கோவையில்
உள்ள தமிழக விவசாய பல்கலைக்கழகம்
இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்று.
இந்த பல்லைக்கழகத்தின்கீழ் 10 கல்லூரிகள், 34 விவசாய ஆய்வு நிறுவனங்கள்,
15 விவசாய அறிவியல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விவசாய
படிப்பில் சேர அடிப்படை தகுதி:
பிளஸ்
2 தேர்வில் - இயற்பியல்- வேதியியல்- கணிதம் அல்லது தாவரவியல்
அல்லது விலங்கியல்- விருப்பப்பாடம் ஆகிய நான்கு பாடங்களில்
ஓ.சி., மற்றும்
பி.சி., மாணவர்கள் குறைந்தபட்சம்
50 சதவீத மதிப்பெண்களும் எம்.பி.சி.,
மாணவர்கள் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களும் எடுத்திருக்க
வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள்
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள
படிப்புகள்
- பி.எஸ்சி., அக்ரிகல்சர்
- பி.எஸ்., அக்ரி பிசினஸ்
மேனேஜ்மென்ட்
- பி.டெக்., பயோடெக்னாலஜி
- பி.டெக்., ஹார்டிகல்சர்
- பி.டெக்., புட் புராசஸ்
டெக்னாலஜி
- பி.டெக்., எனர்ஜி அண்டு
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
- பி.டெக்., பயோஇன்பர்மேட்டிக்ஸ்
- பி.டெக்., அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன்
டெக்னாலஜி
கீழ்க்கண்ட
விவசாய கல்லூரிகளில் பி.எஸ்சி., அக்ரிகல்சர்
படிப்பு உள்ளது.
- மதுரை
விவசாய கல்லூரி
- கிள்ளிகுளம்
விவசாய கல்லூரி
- திருச்சி
அன்பில் தர்மலிங்கம் விவசாய கல்லூரி
- காரைக்கால்
ஜவஹர்லால் நேரு விவசாய கல்லூரி
- பொள்ளாச்சி
வானவராயர் விவசாய கல்லூரி
- பெரம்பலூர்
தந்தை ரோவர் விவசாய கல்லூரி
- வேலூர்
ஆதிபராசக்தி விவசாய கல்லூரி
தமிழகத்தில்
உள்ள பிற விவசாய கல்வி
நிறுவனங்களும் படிப்புகளும்
- பெரியகுளம்
தோட்டக்கலை கல்லூரி- பி.எஸ்சி., ஹார்டிகல்சர்
- மேட்டுப்பாளையம்
வனவியல் கல்லூரி- பி.எஸ்சி., பாரஸ்டரி
- குமுளூர்
அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் கல்லூரி - பி.எஸ்சி., அக்ரிகல்சுரல்
இன்ஜினியரிங்
- மதுரை
ஹோம்சயின்ஸ் கல்லூரி - பி.எஸ்சி., ஹோம்
சயின்ஸ்
- வேலூர்
ஆதிபராசக்தி விவசாய கல்லூரி - பி.எஸ்சி., ஹார்டிகல்சர்
Source: http://result.kalvimalar.com/tamil/news-details.asp?id=1348&cat=8
No comments:
Post a Comment