விருதுநகரிலிருந்து
மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில் வரலொட்டி அருகே தண்டபாணி என்பவருக்கு சொந்தமான
"சுமதி பழத்தோட்டம்' உள்ளது. இங்கு
கொய்யா, சப்போட்டா என்ற
பலவித பழ பயிர்களை விளைவித்து வருகிறார். விருதுநகர் மார்க்கெட்டில் காய்கறி கடை
நடத்தும் இவர், கோழி, ஆடு வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். அதாவது தனது
தோட்டத்தில் நாட்டு கோழி, கிரிஜா கோழி என
500 கோழிகளை வளர்க்கிறார். இதன் மூலம் தினம் 200 முட்டைகள் கிடைக்கிறது.
ஒரு முட்டை ரூ.
10, கிலோ கோழி ரூ. 300க்கு
விற்பனை செய்கிறார். முட்டை, கோழி விற்பனை
மூலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் பெறுகிறார். இவரே பழத்தோட்ட பண்ணை வைத்திருப்பதால்
இதற்கான தீவன செலவு குறைவே.
இதே போல்
ராஜஸ்தானில் உள்ள மத்திய அரசு பண்ணையில் வாங்கி வரப்பட்ட ஒயிட் ஜெயின்ட்
முயல்களும் வளர்க்கிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை குட்டி போடும் பெண் முயல்,
ஒரு முறைக்கு 10 குட்டி
போடுகிறது. இது ஐந்து மாதத்திலே ஆறு கிலோ வரை எடைக்கு வந்துவிடுகிறது. ஒவ்வொரு
முயலுக்கும் தனித்தனி கூண்டு அமைத்துள்ளார். இந்த முயலை ஆய்வுக்காக பள்ளி, கல்லூரிக்கு தருகிறார்.
நாட்டு
புறாக்களும் இங்கு உண்டு. அடை காக்கும் புறா 21 நாளில் குஞ்சு பொறித்து விடும்.
அடுத்த 21 நாளில் பறக்க தொடங்கும் குஞ்சு புறா, 75 வது நாளில் முட்டையிட தொடங்கி விடும்.
குஞ்சு பொறித்த தாய் புறா, அடுத்த ஒரு
வாரத்திலே மீண்டும் முட்டையிடும். ஒரு ஜோடி புறா ரூ. 250, குஞ்சு ரூ. 150 க்கு விற்கிறேன் என்கிறார்
தண்டபாணி.
தொடர்புக்கு
93674 11815.
Source: Dinamalar
1 comment:
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
Post a Comment