Wednesday

Bharathidasan kavidai in tamil

நான் ஒருமாதிரி அல்ல
ஒரு "மாதிரி" யாக இருக்க விரும்புபவன்

தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவனுக்கோர் குணமுண்டு!

தமிழ் உயர்ந்தாள் தமிழ்நாடு தாணுயரும் -பாரதிதாசன்

தமிழ் கவிதைகள்

அடுத்த வேளை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...
நீயும் நானும் ஒன்று!

=============================================================

தமிழனாய் இருந்துக்கொண்டு தாய்மொழியை மதிக்காதவர்களையும்
இன உணர்வு இல்லாதவர்களையும் கண்டு
உன் உள்ளம் கொந்தளித்தால்...
நீயும் நானும் ஒன்று!

=============================================

சதையை நம்பியும் முட்டாள் ரசிகர்களை நம்பியும்
எடுக்கப்படும் படங்களைக் கண்டு
உன்னால் குமுற முடிந்தால்..
நீயும் நானும் ஒன்று!

=============================

இந்திய மக்களை மேலும் மேலும் மூடர்களாக்கி
அந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கி சம்பாதிக்கும் அரசியல்வாதிகளையும்
அந்நிய நாட்டு நிறுவனங்களையும்
உள்நாட்டு தொலைக்காட்சிகளையும்
விளம்பரங்கங்களையும்
கண்டு உன்னால் கொதிக்க முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!

=============================

வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!

======================================================

குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்
நீயும் நானும் ஒன்று!

==========================================

" மக்களுக்காக சாதனைகளை செய்ய விரும்புகிறோம். அதை கண்ணாடி பலகை மீது விளக்கெண்ணையை தடவி அதில் செல்வது போல அல்லாமல் கல், மண், போன்ற இடையூறுகள் உள்ள பாதையில் பயணம் செய்யவே விரும்புகிறேன் "

=========================================

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலை மீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்! எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்! எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான் இசை தெலுங்கானது பாட்டினிலே! இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே! திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே! தீந்தமிழ் எரியுது தீயினிலே ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்! உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்! நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்! நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்! உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன? ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன? மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன? மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?
==========================================

ஆகாயத்தில் வானவில்லுக்கு அடித்த வர்ணம் காய்ந்து விட்டதா என்று தொட்டுப் பார்க்க எம் விரல் நீள்வதில்லை... 
ஏழையின் க‌ண்ணீரைத் துடைத்துக் காய‌வைக்க‌த்தான் 
ப‌த்து விர‌ல்க‌ளும் ப‌ட‌ப‌ட‌க்கின்ற‌ன‌... 
நெருப்பாய் கிள‌ர்வோம்... 
நிதான‌மாய் எரிவோம்...!! 
அசோக‌ச் ச‌க்க‌ரம் இந்த‌த் தேச‌த்தின் அச்சாணிக‌ளை ந‌சுக்கும் முன் 
நாம் அவ‌ர்க‌ளை காப்போம்... 
நீலவானின் நீள அகலங்களை ஒரு நட்சத்திரம் 
மூலையிலிருந்து முழம் போடுவது போலத்தான் 
நாம் எடுத்துள்ள பணியும்... 
ஆனால் இதுவே ஒரு நாள் 
சூரியனாக உலகிற்கு ஆற்றல் வழங்கப் போகிறது...

==========================

இங்குள்ள கவிதைகள் எனது சொந்தப் படைப்பில்லை...எனது கருத்துகளை ஒத்தப் படைப்புகளை இங்கே பதிவுச் செய்துள்ளேன்...