Showing posts with label அங்கக வேளாண்மை. Show all posts
Showing posts with label அங்கக வேளாண்மை. Show all posts

Wednesday

மக்கு எரு தொழில்நுட்பம்


மட்கு உரம் தயாரித்தல்



1.மட்கு உரம் ஒரு மேலோட்டம்

2.பயிர் குப்பையை மட்கு உரமாக்குதல்
3.கரும்பு சருகை மட்கு உரமாக்குதல்
4. கோழிப் பண்ணைக் கழிவுகளை மட்கு உர தொழில்நுட்பம் மூலம் மதிப்புக் கூட்டுதல்



1.மட்கு உரமாக்குதல் - ஒரு மேலோட்டம்



இயற்கை முறையில் அங்ககப்பொருள்களை நுண்ணுயிரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் மட்கச் செய்தல் அல்லது அழுகச் செய்தே மட்கு உரமாகும். அங்ககப் பொருட்களான பயிர்க்குப்பைகள், விலங்குகளின் கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள், ஆகியன மட்கச் செய்தபின் மண்ணில் உரமிடுவதற்கு ஏற்ற தகுதியைப் பெறுகிறது. ம

Monday

மண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள்

நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் மண்ணின் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் சீர்கெட்டு வருகிறது. பொதுவாக மண்ணின் வளம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மண்ணின் தன்மையைப் பொறுத்து மண்வளம் இடத்திற்கு இடம் மாறுபடும். பயிர்கள் எடுத்துக் கொள்ளும் சத்துக்களின் அளவுகளை அறிந்து அதற்கேற்ப அங்கக உரங்களை இரசாயன உரங்களுடன் சேர்த்து நிலத்தில் இட்டால்தான் மண் வளம் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.