கலங்க விடாத கடலை....அள்ளிக்கொடுக்கும் ஆமணக்கு....
மானாவாரியில் மகத்தான மகசூல் கூட்டணி !
''மானாவாரி வெள்ளாமையில எள், உளுந்து, நிலக்கடலைனு தனித்தனியா சாகுபடி செய்யாம... ஊடுபயிரா ஆமணக்கையும் சேர்த்து சாகுபடி செஞ்சா... அருமையான விளைச்சல் பார்க்கலாம்'' என்று தன்னுடைய அனுபவத்தை சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்கிறார், முன்னாள் ஆசிரியரும்... எந்நாளும் விவசாயியுமான கோதண்டராமன்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், இயற்கை வழி விவசாயத்தில் மானாவாரியாக கடலை விதைத்து, ஊடுபயிராக ஆமணக்கையும் பயிர் செய்திருக்கிறார். நிலக்கடலை அறுவடைப் பணியில் மும்மரமாக இருந்த நேரத்தில்தான் நாம் கோதண்டராமனைச் சந்தித்தோம்.