Showing posts with label தென்னை. Show all posts
Showing posts with label தென்னை. Show all posts

Wednesday

தென்னைக்கு நீர் மேலாண்மை

இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. விவசாயிகள் தென்னை மரங்களை சரிவர பராமரிப்பதில்லை. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம்.

Tuesday

தென்னை... பப்பாளி... வாழை... தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி..

 தென்னை... பப்பாளி... வாழை... தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி..

தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்,

வறண்ட கிணறுகள்... வாடாத தென்னைகள்... பலமூட்டும் பிளாஸ்டிக் கேன் சொட்டுநீர்!


வறண்ட கிணறுகள்... வாடாத தென்னைகள்...
பலமூட்டும் பிளாஸ்டிக் கேன் சொட்டுநீர்!
தமிழக விவசாயிகள் இப்படியரு வறட்சியைப் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. ஏரி, குளம் மட்டுமன்றி... கிணறு, குழாய்க்கிணறு என அனைத்து நீராதாரங்களும் வறண்டு கிடக்கின்றன.
பருவப்பயிர்களை நட்ட விவசாயிகள், வானத்தைப் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். தென்னை விவசாயிகளுக்கும் இதே கதைதான்.
இப்படிப்பட்ட இக்கட்டானச் சூழ்நிலையில, மழை கிடைக்கும் வரையிலான காலம் வரை தென்னையைக் காக்க, புதியநுட்பம் ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார், சேலம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பச்சமுத்து. அக்கம்பக்கத்துத் தென்னைகள் வாடிக்கிடக்கும் சூழலில், புதியநுட்பம் காரணமாக, இவருடைய தோட்டத்துத் தென்னைகள் பசுமைக் கட்டி நிற்கின்றன... படு தெம்பாக!
செல்லியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பச்சமுத்துவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 120 தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். இருந்த ஒரே கிணறும் வறண்டுவிட... தென்னை மரங்களை இழக்க விரும்பாத பச்சமுத்து, பிளாஸ்டிக் கேன்கள் மூலம் புதிய நுட்பத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, செழிப்பு குறையாமல், மரங்களைக் காத்து வருகிறார்.

ஆண்டுக்கு 400 காய்கள்...

ஆண்டுக்கு 400 காய்கள்...
இனிக்கும் இளநீர்...கொழிக்கும் மகசூல்...!

'தென்னை செழித்தால்... பண்ணை செழிக்கும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை உண்மையாக்கி, தனது வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும்! இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு!
இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், 'தென்னையில் பெரிதாக லாபம் இல்லை’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக இருக்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலத்தான் தேங்காயின் விலை நிரந்தரமாக 2 ரூபாய் 3 ரூபாய் என்றே நீடித்துக் கொண்டிருக்கிறது! ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரி என்கிற வகையில்தான் பலரும் தென்னை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

Sunday

தரமான நாற்று... ஏமாற்றாத மகசூல்... அழைப்பு விடுக்கும் அரசுப் பண்ணை..!

தரமான நாற்று... ஏமாற்றாத மகசூல்... அழைப்பு விடுக்கும் அரசுப் பண்ணை..!

பயிருக்கு உயிர்நாடி, விதைதான். தரமான விதையையோ, நாற்றையோ உபயோகப்படுத்தினால்தான், விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும். இந்த எதார்த்தம் தெரிந்திருந்தாலும்... சில ஏமாற்றுக்கார நாற்றுப் பண்ணையாளர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, வீரியமில்லாத விதைகள், தரமில்லாத நாற்றுகளை வாங்கி, ஏமாந்து விடுகிறார்கள், விவசாயிகள் பலரும். அதேபோல பலருக்கு எந்தப் பண்ணையில் தரமான நாற்று கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதே சிரமமான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் ஒரு நாற்றுப் பண்ணை, தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது... என்பதைத் தெரிந்து கொள்வது... நல்லதுதானே!
வேலூர்-சென்னை சாலையில் இருபத்தைந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, விசாரம் எனப்படும் கிராமம்.