரலொட்டி அருகே தண்டபாணி என்பவருக்கு சொந்தமான "சுமதி பழத்தோட்டம்' உள்ளது. இங்கு கொய்யா, சப்போட்டா என்ற பலவித பழ பயிர்களை விளைவித்து வருகிறார். விருதுநகர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தும் இவர், கோழி, ஆடு வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். அதாவது தனது தோட்டத்தில் நாட்டு கோழி, கிரிஜா கோழி என 500 கோழிகளை வளர்க்கிறார். இதன் மூலம் தினம் 200 முட்டைகள் கிடைக்கிறது.
ஒரு முட்டை ரூ. 10, கிலோ கோழி ரூ. 300க்கு விற்பனை செய்கிறார். முட்டை, கோழி விற்பனை மூலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் பெறுகிறார். இவரே பழத்தோட்ட பண்ணை வைத்திருப்பதால் இதற்கான தீவன செலவு குறைவே.
இதே போல் ராஜஸ்தானில் உள்ள மத்திய அரசு பண்ணையில் வாங்கி வரப்பட்ட ஒயிட் ஜெயின்ட் முயல்களும் வளர்க்கிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை குட்டி போடும் பெண் முயல், ஒரு முறைக்கு 10 குட்டி போடுகிறது. இது ஐந்து மாதத்திலே ஆறு கிலோ வரை எடைக்கு வந்துவிடுகிறது. ஒவ்வொரு முயலுக்கும் தனித்தனி கூண்டு அமைத்துள்ளார். இந்த முயலை ஆய்வுக்காக பள்ளி, கல்லூரிக்கு தருகிறார்.
நாட்டு புறாக்களும் இங்கு உண்டு. அடை காக்கும் புறா 21 நாளில் குஞ்சு பொறித்து விடும். அடுத்த 21 நாளில் பறக்க தொடங்கும் குஞ்சு புறா, 75 வது நாளில் முட்டையிட தொடங்கி விடும். குஞ்சு பொறித்த தாய் புறா, அடுத்த ஒரு வாரத்திலே மீண்டும் முட்டையிடும். ஒரு ஜோடி புறா ரூ. 250, குஞ்சு ரூ. 150 க்கு விற்கிறேன் என்கிறார் தண்டபாணி.

தொடர்புக்கு 93674 11815.

