மலைச்சரிவுகளில் மட்டுமே நல்ல விளைச்சல் தரக்கூடிய அன்னாசிப் பயிரை, தட்ப வெப்பநிலை இயைந்து வரும் சமவெளிப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், ஆற்றுப்படுகை கிராமங்களில் ஒட்டுமொத்தமாக நெல் சாகுபடி செய்வது போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்கவே அன்னாசியை சாகுபடி செய்து வருகிறார்கள்!
தலைமுறைகளைக் கடந்த அன்னாசி சாகுபடி!
தக்கலையிலிருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையில் மலவிளையைத் தாண்டியதும் வருகிறது, கொட்டூர் எனப்படும் மலையடிவார கிராமம். ஊருக்குள் நுழையும் போதே அன்னாசிப் பழ வாசனை மூக்கைத் துளைக்கிறது. அன்னாசிக்கு ஊடாகத்தான் வீடுகளை எழுப்பி இருக்கிறார்களோ.. என நினைக்கும் வகையில், அன்னாசித் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. கிராமம்! தலைமுறைகளைக் கடந்து அன்னாசி சாகுபடியைக் கொண்டாடி வருகிறார்கள், மக்கள். காரணம் , அது கொடுக்கும்