ரசாயன உரம் தவிர்த்து
இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை
விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன்
வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து சிப்ஸ்
தயாரித்து விற்று நல்ல லாபம் அடைந்து வருகிறோம்
என்று கூறுகிறார் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுந்தரம். அவர் கூறியதாவது:
45 ஆண்டாக விவசாயம்
செய்து வருகிறேன். கடந்த 8 ஆண்டாக ரசாயன உரம் தவிர்த்து முழுமையான இயற்கை உரம் மூலம்
நேந்திரன் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையால் இடுபொருள் செலவு குறைவு. மகசூல் அதிகம். உற்பத்தியாகும் பொருளும் ஆரோக்கியமானது.
பகலில் உழைத்து, இரவில் காவல் காத்து
அறுவடை செய்தால், அதற்குண்டான விலை
கிடைப்பதில்லை. ரசாயன உரத்தால் தயாராகும் விளைபொருளுக்கு என்ன விலையோ அந்த விலைதான்
கிடைக்கிறது.