Source: Dinamalar

Tuesday

முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு
அங்கோரா முயல் வளர்ப்பு
அங்கோரா முயல்கள், உரோமத்தின் தரத்திற்காக வளர்க்கப்படுகிறது. அங்கோரா முயல்களில் நிறைய வகைகள் உள்ளன. முயலின் உடம்பை சுற்றியுள்ள உரோமும், உரோமம் உற்பத்தி செய்யப்படும் சதவீதத்திற்கும் வேறுபாடு உள்ளது. பலதரப்பட்ட முயல்களில், ஜெர்மன் அங்கோரா இனம் சிறந்தது. இது 1000 – 1200 கிராம் அளவு உரோமத்தை நல்ல மேலாண்மை முறையைப் பின்பற்றினால் பெறலாம். முயல்களை எந்த விதமான சூழ்நிலைகளிலும், அதாவது புறக்கடைத் தோட்டம் முதல் பெரிய அளவில் ஒரு தொழிலாகவும் செய்யலாம்.
முயல் வளர்ப்பின் நன்மைகள்
முயல்கள் அதிகளவில் இனவிருத்தி செய்யும் தன்மையுடையது.
பலதரப்பட்ட தீவனங்களை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்வதால், சிறிய தொகையை முதலீடு செய்து முயல்களை வளர்க்கலாம்.
ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.
மிக விரைவில் லாபம் கிடைக்கப்பெறும். அதாவது முயல் வளர்ப்பு ஆரம்பித்த 6 மாத காலத்திலிருந்தே பெறலாம்.
வருமானம் குறுகிய காலத்திலேயே கிடைக்கப் பெறுவதால், கடனை திருப்பி செலுத்துவதும் எளிதாக உள்ளது.
உரோமம் மட்டுமல்லாமல், எருவிலிருந்தும் வருமானம் கிடைக்கப் பெறுகிறது.
முயல் வளர்ப்பின் முக்கியத்துவம்
மற்ற கால்நடை வளர்ப்பை விட முயல் வளர்ப்பினால் சிறிய முதலீடு செய்து எளிதாக வருமானமும் பெறலாம். முயல்கள் மனிதனுக்கு தேவையான உணவுடன் போட்டியிடுவதில்லை. அதனால் உணவு உற்பத்தி சங்கிலியில் இது அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. நல்ல தரமான உரோமத்தை உற்பத்தி செய்வதால், மற்ற தரமுடைய உரோமங்களுடன் கலந்து செய்ய வேண்டும். செம்மறியாடுகளிலிருந்து வரும் உரோமம் நல்ல தரமுடைய உரோமம் இல்லை. ஆனால் அங்கோரா முயலின் உரோமம் அதிக தரமுடையது. செம்மறியாட்டின் உரோமம் மற்றும் பட்டுநூலுடன் கலந்து செய்யும் போது, இன்னும் அதிக தரத்தைத் தருகிறது.
வடக்கு குளிர் மண்டல நிலையத்தின் (கர்ஸா,குல்லு என்ற இடத்தில்) மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தின்  உதவியுடன் நல்ல தரமடைய முயல் இனங்களை பெற முடிகிறது. மேலும், அங்கே முயல் வளர்ப்பு பற்றி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இருந்தாலும், அங்கோரா முயல்கள் மலைப் பகுதிகளில் மட்டும் தான் வளர்க்க முடியும். ஆகவே, அங்கோரா முயல் வளர்ப்பு மலைப்பகுதிகளில்  உள்ள உழவர்களுக்கு ஒரு பெரிய வருமானம் தரும் தொழிலாக உள்ளது.
முயல் வளர்ப்பிற்குத் தேவையான வளர்ப்பு முறைகள்
இனங்களைத் தேர்வு செய்தல்
பொருளாதார பலன்களை அதிகளவில் பெற தகுந்த இனங்களைத் தேர்வு செய்யவும்.
இனபெருக்கம் செய்யப் பயன்படும் ஆண் மற்றும் பெண் முயல்கள் வெவ்வேறு இனமாகவும், ஒரு வருடத்திற்கு குறைவாகவும், எந்த குறைபாடும் இல்லாதவாறு இருக்க வேண்டும்.
முயல் வளர்க்க ஏற்ற இடம் மற்றும் குடில் தேர்வு செய்தல்
வெப்பநிலை 10-20  ̊ செ. அளவும், ஒப்பு ஈரப்பதம் 55-65% அளவு வருடம் முழுவதும் உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
சுத்தமான நீர், மின்சாரம், சாலை வசதி, தீவனங்களை வழங்குதல், தீவனம், உணவு, மருத்துவ உதவி, சந்தை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறிய அளவில் உள்ள முயல் பண்ணைகளுக்கு, கூண்டு அமைப்பே போதுமானது.
பெரிய அளவில் வளர்க்கும் முயல் பண்ணைகளுக்கு, ஒன்று (அ) இரண்டு அடுக்குள்ள  கூண்டு அமைப்புடைய கூடாரங்கள் தேவை.
ஒவ்வொரு முயலுக்கும் போதுமான இடம் ஒதுக்க வேண்டும்.
முயல் வளர்க்கும் குடிலை அஸ்பெட்டாஸ், மரம், தென்னங்கீற்று கொண்டு  கூரை வேய வேண்டும்.
எந்த விதமான இரை தேடுபவை மற்றும் பறவைகள் உள்ளே நுழையாதவாறு கூண்டை அமைக்க வேண்டும்.
கூண்டை நுண்ணுயிர் நீக்கம் செய்து சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
கூண்டை எந்தவித நோய்த் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடர் தீவனம் உண்ணத் தருவதாக இருந்தால், காலையில் தரவேண்டும். வைக்கோலை மதியம் உண்ணத் தரவேண்டும்.
தண்ணீர் அளித்தல்
பால் தரும் பெண் முயல்களுக்கு அனைத்து நேரங்களிலும் தண்ணீர் பருக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
எப்பொழுதும் சுத்தமான நீரைத் தர வேண்டும்.
எப்பொழுதும் நீர் வைக்கும் கலனில் ஏதும் குப்பை, மண் படியாதவாறு, சுத்தம் செய்து தர வேண்டும்.
இனப்பெருக்க மேலாண்மை
முதல் முறை இனப்பெருக்கம் செய்ய 5-7 மாதங்கள் உடைய முயல்கள் ஏற்றவை.
காலை (அ) மாலை வேலைகளில் இனப்பெருக்கம் செய்யலாம்.
பெண் முயல்களை ஆண் முயல் உள்ள கூண்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
3- 4 முறை இனப்பெருக்கம் செய்யுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூண்டில் உள்ள வலைப் பெட்டியில் 25 நாளான கர்ப்பமுடைய முயலை அடைக்க வேண்டும்.
ஒரே இனத்துடன் முயலை இனப்பெருக்கம் செய்ய வைக்கக் கூடாது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு, நன்கு வளர்ந்த முயல்களை மாற்றி, புதிதாக ஒன்றை வைத்துப் பராமரிக்க வேண்டும்.
இளம் முயல்களை கவனித்தல்
5 வாரமுடைய முயல் குட்டிகளை வலைப் பெட்டியிலிருந்து எடுக்க வேண்டும்.
குட்டிகளை தினமும் ஆய்வு செய்து, நல்லவற்றை பராமரிக்கவும்
குட்டிகளின் படுக்கைகள் ஈரமாக இருந்தால், புதிதாக ஒன்றை மாற்ற வேண்டும்.
5 (அ) 6 வாரம் கழிந்த முயல் குட்டிகளை பால்குடி மறக்கச் செய்ய வேண்டும்.
உண்ணத் தரும் தீவனத்தில் ஏதும் மாற்றம் செய்யக் கூடாது.
நோய் தடுப்பு /கட்டுப்பாடு
முயல் கூண்டுகள், கூடாரங்கள், உபகரணங்கள், உணவு, தண்ணீர் எந்தவிதமான தொற்று இல்லாமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
முயல்கள் அதனுடைய கழிவுகள் மேல் படாதவாறு, உடனடியாக அகற்றி விடவும்.
அதிகளவில் முயல்களை கூண்டில் அடைப்பதையும் தவிர்க்கவும்.
சீரான முறையில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
நோய் தொற்று ஏதும் ஏற்படாதவாறு தடுப்பூசி / மருந்துகள் தரவும்.
நோய் தொற்று ஏற்பட்டு இறந்த முயல்களை எரித்து விடவும்.
வலைப்பெட்டியில் பயன்படுத்திய பின் உள்ள படுக்கையை எரித்து விடவேண்டும்.
உரோமம் எடுத்தல் /விற்பனை செய்தல்
5-6 செ. நீளமுடைய உரோமம் வரும்போது, உரோமம் எடுக்க வேண்டும்.
பால் குடி மறந்த  ஒரு வாரத்திற்கு பிறகு உள்ள இளம் முயல்களிலிருந்து உரோமம் எடுக்கலாம். தொடர்ந்து 10-11 வார இடைவெளி விட்டு உரோமம் எடுக்கவும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களின் கடும் குளிர் காலங்களில் உரோமம் எடுப்பதைத் தவிர்க்கவும்.
ஒரு தடவை உரோமத்தை தோலுக்கு அருகில் வரை வெட்டும் போது கவனமாக வெட்டி எடுக்க வேண்டும்.
உரோமம் எடுத்த பின் 15 நாட்களுக்கு, முயல்களை அதிக கவனமாக வைத்துக் கொள்ளவும்.
நல்ல தரமுடைய உரோமத்தை தரம்பிரித்து, சந்தைக்கு அனுப்பவும்.
15 நாட்களில் பிரசவிக்கும் நிலையில் உள்ள பெண் முயல்களிலிருந்து உரோமம் எடுப்பதைத் தவிர்க்கவும்.
ங்கோரா முயல்களுக்கான குடிலின் அளவுகள்
வ.எண்
விபரங்கள்
அளவுகள் (அடி)
நீளம்
அகலம்
உயரம்
1.
இனப்பெருக்கம் செய்யும் கூண்டு – ஆண் மற்றும் பெண் முயல்களுக்கு
2
2
1 ½
2.
தனியாக முயலை வைக்க கூண்டு
2
1 ½
1 ½
3.
முயல் குட்டிகளுக்கான கூண்டு
3 அடி (2+1)
1 ½
1 ½


