Saturday

மைசூர் மல்லி: மன்னர்களுக்கு மட்டுமல்ல- நம் நெல் அறிவோம்


கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு மடங்கு மகசூலை தருகிறது.


மைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும்.

Wednesday

பணம் குவிக்கும் மலைவேம்பு

ரங்களின் பலன்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்போல் நீண்டுகொண்டே போகும். சாதாரண பென்சில் முதல் மிகப்பெரிய கப்பல்களைக் கட்டுவது வரை மரங்களின் பயன், பலன் ஏராளம்... ஏராளம்…
மரம் தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்த மனிதன் உள்பட பிற விலங்கினங்களையும் வளர்க்கிறது. கண்களை சற்றே அகலமாக விரித்துப் பார்த்தால், நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை விதமான மரப் பயன்கள். குடியிருக்க வீடு கட்ட, வீட்டை அடிகூட்ட, பர்னிச்சர்கள் செய்ய, வேளாண் கருவிகளுக்கு, மின்சாரப் பயன்கள், கைத்தறி நெசவு கருவி,
தண்டவாளங்களுக்கு சிலீப்பர் கட்டை, மீன்பிடிப் படகு கட்ட, விளையாட்டுக் கருவிகள் செய்ய, வார்ப்பட அச்சுகள் செய்ய, குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்ய என மரங்களின் பன்முகப் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பன்முகப் பயன்பாட்டில் நவீனகால பயன்பாடான ஒட்டுப்பலகை எனும் பிளைவுட், மிக நீண்டகாலமாக பயன்பட்டு வரும் காகிதம், விறகுகளை எரிபொருளாகப் பயன்படுத்தி உண்டாக்கும் மின்சாரம் போன்றவையும் உண்டு.

பீ.பி.,உயர் ரத்த அழுத்தம் குறைக்கபூண்டு போதும்

பழங்காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது, நமது பாட்டி வைத்தியம். பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனம் இனி மறைந்து விடும். இன்றைக்கு வினியோகிக்கப்படும், உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட, அதிக பலனளிக்கக் கூடியது பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் பல கோடி பேர் மிக சாதாரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் ரத்த அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை, பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடந்த பூண்டு குறித்த இந்த விரிவான ஆராய்ச்சி, சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது.

Source : dinamalar

அலங்கார மீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்


மீன் வளர்க்கவும், மீன் பிடிக்கவும், பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும், பயிற்சி, கடனுதவி, மானியம் வழங்கி வந்த இந்திய அரசின் ""கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்'' இன்று அலங்கார மீன் வளர்க்கவும் மார்க்கெட் செய்யவும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறது.

கொடி அவரையில் கோடி லாபம்


மலைப்பிரதேசங்களில் காப்பி, தேயிலை, ஏலக்காய் போன்றவற்றை பயிரிட்டால் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்ற கண்ணோட்டம் விவசாயிகளிடம் இருந்தது. அது படிப்படியாக மாறி வருகிறது. தற்போது மண்ணின் தன்மைக்கு ஏற்ப புதுப்புது ரகங்களை பயிரிட்டு மலை விவசாயிகள் சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் காப்பி, ஏலக்காய் விவசாயத்தை அடுத்து தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்துள்ள காரட், பீன்ஸ், நூக்கல், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் வகைகள் விளைவிக்கின்றனர். இவை விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டித்தருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, தென்மலை பகுதிகளில் சவ் சவ்வை அடுத்து கொடி அவரை விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கொத்துக்கொத்தாக... நீளமாக காய்க்கும் மலைக்கொடி அவரையின் ருசியே அலாதி தான்.
தென்மலை விவசாயி வி.எஸ்.பழனியாண்டி கூறியதாவது: ஆண்டு தோறும் நவம்பர் இறுதி வாரம் அல்லது டிசம்பர் துவக்கத்தில் கொடி அவரை பயிரிடுவோம். மூன்று மாதங்களில் காய்கள் பறிக்கலாம். இங்குள்ள மண்ணின் காரத்தன்மைக்கு சவ்சவ் நன்றாக விளையும். ஆனால் கொடி அவரை விளையுமா என துவக்கத்தில் சந்தேகம் இருந்தது.
எனினும் ஒரு ஏக்கரில் பயிரிட்டதில் நன்றாக காய்த்தது. ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் கிடைத்தது. டீசல் பம்புசெட் மூலம் கிணற்று நீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சுகிறேன். உரம், பூச்சிக்கொல்லி மருந்து, கூலி ஆட்கள், டீசல் செலவை கணக்கிட்டால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே லாபம் கிடைக்கிறது.
தற்போது ஐந்து ஏக்கரில் கொடி அவரை பயிரிட்டுள்ளேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கிணற்றில் தண்ணீர் ஊறி கொண்டே இருந்தால் கொடி அவரையில் கோடி ரூபாய் லாபம் பார்க்கலாம் என்றார்.
மேலும் விபரமறிய 93803 96873ல் ஹலோ சொல்லலாம்.
-கா.சுப்பிரமணியன், மதுரை

