இணையற்ற இருங்கு சோளம் !
பராமரிப்பும் வேணாம்... தண்ணீரும் வேணாம்...மானாவாரி மகசூல்!
பொய்த்துப்போன பருவமழை, கானல் நீரான காவிரி, மின்னலாய் வந்து மறையும் மின்சாரம்... என பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கிறது தமிழக விவசாயம். இவ்வளவு இன்னலுக்கு இடையிலும் தண்ணீரையும், உரங்களையும் கொட்டி விளைய வைக்கப்படும் நெல்லுக்கு... கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளைக்கூட, கிலோ 40 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட ஐந்து மாத உழைப்பையும், சில ஆயிரங்களையும் கொட்டி விளையவைக்கும் நெல்லுக்கு அதிகபட்சமாக கிலோவுக்கு 11 ரூபாய்தான் கிடைக்கிறது. முதலுக்கே மோசமாகி, கடைசியில் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது!
''இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் நாம்தான். விதைப்புக்கும், அறுவடைக்கும் இடையே வேலையே வைக்காத சிறுதானியங்களையும், மண்ணுக்கேற்ற ரகங்கள்... மழையை அதிகம் எதிர்பார்க்காத ரகங்கள், மானவாரி ரகங்கள் என பாரம்பரியம் மிக்க ரகங்களையெல்லாம்