ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்
வீட்டுத் தோட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன்
மக்களின் ஆரோக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் வீட்டுத் தோட்டங்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன.வீட்டு முற்றத்தில், புழக் கடையில், மாடியில்
தோட்டம் அமைக்க வழிகாட்டி வருகிறார் ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி
ஒய்.ராஜகுமார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜகுமாரை ஒரு காலைப்
பொழுதில் சந்தித்தோம்.“தூத்துக்குடி மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநராக
பணியாற்றி ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். ஓய்வுக்கு பின்பு
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தி வருகிறேன்.