Source: Dinamalar

Saturday

மணக்கும் புதினா சாகுபடி: ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் லாபம்


படம்: ஆர். சௌந்தர் சமையலில் சுவையும் மணமும் கொடுக்கப் பயன்படுத்தப்படும் புதினா மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வரை லாபம் கிடைக்கும் என்கிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா.


சைவ, அசைவ உணவுக்குச் சுவையூட்டும் புதினா வயிற்று வலி, செரிமானக் குறைவு, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளுக்குச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. மருத்துவக் குணம் கொண்ட இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தத்தைச் சுத்தமாக்குவதுடன், உடலுக்குப் புத்துணர்வைத் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்வேறு மருந்துகளில் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது தவிர அழகு சாதனப் பொருட்கள், சோப்பு, தலைவலி மருந்து, கிரீம்கள் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.

பூச்சி தாக்குதல் இல்லை

புதினா, ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட தாவரம் எனக் கூறப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு உள்ளதால், நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். வெற்றிகரமான புதினா சாகுபடி பற்றித் தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் புதினா சாகுபடி செய்துள்ள விவசாயி கே. கருப்பையா பகிர்ந்துகொண்டார்:

மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். ஒரு ஏக்கரில் உழுது, பாத்தி கட்டி, புதினா நடவு செய்யச் சுமார் ரூ.1 லட்சம்வரை செலவு ஆகும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் மருந்து தெளிக்கலாம். இயற்கை உரத்தை இட வேண்டும்.

அதிக லாபம்

60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 4,800 கிலோவரை பறிக்கலாம். முகூர்த்தம் மற்றும் நோன்புக் காலங்களில் ரூ.50 முதல் 70 வரை விலை போகிறது. சந்தையில் ஒரு கிலோ சராசரியாக ரூ. 30 என்றால்கூட, ரூ. 1.44 லட்சம் கிடைக்கும். செலவு போக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரை லாபம் கிடைக்கும். 4 ஆண்டுகள்வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினா அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

இதைச் சந்தைப்படுத்துவது மிகவும் எளிது. புதினா சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து வியாபாரிகளுக்குத் தகவல் தெரிந்தால், அவர்களே போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றுவிடுவார்கள். புதினா சாகுபடிக்கு உவர் நீர் அல்லது சப்பைத் தண்ணீரைப் பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். அதனால் நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஊடுபயிர்

நிலம் குறைவாக வைத்துள்ள ஏழை விவசாயிகள் தென்னை மரங்களுக்கு இடையே இதை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். கடந்த 15 ஆண்டுகளாகப் புதினாவை மட்டுமே 2 ஏக்கர் நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்து லாபமடைந்துவருகிறேன்.


விவசாயி கே.கருப்பையா தொடர்புக்கு: 98653 67860

Source: tamil.thehindu

இளம் குழந்தைக்கு முதல் உணவு வாடன் சம்பா: நம் நெல் அறிவோம்


மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் ரகம் வாடன் சம்பா. வறட்சியைத் தாங்கிக்கொண்டு, மழை பெய்யும்போது பயிர் வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது.


நூற்று நாற்பது நாள் வயதுடைய இந்த நெல், மஞ்சள் மற்றும் பழுப்பு நிற அரிசியைக் கொண்ட நீண்ட காலப் பயிர். சன்ன ரக அரிசி. நான்கடி வளரக்கூடிய நெல் ரகம்.

பராமரிப்பு

ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியும், ஒருமுறை பஞ்சகவ்யாவும் பயன்படுத்தினால் ஏக்கருக்கு இருபத்து ஐந்து மூட்டைவரை மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு உண்டு.

இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை. பூச்சி நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட ரகம் இது. மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால், பத்து நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.

சன்ன ரகமாகவும், சத்து மிகுந்த ரகமாகவும் இருப்பதால் உணவு மற்றும் பலகார வகைகளுக்கு இந்த ரகம் அதிகம் விரும்பப்படுகிறது. உணவுத் திருவிழாக்களில் பங்கேற்க வாடன் சம்பா அரிசியில் பலகாரம் செய்ய விரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். மிகுந்த ருசியுடன் இருப்பதால் மக்களிடையே வாடன் சம்பா பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மருத்துவக் குணம்

அத்துடன் மருத்துவக் குணமும் கொண்டது வாடன் சம்பா. மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் பத்தியம் இருக்க வேண்டும். அதற்கும் பேதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கும் வாடன் சம்பா அரிசிக் கஞ்சி வைத்துக் கொடுக்கும் பழக்கம் கிராமப் பகுதிகளில் இன்னும் இருந்துவருகிறது.

குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போது இந்த அரிசியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குக் காரணம் விரைவில் ஜீரணம் ஆவதும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்ததுமான இந்த நெல் ரகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும் சிறந்ததாக இருக்கும் என்பதுதான்.


- நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 94433 20954

Source: tamil.thehindu.com

Wednesday

மண் இல்லா தீவன வளர்ப்பு...

மண் இல்லாமல் பயிர் வளருமா? வளராது என்பதே நம்மில் பலருக்கும் தோன்றும் கருத்து. ஆனால், மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டது. ஆஹா, அப்படியா? அது நிச்சயம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம்.
கேரள மாநிலம், கோட்டயம் செல்லும் வழியில் பலா என்ற சிறு ஊரின் அருகில் வசிக்கும் என் நண்பர் திரு.டோனி மைக்கேல் அவர்களைச் சந்தித்தபோது, அவர் அப்போதுதான் மண் இல்லா தீவன அமைப்பை நிறுவியிருந்தார். தினமும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அந்த இயந்திரத்தின் அப்போதைய (2010-ல்) விலை சுமார் ரூபாய் 6.5 லட்சம். ஏகப்பட்ட கலர் கலர் பட்டன்கள், மீட்டர்கள் என பார்க்கவே பயமுறுத்தின.

வறண்ட மண்ணில் அசத்தும் "அல்போன்சா'


உலகம் தெரியாத விவசாயியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டும் பலன் இல்லாமல் போகும். விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த விவசாயி முருகேசன்.

