நாழி, குருணி, பதக்கு...
தமிழர்களின் அளவீடுகளும் அதிநுட்ப அறிவாற்றலும்!
ஆதிகாலத்திலிருந்தே தங்களுக்கென அளவீட்டு முறையைக் கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்தி வந்தவர்கள் தமிழர்கள். ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பமான பிறகு, அவர்களுடைய அளவீட்டு முறைகள் மெள்ள இங்கே புகுத்தப்பட்டதால்... பாரம்பரிய அளவீட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் இந்திய அரசாங்கமே, ஆங்கில அளவீட்டு முறைக்கு ஒட்டுமொத்தமாக சலாம் போட்டு சரண்டராகிவிட்ட நிலையில்... பாரம்பரிய அளவீட்டு முறைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழந்துவிட்டன. ஆனாலும், கிராமப்புறங்கள் பலவற்றிலும், இன்னமும்கூட அவை புழக்கத்தில் இருக்கின்றன என்பது ஆச்சர்யமே!
ஆழமான அறிவின் அளவீடு !