Saturday

ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்

ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள்... என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம். 

அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள்; கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள்; கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி.

Thursday

நேந்திரன் சிப்ஸ் விவசாயிகளே தயாரித்தால் லாபம்

ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து  சிப்ஸ் தயாரித்து விற்று  நல்ல லாபம் அடைந்து வருகிறோம் என்று கூறுகிறார் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுந்தரம். அவர் கூறியதாவது:
45 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 8 ஆண்டாக ரசாயன உரம் தவிர்த்து முழுமையான இயற்கை உரம் மூலம் நேந்திரன் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையால் இடுபொருள் செலவு குறைவு.  மகசூல் அதிகம். உற்பத்தியாகும் பொருளும் ஆரோக்கியமானது. பகலில் உழைத்து, இரவில் காவல் காத்து அறுவடை செய்தால், அதற்குண்டான விலை கிடைப்பதில்லை. ரசாயன உரத்தால் தயாராகும் விளைபொருளுக்கு என்ன விலையோ அந்த விலைதான் கிடைக்கிறது.

Friday

உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்...வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி.

 உரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்...
வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி...
''இயற்கை விவசாயத்துக்காக எந்தப் பயிற்சியிலயும் நான் கலந்துக்கிட்டது இல்லை. முழுக்க முழுக்க 'பசுமை விகடன்’ புத்தகத்தை மட்டுமே படிச்சுட்டு... விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கேன். வாழையை மட்டுமே தனிப்பயிரா சாகுபடி செய்துகிட்டிருந்தா நான், இப்ப ஊடுபயிரையும் சாகுபடி செஞ்சு கூடுதல் வருமானம் பாத்துக்கிட்டிருக்கேன்'' என்று சாதித்த திருப்தியோடு சொல்கிறார், திருப்பூர் மாவட்டம், வே. வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசிவமூர்த்தி.
 இரண்டு நாள் கணிப்பொறி... ஐந்து நாள் கழனி!

தென்னைக்கு இடையில் விரால்...50 சென்ட் குளத்தில் 6 லட்சம் லாபம்

 தென்னைக்கு இடையில் விரால்...
50 சென்ட் குளத்தில் 6 லட்சம் லாபம்
விவசாயத்தோடு... ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்!
திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் நிமிர்ந்து நிற்கும் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.

40 செண்ட் சுரைக்காய்... 40 செண்ட் பாகற்காய்...


40 செண்ட் சுரைக்காய்... 40 செண்ட் பாகற்காய்...

ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி
'பசுமை விகடன்' 25.3.11-ம் தேதியிட்ட இதழில் 'நாட்டு மாடு வாங்கிட்டோம்... இயற்கைக்கு மாறிட்டோம்..!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலூகாவில் உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 45 விவசாயிகள் இணைந்து இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றிய கட்டுரைதான் அது. கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையில், அவர்களின் இயற்கை விவசாயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக அங்கே ஒரு நடைபோட்டோம்!  
 மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்!
ரசாயனத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த விவசாயிகளை இயற்கையின் பக்கம் இழுத்தவர், கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரான இவர், தற்போது, முழு நேர விவசாயி. இவர்தான் தற்போது இயற்கைக்கு மாறியிருக்கும் விவசாயிகள் அமைத்திருக்கும், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க’த்தின் தலைவர். 

Sunday

மண் புழு உரம் தயாரிப்பு - VERMICULTURE

 மண் புழு உரம் தயாரிப்பு



ஒவ்வொருவர் வீட்டிலும்  காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க  முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.  

Wednesday

ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...ஆர்ப்பரிக்க வைக்கும் ஆற்காடு கிச்சிலி !

 ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம்...
ஆர்ப்பரிக்க வைக்கும் ஆற்காடு கிச்சிலி !
ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தாலும், நம் முன்னோர்கள் ஒவ்வொரு பகுதியின் மண், தட்பவெப்ப நிலை... ஆகியவற்றுக்கேற்ப பகுதி வாரியாகப் பல ரகங்களை சாகுபடி செய்து வந்தனர். அப்படி ஒரு ரகம்தான் 'ஆற்காடு கிச்சிலி’!
ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தின்போது... காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கென்றே பிரத்யேக நெல் ரகமாக இருந்த இந்த 'ஆற்காடு கிச்சிலி’, இப்போது அபூர்வ ரகமாக மாறிவிட்டது. இதைத் தேடிப்பிடித்து சாகுபடி செய்திருக்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்த அச்சுதன் ('அகப்படாத அமெரிக்கா... அபயம் தந்த விவசாயம்...’ என்ற தலைப்பில், 25.7.2011-ம் தேதியிட்ட இதழில் இடம்பெற்ற கட்டுரை மூலமாக, ஏற்கெனவே நமக்கு அறிமுகமானவர்தான் இந்த அச்சுதன்).