Wednesday

அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !

ஆடு +தென்னை +மா
அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !


பறக்கப் பறக்கத்தான் இறகுகள் பலப்படும். உழைக்க உழைக்கத்தான் உயர்வுகள் உனதாகும்'
அந்த ஆட்டுப் பண்ணையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை வாசகம், அங்கே நுழையும் அனைவரையும் ஈர்க்கிறது. பண்ணையின் உரிமையாளர்களான வாசுதேவன்-கவிதா தம்பதி, அந்த வாசகங்களுக்கு உதாரணமாகவும் நின்று கொண்டிருப்பது, அனைவரையும் வியக்க வைக்கிறது!

Friday

வண்ண மீன் வளர்க்கறீங்களா?: மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டுமின்றி மன உற்சாகத்திற்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய், தற்போது நடுத்தர மக்களும் அதிக அளவில் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வண்ண மீன் வளர்ப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மீன்வளர்ப்பாளர்கள் கூறியுள்ள டிப்ஸ் உங்களுக்காக.

மீன் தொட்டியின் விலை 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. உள் அலங்காரத்துக்கு என்று ஸ்பெஷலாக மர வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டாண்ட் சேர்ந்த கலைநயமிக்க தொட்டிகள் 10 அயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.

Tuesday

புறா 20 ஆயிரம்...கோழி 27 ஆயிரம்... ஆடு 90 ஆயிரம்...


புறா 20 ஆயிரம்...கோழி 27 ஆயிரம்... ஆடு 90 ஆயிரம்...

தள்ளாத வயதிலும், தளராத கால்நடை வளர்ப்பு !
மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே... ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள்! இதை உணர்ந்தே... 'கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன்' என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர்.
இது, நூற்றுக்கு நூறு நிஜமே என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி!

Friday

ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு

உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களை கொண்டு உரம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது. இது நல்ல தொழிலாகவும் விவசாயிகள் சிலரால் தொடங்கப்பட்டு லாபமுள்ள தொழிலாக சிறப்பு பெற்றுள்ளது.
மண்புழு வாழ உதவும் சூழ்நிலை
மண்புழு உரத்தயாரிப்பில் குழி முறை,குவியல் முறைதொட்டி முறை மற்றும் சில்பாலின் முறை என்ற முறைகளில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம். ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்புழு உரத்தை தயாரிக்க சில்பாலின் என்ற முறையை கையாளலாம். இந்த முறையானது ஏழை விவசாயிகளும் மண்புழு உரத்தை சொந்தமாக தயாரிக்க ஏற்ற முறையாக இருக்கிறது.

Sunday

உழவில்லை... உரமில்லை... செலவில்லை... மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !

உழவில்லை... உரமில்லை... செலவில்லை...
மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !
 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை என்றாலே... இடுபொருட்களாக பயன்படுத்தப்படும் ஜீவாமிர்தம் உள்ளிட்ட அமிர்தங்கள்... அக்னி அஸ்திரம் உள்ளிட்ட அஸ்திரங்கள்... ஆகியவை முக்கியமாக கவனத்தில் வந்து நின்றுவிடும். இவையில்லாமல்... ஜீரோ பட்ஜெட் இல்லை.
ஆனால், ''இவை மட்டுமே ஜீரோ பட்ஜெட் இல்லை'' என்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு.
''அமிர்தங்கள் மற்றும் அஸ்திரங்கள் மூலமே சிறந்தப் பலன்கள் கிடைக்கும் என்றாலும், காற்றுத் தடுப்பு வேலிகள், இயந்திரங்கள் பயன்படுத்தாமை, உயிர்மூடாக்கு... என 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர் சொல்லும் அத்தனை வழிமுறைகளையும் கடைபிடித்து, முழுமையாக ஜீரோ பட்ஜெட் வேளாண்மை செய்யும்போது... கூடுதல் பலன் என்பது கண்கூடு'' என்று சொல்லும் சக்திவேலு, பாலேக்கர் சொல்லும் பெரும்பாலான ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து அரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்.

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி ! 16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி !
16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...
ஒரு காலத்தில்... 'விவசாயத்துக்கே லாயக்கில்லை’ என பலரும் ஒதுக்கியதால், கரும்போர்வைக்குள் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது, களி கலந்த கரிசல் பூமி அது. தற்போது காய்த்துக் குலுங்கும் நெல்லி மரங்களுடன் பசுமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பசுமை மாற்றத்தை ஏற்படுத்தியவர், மதுரையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி பாண்டியன்.
மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லைகள் தொட்டுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறது, புளியங்குளம் விலக்கு சாலை. அரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது 'பாண்டியன் அக்ரோ ஃபார்ம்ஸ்’. அதிகாலை வேளையில் தோட்டத்தில் இருந்த புகழேந்தி பாண்டியனைச் சந்தித்தோம்.
''வருஷம் முழுக்க பயங்கர பிசியா இருந்தாலும், நமக்கான இளைப்பாறுதல்னு ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கும். அந்த வகையில எனக்கான இளைப்பாறும் இடம்... இந்தத் தோட்டம். விருதுநகர்தான் சொந்த ஊர். எங்க உறவினர்கள்ல பெரும்பாலானவங்க மருத்துவர்கள்தான். ஒரு இன்ஸ்ட்டியூட் அமைக்கணும்னுதான் இந்த இடத்தை வாங்கினேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல.

Saturday

ரசாயன விவசாயத்தில் 70 லட்சம்... ஜீரோ பட்ஜெட்டில் 82 லட்சம்...

ரசாயன விவசாயத்தில் 70 லட்சம்... ஜீரோ பட்ஜெட்டில் 82 லட்சம்...
லாபத்தைக் கூட்டும் ஜீவாமிர்தம்..!
 வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரின் 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் ரசாயன விவசாயத்தில் இருந்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறத் தயாராகும் தென்னை விவசாயிகளுக்கு எழும் பெருத்த சந்தேகம், 'ஏற்கெனவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அமைத்த தென்னந் தோப்புகளை ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாற்ற முடியுமா?’ என்பதுதான்.
அவர்களுக்கெல்லாம் பாலேக்கர் சொல்லும் பதில்... 'ஜீவாமிர்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு எளிதாக மாறி விடலாம்’ என்பதுதான். இதை நடைமுறையிலும் நிரூபித்து வெற்றிபெற்று வருகின்றனர் தென்னை விவசாயிகளில் பலரும்!
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, அருகில் உள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ். உதயகுமார்... அவர்களில் ஒருவர்!