Wednesday

தென்னை, பனை மரங்களில் ஏற உதவும் கருவி

தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது.
இந்தக் கருவியை வடிவமைத்த தனது அனுபவம் குறித்து வெங்கட் கூறியதாவது:
25 ஆண்டுகள் ஜவுளி ஆலையில் நான் தொழிலாளியாகப் பணியாற்றினேன். 1999-ம் ஆண்டு ஆலையை மூடி விட்டார்கள். அப்போதுதான் தென்னை மரம் ஏறும் கருவியை வடிவமைப்பதற்கான எண்ணம் என்னிடம் ஏற்பட்டது.தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தேங்காயின் தேவை அதிகமாக இருக்கும். அப்போது தென்னந் தோப்புகளை வைத்திருப்பவர்கள் காய்களை வெட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் மரம் ஏறி காய் வெட்ட ஆள் கிடைக்காமல் பல விவசாயிகள் அல்லல்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் கருவியை வடிவமைக்கத் தொடங்கினேன். என் சித்தப்பா குருசாமி வைத்திருந்த பட்டறை என்ஜினீயரிங் கண்ணோ ட்டத்தோடு கருவியை வடிவமைப்பதற்கான பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது.
2005-ம் ஆண்டில் நான் உருவாக்கியதுதான் தென்னை மரம் ஏறும் கருவி. தென்னை மரத்துக்கு மட்டுமின்றி, பனை மரம் ஏறும் கருவி, பாக்கு மரம் ஏறும் கருவி ஆகியவற்றையும் உருவாக்கினேன். எனது கண்டுபிடிப்பு பற்றி அறிந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான தேசிய நிறுவனம் (National Innovation Foundation), மதுரை சேவா மற்றும் நபார்டு போன்ற நிறுவனங்கள் எனது கருவியை பிரபலப்படுத்த பல உதவிகளை செய்தன. NIF நிறுவனத்தின் உதவியால் எனது கண்டுபிடிப்புக்கு நான் காப்புரிமை பெற்றேன்.
பாரம்பரிய அறிவைப் பயன்ப டுத்தி அரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துவோருக்காக மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் தேசிய விருது 2012-ம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. எனது கண்டுபிடிப்புக்காக மேலும் பல விருதுகள் கிடைத்துள்ளன. குஜராத் மாநில அரசு எனது கண்டுபிடிப்பை பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகம் என்னிடமிருந்து 150 கருவிகளை விலைக்கு வாங்கியது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் நான் வடிவமைத்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இலங்கை, ஆஸ்திரேலியா, மாலத்தீவு, மொரீசியஸ் உள்பட உலகின் பல நாடுகளில் எனது கருவி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தென்னை, பனை மற்றும் பாக்கு மரங்களில் ஏற தனித்தனி கருவிகளை வடிவமைத்த நான், ஒரே கருவியின் மூலம் கிளை கள் இல்லாத அனைத்து வகை உயரமான மரங்களிலும் ஏறு வதற்கான புதிய கருவியை தற்போது வடிவமைத்துள்ளேன். பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் இந்தக் கருவியைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மரத்தின் உச்சிக்கு சென்று காய்களைப் பறிக்க முடியும். 60 அடி உயரமுள்ள மரத்தில் 5 நிமிட நேரத்துக்குள் ஏறி, இறங்கலாம்” என்றார் வெங்கட். எல்லா வகை உயரமான மரங்களிலும் ஏறுவதற்கு ஏற்ற புதிய கருவியை வெங்கட் விற்பனை செய்கிறார்.
மேலும் விவரங்களுக்கு 99442 84440 என்ற செல்போன் எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

Source: tamil.thehindu.com

Monday

50 சென்ட்... 45 நாள்... 42 ஆயிரம்... மல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

50 சென்ட்... 45 நாள்... 42 ஆயிரம்...
கொத்தமல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக... தென்னை, பாக்கு, மூங்கில் உள்ளிட்ட மரப்பயிர்கள் என தங்களுடைய விவசாயத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பலரும். இவர்களுக்கு நடுவே... தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகளை, விடாமல் பயிர் செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அருகேயுள்ள சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ், அவர்களில் ஒருவராக, ஆண்டு முழுவதும் கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார்!

பலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு... ஒரு ஏக்கர்... ஒரு மாதம்...30,000

பலே வருமானத்துக்கு பட்டு வளர்ப்பு...
ஒரு ஏக்கர்... ஒரு மாதம்...30,000
விவசாயத்தோடு... அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்'' என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு... என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ''நானும் அவர்களின் ஒருவன்'' என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்...

Wednesday

பலன் தரும் பப்பாளி சாகுபடி

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.
பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம். எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.

பலன் தரும் பப்பாளி சாகுபடி

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.
பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம். எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.

நிலவளம் காக்க தக்கைபூண்டு


நிலவளம் காக்க தக்கைபூண்டு

நிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது. தக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை.

""தக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம். மேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வேறு இடங்களில் இருந்து சேகரிப்பது சிரமம். அதற்கு பதிலாக தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து, அதேநிலத்திற்கு உரமாக மாற்றலாம்.

தக்கை பூண்டு விதை கிலோ ரூ.30க்கு கிடைக்கும். இதற்கு ரூ.15 மானியம் உண்டு. இதனை நிலத்தில் பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும். அதன்பின், நெல், பயறு வகைகள், கடலை என எதனை சாகுபடி செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
எனது நிலத்தில் தற்போது 5 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளேன். கிடைக்கும் கொஞ்ச நீரை பயன்படுத்தியதில் செழித்து வளர்ந்துள்ளது. இதுபோன்ற இயற்கை உரத்தையும் பயன்படுத்தியே எக்டேருக்கு 20ஆயிரத்து 680 கிலோ நெல் கிடைத்து சாதனை விவசாயியாக மாறினேன். இதற்காக ஜனாதிபதி, முதல்வர் விருதுகள் எனக்கு கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய துணைஇயக்குனர் கனகராஜ் கூறுகையில், ""ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் அந்த நேரத்தில் பயிருக்கு சத்து கிடைக்குமே தவிர, மண்வளம் அதிகரிக்காது. ஆனால் தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்வதால் கார்பன், நைட்ரஜன் விகிதாச்சாரம் அதிகரித்து, மண்வளம் காக்கப்படும். கொழிஞ்சி செடியை தொடர்ந்து 3 ஆண்டுக்கு சாகுபடி செய்தால், பின் அது தானாகவே நிலத்தில் வளர்ந்து நிலவளத்தை காக்கும்'' என்றார். 
தொடர்புக்கு: 93441 31977
ஜி.மனோகரன்,
மதுரை.
Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21687&ncat=7

Monday

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...
நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...
விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.