Wednesday

கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டும் தேனி விவசாயி


கோகோ தோட்டத்தில் கே.வி.காமராஜ்

தேனி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போதிய மழையில்லாமல் தென்னை மரங்கள் கருகியது. இதன் காரணமாக தென்னை விவசாயத்தின் பரப்பளவு சுருங்கி கொண்டு வந்தது. லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை கூடுதல் விலை கொடுத்து வாங்கி நீர் பாய்ச்ச முடியாமல் சில விவசாயிகள் மரங்களை அழித்து விட்டு மாற்று விவசாயத்தில் ஈடுபட்டனர்.


இன்னும் சிலர் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து விட்டனர். இந்த நிலையில் பெரியகுளம் அருகே கெங்குவார் பட்டியை சேர்ந்த விவசாயி கே.வி.காமராஜ் இவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் தென்னந்தோப்பில் கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார். இது குறித்து ‘தி இந்து’விடம் விவசாயி காமராஜ் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு வந்தது. என் தோட்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது மிகவும் வேதனையடைந்தேன். அந்த நேரத்தில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் என்னை சந்தித்து தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்ய கோரினர். முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர்.

ஆண்டு முழுவதும் வருமானம் தரும் மரத் தோட்டம்: சாதிக்கும் இரண்டலப்பாறை விவசாயி



“பெத்த பிள்ளை கைவிட்டாலும், வைச்ச பிள்ளை கைவிடாது, ‘’ என வழக்குச் சொல்லாக சொல்வார்கள் நம் முன்னோர்கள். ஒருவர் மரம் வளர்த்தால், அந்த மரம் அவரது வாழ்வின் இறுதிக் காலம் வரை உயிர் மூச்சாக, வாழ்வதாரமாக இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் திண்டுக்கல் விவசாயி இரண்டலப்பாறை ஏ.அமலதாஸ் வளர்க்கும் மரங்கள்தான்.
அமலதாஸுக்குச் சொந்தமான 6½ ஏக்கர் விவசாயத் தோட்டம், இரண்டலப்பாறையில் உள்ளது. இவரது தோட்டத்தில் மற்ற விவசாயிகளைப் போல் காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட குறுகியகால பயிர்களைப் பயிரிடவில்லை. தோட்டம் முழுவதும் வெறும் தென்னை, கொய்யா, தேக்கு, சப்போட்டா, பலா, மா, எலுமிச்சை மரங்களை நட்டு வைத்துள்ளார்.

மல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயி

படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ராமேஸ்வரம் மல்லி
குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.