Showing posts with label ஒருங்கிணைந்தப் பண்ணை. Show all posts
Showing posts with label ஒருங்கிணைந்தப் பண்ணை. Show all posts

Saturday

ஆடு, மாடு, கோழி இருந்தால் மாதம் ரூ. 30 ஆயிரம் வருமானம்


கணேசன்

இரண்டரை ஏக்கர் நிலம், நாட்டு மாடு இரண்டு, வெள்ளாடு ஐந்து, நாட்டுக் கோழி நூறு ஆகியவற்றுடன் உழைப்பை மூலதனமாகக்கொண்டு மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் விவசாயி கணேசன்.
ஒரத்தநாடு அருகிலுள்ள சோழகன்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே, அவருடைய அப்பா இறந்துவிட்டதால் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நிலத்தில் இறங்கினார். தொடக்கத்தில் ரசாயன உரங்களைப் போட்டுத்தான் அவரும் விவசாயம் பார்த்தார். ஆனால், கடந்த 12 வருடங்களாக இவரது நிலத்தில் ஒரு துளி ரசாயன உரம்கூட விழவில்லை; முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மைதான்.
ஏன் இயற்கை விவசாயம்?
அது எப்படிச் சாத்தியமானது? விளக்குகிறார் கணேசன். “வயல்களில் பூச்சிக்கொல்லி அடிக்குறப்ப புழு - பூச்சிக செத்து மடியுறத கண்ணால பார்த்திருக்கேன். பூச்சி மருந்து அடிச்சுட்டு வந்து ராத்திரி படுத்தோம்னா உடம்பு தீயா எரியும். பொணம் மாதிரித்தான் கெடப்பேன். ஒரு கட்டத்துல, ஏன் இப்படி மருத்தைக் கொட்டி மண்ணை நஞ்சாக்கணும்னு யோசிச்சேன். அப்பலருந்து ரசாயன உரங்களைத் தொடுறதில்லை.

Monday

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...
நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...
விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.

Wednesday

உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை

உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை

மதுரை சமயநல்லூரில் இருந்து தோடனேரியை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மூலக்குறிச்சி. மண்ணுக்கு வெள்ளையடித்தது போல், "பளிச்' என்று இருந்தது. விளைச்சலுக்கு உதவாது என்று "பிளாட்' ஆக மாற இருந்த நிலத்தை வாங்கி, இன்று விளைநிலமாக மாற்றிக் காட்டியுள்ளார் விவசாயி வி.சி.வெள்ளைச்சாமி.
புல் கூட முளைக்காத நிலத்தில், இன்று மரங்கள் வளர்ந்து நிற்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
பழைய இரும்புத் தொழில் தான் என் வியாபாரம். வயது அறுபதைத் தாண்டிவிட்டது. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டேன். இனி மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து தான் இந்த இடத்தை வாங்கினேன்.
நிலம் வாங்கிய போதே பள்ளமான இடத்தை ஆய்வு செய்து, அதில் மீன்வளர்க்க ஆசைப்பட்டேன். நிலத்தை வாங்கி ஆசையாய் கொய்யா, சப்போட்டா, மா மரக்கன்றுகளை நட்டேன். நட்டதோடு சரி, பாதி செத்துவிட்டது. மீதியிருப்பதும் வைத்த கடனுக்காக நின்றது. நிலம் வாங்கிய போது இங்கு புல், பூண்டு வளரவில்லை. காக்கை, குருவி கூட பறக்கவில்லை.
"அகத்தி மரம் வளர்த்துப் பார்' என்றார்கள். சரியென்று அகத்தி கன்றுகளை நட்டேன். அதன் காற்றை சுவாசித்து சப்போட்டாவும், கொய்யாவும் கூடவே வளர்ந்தன. மரங்கள் மெல்ல வளர்ந்தாலும் பரவாயில்லை என, ரசாயன உரம் பக்கமே போகவில்லை. மாட்டுச்சாணமும், ஆட்டுபுழுக்கையும் தான் உரமாக தந்தேன். மெல்ல மெல்ல புற்கள் வளர்ந்தன. 20 சென்ட் பள்ளமான இடத்தில் இன்னும் சற்று ஆழம் தோண்டினேன். கடந்தாண்டு அக்டோபரில் பெய்த இரண்டு நாட்கள் மழையில், 20 சென்ட் நிலத்திலும் தண்ணீர் நிறைந்தது. கட்லா, சி.சி., மீன்களை வாங்கி விட்டேன்.
அவ்வப்போது பெய்யும் சிறுமழையால் இன்னமும் தண்ணீர் பாதியளவு உள்ளது. இதுவரை 100 கிலோ மீன்களை எடுத்துவிட்டேன். இன்னமும் 150 கிலோ மீன்கள் உள்ளன. சுத்தமான மழைநீரில் மீன்கள் கொழுகொழுவென்று வளர்வதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
மூன்றரை ஏக்கரில் சப்போட்டா, கொய்யா, நெல்லி, நாவலுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். பத்தடி நீள, அகல கிணற்று நீர் தான் ஆதாரம். புல்லைத் தாண்டி நெல் விளைந்தது. முதலாண்டில் ஏக்கருக்கு 
5 டன், அடுத்தாண்டு 12 டன், மூன்றாமாண்டு 20 டன் எடுத்தேன். இந்தமுறை மழைஇல்லாததால் வெறுமனே உழுது போட்டிருக்கேன். மழை பெய்தால், மண்ணாவது நல்ல உறிஞ்சும். காய்கறி, பந்தல் காய்கள் பயிரிடுவதற்காக, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தயாராக வைத்துள்ளேன்.
அஞ்சு ஆட்டுக்குட்டிகள் வாங்கி விட்டேன். இப்போது அஞ்சும் அடுத்த முறை குட்டிகளை உருவாக்கி விட்டது. அவற்றுக்கு தனியாக மரக்கொட்டில் அமைத்துள்ளேன். ஆட்டின் கோமியமும், புழுக்கையும் ஒன்றாக கலந்தால் நல்ல உரம் என்பதால், கொட்டிலின் கீழே சிமென்ட் சிலாப் அமைத்து, உரத்தை சேகரிக்கிறேன். மாட்டுக்கு தனியிடம் அமைத்து, மாட்டுச்சாணம் வாங்கியும் மண்புழு உரம் தயாரிக்கிறேன்.
என் நிலத்தில் இருந்து ஒரு சொட்டு மழைநீரை வெளியே விட மாட்டேன். அதற்கேற்ப ஆங்காங்கே வரப்பு வெட்டி மீன்குட்டையில் விழுமாறு செய்துள்ளேன். ஒற்றை ஈச்சமரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவி கூடு கட்டியது. இப்போது 30 குருவிகள் வரை இங்கேயே சுற்றித் திரிகின்றன.
நிலமென்றால் புல், பூண்டு, பாம்பு, பூச்சி, தவளை, மரம், செடி, கொடி, பறவைகளோடு மனிதர்களும் இணைந்திருக்க வேண்டும். மூன்றரை ஏக்கர் தரிசு நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றி, சாதித்துவிட்டேன். சுற்றிலும் வேலியும், வேலியையொட்டி சவுக்கு கன்றுகளும் நட்டுள்ளேன். இன்னமும் ஒருஏக்கர் நிலம் தரிசாகத் தான் உள்ளது. இதை இனிமேல் தான் புல் விளை விக்க முயற்சி செய்ய வேண்டும், என்றார்.
அனுபவம் பேச: 94431 49166.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Source:http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21402&ncat=7


ஒருங்கிணைந்த பண்ணைய முறையே வளங்குன்றா வேளாண்மைக்கு உதவும்

தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் ஒருங்கிணைந்த பண்ணைய உத்தி தான் லாபம் தரும். இதற்கு தோட்டக்கலைப்பயிர் சாகுபடியுடன் உப தொழில்களாக மண்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஆடு, மாடு, முயல், பன்றி, பட்டுப்புழு, வாத்து, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் காடுகள், சாண எரிவாயு கலன், சூரிய ஒளி ஆதாரங்கள்

Friday

ஒருங்கிணைந்தப் பண்ணையம் - நெல், தென்னை, ஆடு, கோழி, புறா, முயல், வாத்து.

புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''

Monday

பசுமை நாயகன் - ஒருங்கிணைந்த பண்ணை

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசு தரும் மானியத்தை விடவும், தொலைத்தொடர்பு துறைக்கு அரசு போடும் திட்டங்களை விடவும்விவசாயத் துறைக்கு மானியம் கிடைப்பது மிக மிகக் குறைவு. அப்படி அரசு அரிதாகப்போடும் திட்டங்களும், மானியங்களும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச்சேருகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்படித் தப்பித்தவறி அரசியல்வாதிகளின் கவனக்குறைவால் அவர்களின் பாக்கெட்டுக்குப் போகாமல் விவசாயிகளுக்குப் போகிறது என்றாலும் ஊரில் உள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் பணம் உள்ள விவசாயிகளுக்குத்தான் போய்ச்சேர்கிறது. இப்படி ஏழை விவசாயிகளுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இடைவெளியைப் பாலம்போல செயல்பட்டு  இணைத்துக்கொண்டிருக்கிறது புதுவையில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அபிவிருத்தி மையம் என்ற தனியார் அமைப்பு. ஏழை விவசாயிகளுக்குக் கடன் வாங்கித்தருவது, புதிய திட்டங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்துவது என முழுமையாக விவசாயிகளுக்கென இயங்கிக்கொண்டு வருகிறது இந்த மையம்.

Wednesday

அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !

ஆடு +தென்னை +மா
அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !


பறக்கப் பறக்கத்தான் இறகுகள் பலப்படும். உழைக்க உழைக்கத்தான் உயர்வுகள் உனதாகும்'
அந்த ஆட்டுப் பண்ணையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை வாசகம், அங்கே நுழையும் அனைவரையும் ஈர்க்கிறது. பண்ணையின் உரிமையாளர்களான வாசுதேவன்-கவிதா தம்பதி, அந்த வாசகங்களுக்கு உதாரணமாகவும் நின்று கொண்டிருப்பது, அனைவரையும் வியக்க வைக்கிறது!

Saturday

நூறு ஏக்கருக்கு... இரண்டே வேலையாள்..

ஏக்கருக்கு 42 மரங்கள்.

இடுபொருட்களே தேவையில்லை.
களையெடுக்கும் கால்நடைகள்.

காவேரிராஜபுரம்...  அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் பெரிய அளவு இல்லை. அதேகதைதான் இங்குள்ள பெரும்பாலான மாந்தோட்டங்களிலும். ஆனால், 'லியோ இயற்கை வேளாண் பண்ணை'யில் மட்டும் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காரணம்... ''முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே நான் பராமரிக்கறதுதாங்க'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார், பண்ணைக்குச் சொந்தக்காரர்களில் ஒருவரான பாரதி!

Friday

9 ஏக்கர்...8 லட்சம்....

9 ஏக்கர்...8 லட்சம்.... 
உலகுக்கே பாடம் சொல்லும் ஒருங்கிணந்த பண்ணை ! 

விவசாயம்+ ஆடு, மாடு, 

கோழி, மற்றும் மீன் வளர்ப்பு.
பால் நேரடி விற்பனை.  
மதிப்புக்கூட்டி விற்பதால் கூடுதல் வருமானம்.

''நெல் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கணவன்-மனைவி மாதிரி. இதுல ஏதாவது ஒண்ணு இல்லைனாலும்...

உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையம்


உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையம் !

மகசூல்
காசி.வேம்பையன்
2 ஏக்கர் காய்கறி = 25 ஏக்கர் நெல்
உற்சாக வருமானம் தரும், ஒருங்கிணைந்த (இயற்கை) பண்ணையம் !

மேட்டுப்பாத்தியில் காய்கறி வளர்ப்பு...

எப்போதும் ஒரே விலை.
ஆடு,மாடு, கோழி, மீன் வளர்ப்பிலும் லாபம்

Tuesday

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம் !



அசத்தல்
பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!
ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!
கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ...
- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.