Showing posts with label வெள்ளரி. Show all posts
Showing posts with label வெள்ளரி. Show all posts

Sunday

வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! 60 சென்ட்... 3 மாதங்கள்... 47 ஆயிரம்!

வெகுமதி கொடுக்கும் வெள்ளரி!
60 சென்ட்... 3 மாதங்கள்... 47 ஆயிரம்!
சுட்டெரிக்கும் கோடை வெயில் காலங்களில் பகல் நேரப் பேருந்துப் பயணங்களை குளிர்ச்சியாக மாற்றுவது, ஜன்னல் ஓரங்களில் விற்கப்படும் 'நாட்டு வெள்ளரிக்காய்’ பிஞ்சுகள்தான். பயணிகளைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையோடு சாகுபடி செய்யும் விவசாயிகளின் மனதையும் வருமானத்தால் குளிர்ச்சியடைய வைக்கிறது, வெள்ளரி. இந்த சூட்சமம் தெரிந்த பலரும் கோடை காலத்தில் அறுவடைக்கு வருவது போல வெள்ளரியை சாகுபடி செய்வது வழக்கம்.

Tuesday

25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்... வெளிநாடு போகும் வெள்ளரி..!


25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்...
வெளிநாடு போகும் வெள்ளரி..!
வியர்வை சிந்தி விளைச்சல் எடுக்கும் விவசாயிக்கு, விலை நிர்ணயம் செய்யும் உரிமை... நாடு அடிமைப்பட்டுக்கிடந்த வெள்ளைக்காரன் காலத்தில் மட்டுமல்ல... இன்றைய சுதந்திர பூமியிலும் இல்லை என்கிற ஆதங்கத்தை, இதைவிட அழகாகச் சொல்ல முடியாது.
என்றாலும், அன்று தொடங்கி... இன்று வரை சிலபல யுக்திகளைக் கையாளும் விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு நிரந்தரமான விலையைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்து, நேரடி விற்பனை மூலம் நிரந்தர வருமானம் ஈட்டி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், ஜே. கிருஷ்ணாபுரம், மோகன் செல்லக்குமார்.
கிராமத்துக்கு வெளியே, வளைந்து நெளிந்து செல்லும் தார்சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன, தென்னைமரங்கள். அவற்றுக்கு இடையே 'பளிச்' என காட்சி தரும் பண்ணை வீடுகளை ரசித்துக் கொண்டே சென்றால்... மோகன் செல்லக்குமாரின் பசுமைக் குடில் வந்துவிடுகிறது.