Saturday

இயற்கையாகப் பொழியும் இணையற்ற லாபம் - நாட்டுக் கொய்யா

இயற்கையாகப் பொழியும் இணையற்ற லாபம் -நாட்டுக் கொய்யா
'‘பத்து ஆப்பிள்களைப் பதுக்கி வைத்துவிடலாம். ஆனால், ஒரு கொய்யாவைக் கூட மறைத்து வைக்கமுடியாது. ஊரையேக் கூட்டிவிடும் அதன் வாசனை! ஒரு கொய்யாவுக்கே அப்படி யென்றால் தஞ்சாவூர், விளார் சாலையில் அமைந்திருக்கும் ஐந்து ஏக்கர் கொய்யாத் தோட்டத்திலிருந்து கிளம்பும் வாசனைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை.

கொய்யா சாகுபடியில் பழுத்த அனுபவசாலியான விவசாயி முருகன்தான் அந்தத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர். மணமணக்கும் வாசனைக்கிடையே ஒரு கொய்யா பழத்தைக் கொடுத்து இனிப்பான வரவேற்புக் கொடுத்தார். 

ரெட்ட மகசூல் வாழை!

இலையும் வருது குலையும் தருது...

பழைய கற்காலம்... புதிய கற்காலம்... போல, இது பிளாஸ்டிக் பொற்காலம். எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் பொருட்களை கையில் எடுத்துவிடுகிறார்கள் மக்கள். வாழை இலை வடிவில் கூட பிளாஸ்டிக் தட்டுகள் வந்துவிட்டன. ஆயிரம் இருந்தாலும் தலைவாழை இலை போட்டு... சாப்பாடு பரிமாறுவது போல வருமா...?
 
திருமணமா... தீபாவளியா... திருக்கார்த்திகையா... எடு வாழை இலையை என்று மரபு மாறாமல் கணிசமான மக்கள் இன்னமும் வாழை இலையை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இலை இல்லை என்றால் விருந்து நடந்த திருப்தி பலருக்கும் வருவதில்லை. இதுதான் இன்றைக்கும் இலை வாழை விவசாயிகளை வாடவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.