அங்கோரா முயல்களுக்கான பரிந்துரைக்கப்படும் அடர்தீவன உணவு (%)

வ.எண்
விபரங்கள்
இளம்முயல்கள்
வளர்ந்த முயல்கள்
பால் தரும்பெண்முயல்கள்
ஆண்
பெண்
1.
மக்காச் சோளம்
15
15
15
20
2.
ராகி /சோளம்/கம்பு
15
15
15
15
3.
நெல் உமி/ கோதுமை உமி
33.5
38.5
33
24.5
4.
நிலக்கடலைப் புண்ணாக்கு
10
6
5
8
5.
சூரியகாந்தி புண்ணாக்கு
5
8
5
-
6.
சோயா
-
-
5
10
7.
குதிரை மசால்
20
16
20
20
8.
தாதுப்பொருட்கள் கலவை
1
1
1.5
2
9.
உப்பு
0.5
0.5
0.5
0.5
மொத்தம்
100
100
100
100


முயல்களுக்கான தீவனத் தேவை (கிராம்/நாள்)
வ.எண்
விபரங்கள்
அடர்தீவனம்
வைக்கோல்
கீரைகள் + காய்கறிகள்  / பழத்தோட்டங்களின் கழிவு
1.
இனத்தைப்பெருக்கும் முயல்கள்
280
80
தேவையான அளவு
2.
பால்குடி மறந்த முயல்கள் (7 -12 வாரங்கள்)
60
30
தேவையான அளவு
3.
வளரும் முயல்கள்           (13 – 24 வாரங்கள்)
90
30-40
தேவையான அளவு
4.
வளர்ந்த முயல்கள்              ( 24 வாரங்களுக்கு மேல்)
140
50-60
தேவையான அளவு


source: http://agritech.tnau.ac.in/ta/farm_enterprises/Farm%20enterprises_%20rabit%20farm_ta.html

முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு எதற்காக ?
குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது.
சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன்

Thursday

முயல் வளர்த்தால் முன்னேற்றம்

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும்