மதுரை குண்டு மல்லிகையின்
சிறப்பினை ""மணம் தரும் மல்லிகை பணமும் தரவல்லது'' என்று புகழ்ந்து வந்தது உண்மை. ஏர்போர்ட்,
பூக்கடைகள் போன்ற எந்த இடங்களுக்கு
சென்றாலும் மல்லிகையின் நறுமணம் வீசிக் கொண்டிருக்கும். மல்லிகைப்பூ சாகுபடியானது ஒரு
கடுமையான பணியாகும். இதனால் விவசாயிகள் சாகுபடியில் ஒரு ஏக்கர் அல்லது 1-1/2 ஏக்கர் இந்த பரப்பிற்கு அதிகமாக சாகுபடி செய்வதில்லை.
புதிதாக மல்லிகை தோட்டத்தை துவங்கினால் அது அந்த இடத்தில் பத்து வருடங்கள் இருக்கும்.
புதிதாக நட்ட இடத்தில் மூன்றாவது வருடம் பூக்கத் தொடங்கிய தோட்டம் பத்து வருடங்கள் வரை பூத்துக் கொண்டு இருக்கும்.இதற்கு பின் மல்லிகை தோட்டம் அழிக்கப்படுகிறது. விவசாயிகள் இரண்டு வருடங்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடம் கிராமத்தில் கிடைக்கும் மல்லிகைப் பதியன்களை வாங்கி நடுகிறார்கள்.
புதிதாக நட்ட இடத்தில் மூன்றாவது வருடம் பூக்கத் தொடங்கிய தோட்டம் பத்து வருடங்கள் வரை பூத்துக் கொண்டு இருக்கும்.இதற்கு பின் மல்லிகை தோட்டம் அழிக்கப்படுகிறது. விவசாயிகள் இரண்டு வருடங்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடம் கிராமத்தில் கிடைக்கும் மல்லிகைப் பதியன்களை வாங்கி நடுகிறார்கள்.
விவசாயி செய்யும்
முக்கிய பணிகள்: களை எடுத்தல், பாசனம், உரங்கள், எரு இடுதல், பயிர் பாதுகாப்பு, பூக்கள் பறித்தல், இருமுறை செடிகளுக்கு கவாத்து செய்வது (1)
அக்டோபர் கடைசி (2)
டிசம்பர் முதல் வாரம் செடிகளின்
இலைகளை உருவி விடுதல்.
பூக்கள் பறிக்கும்
பணி அதிகாலை ஐந்து மணிக்கு துவங்குகின்றது. பறிக்கும்போது திறமையான பெண் ஆட்கள்
""அரும்புகளை'' (மலராத பூக்கள்) பறிக்கின்றனர்.
அப்போது கடும் இருட்டாக இருக்கும். இந்த பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இவர்களுக்கு
உள்ள ஸ்பரிசம் ஆகும். இது முக்கியமான துணிச்சல், நெல் நாற்று நடும் பெண்களை விட அரும்பினை பறிக்கும்
பெண்கள் அதிக திறமை கொண்டவர்கள். மேலும் அரும்பினை ஆறு மணிக்குள் மார்க்கெட்டிற்கு
கொண்டு செல்லுதல், அப்போது நிறைந்த அளவு
அரும்புகளை ஆறு மணிக்கும் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும்போது அதிக வரவு கிடைக்கின்றது.
விவசாயி தனது தோட்டத்திற்கு திரும்பி பூக்களை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டிற்கு திரும்ப
வேண்டும். இது மாதிரி 5,6 தடவைகள் மார்க்கெட்டிற்கு
திரும்ப வேண்டிய பணி. விவசாயி ஒரு நாளில் 17 முறைகள் ஒருநாள் பணி செய்ய வேண்டும். பெண்கள் பணி
செய்யும் போது விஷ ஜந்துகள் போன்றவைகளால் கெடுதல்கள் ஏற்படும் பயம் உண்டு.
பயிர் வளர்த்தலும்
அதன் நிர்வாகமும்:
* விவசாயி செடிகளை நன்கு
கவனிக்க வேண்டும்.
* முதல் முதலாக குறித்த
நேரத்தில் பாசனம் செய்தல்.
* திறமையான பயிர் பாதுகாப்பு
செய்தல்.
* மார்க்கெட்டிற்கு
எவ்வளவு விரைவில் மல்லிகையை கொண்டு செல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு சுறுசுறுப்பு தேவை.
* மார்க்கெட்டிற்கு
எந்த விவசாயி அதிக அளவு பூக்களை எடுத்துச் செல்கின்றார்களோ அந்த அளவிற்கு பணம் சம்பாதிக்க
முடியும்.
* சாகுபடியை கவனிக்கும்
போது மண்ணிற்கு நுண்ணூட்டச் சத்து கொண்டு உரங்களை இட வேண்டும்.
* தழை, மணி சாம்பல் கலந்த உரங்கள் நன்கு மக்கிய சாணி உரங்கள்
ஒரு வருடம் இருமுறை இட வேண்டும்.
* செடிகளில் சோர்வின்
அறிகுறிகள் தென்பட்டால் "ஹார்மோன்' உபயோகித்து சரிசெய்ய வேண்டும்.
* மல்லிகை சாகுபடியில்
கடும் சோதனை. அடிக்கடி ஆட்கள் கிடைக்கும் பிரச்னை அதிகரிக்கின்றது.
* எரு, உரம், பூச்சி மருந்து இவைகளின் விலை வாங்க இயலாத நிலை அடிக்கடி ஏற்படுகின்றது.
* விவசாயிகள் மிக அதிக
பயம் கொள்வதற்கு காரணம் இனி எதிர்காலத்தில் மல்லிகை சாகுபடி கடுமையாக குறைந்து வருகின்றது.
* இந்த வருடம் கடும்
மூடுபனி தாங்க முடியாத அளவிற்கு ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் ஏற்பட்ட செயல் மகசூலை
குறைத்து நஷ்டத்தை ஏற்படுத்தியது.
மல்லிகை சாகுபடியில்
மிக பிரபலமான விவசாயி சிங்கராஜ் (68, கிழங்கு தெரு, வலயப்பட்டி ,
மதுரை-625 002) இனி வரும் வருடங்களில் மல்லிகை சாகுபடி இருக்குமா
என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது என்று சொல்கிறார்.
- எஸ்.எஸ்.நாகராஜன்.
Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19317&ncat=7
No comments:
Post a Comment