கலக்கும் மகளிர் சுய
உதவிக்குழு உழைக்கவேண்டும் என்ற உறுதியும், சாதிக்கவேண்டும் என்ற உணர்வும் இருந்தால் போதும்
எந்த தொழிலாக இருந்தாலும் கை நிறைய சம்பாதிக்க முடியும். கவுரவம் பார்க்காமல் வீடு,
வீடாக குப்பை சேகரிப்பதில்
தொடங்கி அடுத்த கட்டமாக மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பில் இறங்கி மாதம் தோறும் ஆயிரக்கணக்கில்
சம்பாதிக்கின்றனர். இப்போது எங்களில் பலர் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துகிறோம்
என பெருமை பொங்க கூறுகின்றனர் கோவை பெரியநாயக்கன் பாளையம் கூடலூர் சுயம் சுத்தா ஸ்ரீசெல்வநாயகி
மகளிர் சுய உதவிக்குழுவினர்.
மேற்கு தொடர்ச்சி
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூடலூர் கிராமத்தில் பெரிய அளவிலான தொழில் ஏதும் இல்லை.
அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டும்; அல்லது நகர்ப்புறங்களில் வேலை தேடி வரவேண்டும்.
இது தான் 15 ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தின் எதார்த்த நிலை. குடும்பத்தை நடத்தும்
அளவுக்கு வருமானம் ஏதும் பெரிதாக கிடைப்பதில்லை. பல வீடுகளில் மாத தேவைக்கே கடன் வாங்கவேண்டிய
நிலை.