Showing posts with label மல்லிகை சாகுபடி. Show all posts
Showing posts with label மல்லிகை சாகுபடி. Show all posts

Monday

செண்டுமல்லி 77 ஆயிரம் ரூபாய்…குண்டுமல்லி 34 ஆயிரம் ரூபாய்…

 மகத்தான லாபம் கொடுக்கும் மலர்கள் 

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

விவசாயத்தில் ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் எனக் கிடைக்குமாறு பிரித்துக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று விவசாய வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி வருமானம் தரும் பயிர்களில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்றவை தினசரி வருமானத்துக்கு ஏற்ற பயிர்களாக இருந்தாலும், அவற்றில் முதலிடம் வகிப்பவை பூக்கள்தான்!

Wednesday

மணக்கும் மல்லிகை... மயக்கும் வருமானம்


கரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறதுஎன்கிறார் மதுரை சத்திரப்பட்டி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மல்லிகை விவசாயி ரெங்கநாதன். பி.எஸ்சி., இயற்பியல் படித்த இவர், மணக்கும் மல்லிகையின் மயக்கும் வருமானம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயி

படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ராமேஸ்வரம் மல்லி
குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.

குண்டு மல்லிகையின் எதிர்காலம்

மதுரை குண்டு மல்லிகையின் சிறப்பினை ""மணம் தரும் மல்லிகை பணமும் தரவல்லது'' என்று புகழ்ந்து வந்தது உண்மை. ஏர்போர்ட், பூக்கடைகள் போன்ற எந்த இடங்களுக்கு சென்றாலும் மல்லிகையின் நறுமணம் வீசிக் கொண்டிருக்கும். மல்லிகைப்பூ சாகுபடியானது ஒரு கடுமையான பணியாகும். இதனால் விவசாயிகள் சாகுபடியில் ஒரு ஏக்கர் அல்லது 1-1/2 ஏக்கர் இந்த பரப்பிற்கு அதிகமாக சாகுபடி செய்வதில்லை. புதிதாக மல்லிகை தோட்டத்தை துவங்கினால் அது அந்த இடத்தில் பத்து வருடங்கள் இருக்கும்.

பசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...

பசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...
மல்லிகை சாகுபடிக்கு கை கொடுக்கும் 'ஃபாகர்’...
பனிக்காலத்திலும் பணம் பார்க்கலாம்...

'ஊரெல்லாம் செய்ற மாதிரிதான் நானும் விவசாயம் செய்றேன். ஆனா, வருமானம் மட்டும் வர மாட்டேங்குதே’ என்று சொல்லிக்கொண்டிருக்காமல்... 'இருப்பதை வைத்து வருமானம் பார்க்கும் வழி என்ன?’ என யோசித்து, புதுமைகளைப் புகுத்தி சாதனை படைக்கும் விவசாயிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்தவகையில், வழக்கமான விவசாய முறையிலிருந்து கொஞ்சம் மாற்றி சிந்தித்ததால்... மணமான வருமானம் பார்த்து வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்.