வறண்ட மண்ணான சிவகங்கை எ.கருங்குளத்தை சேர்ந்த இவரது பண்ணை 2,000 ஏக்கர். பண்ணைக் குட்டைகளுடன் தென்னந்தோப்பு என பலவகை மரங்களை வளர்த்து வருகிறார்.
வறட்சியில் இந்த கிராமம் தத்தளித்த போது பிழைப்புக்காக வேறு ஊருக்கு புலம் பெயர்ந்த இவர் பல தொழில்கள் செய்தாலும், கடைசியாக தேர்வு செய்தது விவசாயம்.
"அல்போன்சா' மாம்பழம் அதிக விலையில் விற்பதை பார்த்து, தோட்டத்தில் அதை அமைக்கும் விருப்பத்தை விவசாய பல்கலையிடம் கேட்டுள்ளார். இந்த மண்ணில் அது வளராது என கூறியதை கேட்டு, அதையே சவாலாக எடுத்து முதல்கட்டமாக 20 ஏக்கரில் மா சாகுடியை துவங்கி இன்று பெரும் ஏற்றுமதியாளராகவும் மாறியுள்ள முருகேசன் கூறியதாவது:
25 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இயற்கை உரம் மீது தான் நம்பிக்கை இருந்தது. 15 டன் மண்புழுவை தோட்டத்தில் கொட்டி மண் வளத்தை பெருக்கினேன். 4 இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து மழைநீரை சேமித்து வந்ததால், நிலத்தடிநீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து மாங்கன்றுகள் வாங்கி ஏக்கருக்கு 40 மற்றும் 66 மரங்கள் வீதம் நடவு செய்தேன்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை களை எடுப்பதற்காக உழவு செய்து, அந்த களைகளே உரமாக்கினேன். சொட்டு நீர் பாசனத்தில் அனைத்து மரங்களும் நல்ல பலனை கொடுத்தது. மும்பையில் ஒரு பழம் ரூ.60க்கு விற்பனையானது. அதே பழம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என மகன் மதிபாலன் அதற்கான முயற்சிகள் எடுத்தார். விவசாயி வியாபாரியாக மாறினால் தான் விவசாயிக்கு உண்மையான பலன் கிடைக்கும், என்பதையும் நிரூபித்தோம்.
இந்த பழங்களை பேக்கிங் செய்வதற்கு ஜார்கண்ட் தொழி லாளர்கள் ஈடுபடுகின்றனர். மரத்தில் இருந்து விளைந்த மாங்காயை அதன் காம்போடு 3 அங்குலத்தில் "கட்' செய்து, அதை பெட்டியில் வைக்கோல் சுற்றி வெளியிடங்களுக்கு அனுப்புகிறோம். இதற்கு தனி வரவேற்பு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதன் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன், என்கிறார்.
இந்த சாதனை விவசாயி முருகேசனை வாழ்த்த - 94865 61677ல் அழுத்தலாம்.

-டபிள்யு.எட்வின், மதுரை.

Source: dinamalar

Saturday

நோய் விரட்டும் மூலிகைத் தோட்டம்: அரசு மருத்துவமனையின் முன்மாதிரி முயற்சி

ஒரு அரசு மருத்துவமனை பல வகைகளில் முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஆரம்பச் சுகாதார நிலையம். ஆயிரம் சதுர அடி பரப்பில் 80க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளர்த்து ஆரோக்கியத்தைப் பரவலாக்கும் முன்முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

அருமருந்து

இயந்திரமயமாகிவிட்ட மனித வாழ்க்கையில் நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், இதயநோய் என 30 வயதைக் கடக்கும் பலர் நோய்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

சாதாரணக் காய்ச்சலில் தொடங்கி டெங்கு, சிக்குன் குன்யா, வைரஸ் காய்ச்சல் மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகமாகப் பரவும் சூழ்நிலை பரவலாகிவிட்டது. இத்தகைய நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக மூலிகைச் செடிகள் உள்ளன என்பது பரவலாக அறியப்படாத உண்மை.

இந்நிலையில் வேலூர் திருப்பத்தூர் அருகேயுள்ள ஆண்டியப்பனூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைத்து, 80 வகை மூலிகைகளை வளர்த்து, நமது பாரம்பரியமான மூலிகைகளின் மகத்துவத்தைப் பரவலாக்கி வருகிறார் உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) டாக்டர் விக்ரம்குமார்.

ஆயிரம் அடியில்

ஆண்டியப்பனூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே, ஆயிரம் சதுர அடி பரப்பில் மூலிகை தோட்டம் அமைக்க யோசனை செய்தேன். அதற்கான முயற்சி ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த தங்கம்மா பாட்டி, எனக்குத் துணை நின்றார். மூலிகைச் செடிகளைப் பற்றி எனக்குத் தெரிந்ததைவிட அவருக்கு அதிகமாகத் தெரிந்திருந்தது. அவருடைய ஒத்துழைப் போடு இந்த மூலிகை தோட்டம் இன்றைக்கு உருவாக்கியுள்ளது.

அடுத்ததாகப் பள்ளி மாணவர்களுக்கு மூலிகைச் செடிகளின் மகத்துவம், மருத்துவக் குணங்களைப் பயிற்றுவிப்பது பற்றி ஆலோசித்து வருகிறேன்" என்கிறார் டாக்டர் விக்ரம் குமார்.

தங்கம்மா பாட்டியின் உதவி

இந்த மூலிகை தோட்டத்துக்கு உயிர் கொடுத்த தங்கம்மா பாட்டி, ஆண்டியப்பனூர் அரசு சுகாதார மையத்தில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டபோது, சின்னச்சின்ன வேலைகளைப் பார்ப்பதற்காக வந்தவர். மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று டாக்டர் விக்ரம்குமார் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அது.

"நாம இருக்குற இடத்தைச் சுத்தியே நிறைய மூலிகை செடிகள் இருக்கு. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகைகளிலேயே மருத்துவம் இருக்கு. நான் உங்களுக்கு உதவு றேன் டாக்டர்னு" முன்வந்தவர் தங்கம்மா பாட்டி.

உடனே, மருத்துவமனையைச் சுற்றியுள்ள காலி இடத்தில் பல வகை மூலிகைச் செடிகளின் தோட்டத்தை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வயல்வரப்புகளில் தெரிந்தும், தெரியாமலும் இருந்த மூலிகைச் செடிகளைப் பறித்து இங்குக் கொண்டு வந்து நட்டார்கள். இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தோட்டம் முழுவதும் மூலிகை செடிகள் பெருக ஆரம்பித்தன.

மூலிகை மகிமை

இது மாதிரி தோட்டத்த ஒவ்வொரு வீட்டிலயும் வச்சு, அதை உணவுல சேர்த்துக்கிட்டா எந்த நோயும் வராது, எனக்கு இப்ப 75 வயசு. இப்பவும் தோட்ட வேலை பாக்குறேன். ஒரு நாளைக்கு 10 மணி நேரம்கூட என்னால் தோட்ட வேலை பார்க்க முடியும். இந்த வயசுலயும் மண்வெட்டி, கடப்பாரை எடுத்து என்னால விவசாய வேலை பார்க்க முடியும். இதெல்லாம் மூலிகைச் செடிகளின் மகிமைதான்என்று பெருமை பொங்கக் கூறுகிறார் தங்கம்மா.

மருத்துவமனையும் மருத்துவர்களும் நோயின்றி வாழ்வதையும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகளையும் ஊக்குவிக்க வேண்டும். அதிலும் புதுமையாக மூலிகைத் தோட்டத்தை அமைத்து நோயாளிகளுக்கு அறிவையும் ஆரோக்கியத்தையும் ஊட்டுகிறார்கள் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவரும் தங்கம்மா பாட்டியும். இந்தச் சிறு பொறி தமிழகம் முழுக்கப் பரவும்போது, மூலிகைகளின் அருமை மாநிலம் எங்கும் உணரப்படும்.


Source: The Hindu. Tamil.

Wednesday

தலைமுறைக்கும் அள்ளித் தரும் நெல்லி

நெல்லிக்காயில் வைட்டமின் "சி' மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. இதனால் நெல்லிக்காய்க்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது.
நெல், கரும்பு, மா, தென்னை, கொய்யா, வாழை பயிரிடும் விவசாயிகள், மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிறகே நெல்லியில் வருமானம் கிடைக்கும், அதிக தண்ணீர் தேவை என்று கூறி அதன் சாகுபடியில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் பழநி அருகே வேப்பன்வலசை சேர்ந்த வி.கஸ்தூரிசாமி, 15 ஆண்டுகளாக 13 ஏக்கரில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நெல்லிக்காய் மரங்களை வளர்த்து, ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வருமானம் ஈட்டி, நெல்லியின் அருமை பெருமையை புரிய வைத்துள்ளார்.