Thursday

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு

மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம்.
இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும்.
இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர்.

Tuesday

சிறிய... யோசனை... பெரிய பலன்...

சிறிய... யோசனை... பெரிய பலன்...

பைசா செலவில்லாமல் பலே பாசனம் !

சொட்டுநீர்ப் பாசனம் என்றதுமே... 'அதுக்கு டேங்க் வேணும், ஆயிரக்கணக்குல செலவழிக்கணும்... அதெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகுமா?' என்கிற கவலைகள் அப்பிக்கொள்ளும். ஆனால், காலி தண்ணீர் பாட்டில்கள், மருத்துவமனைக் கழிவுகளான குளுக்கோஸ் பாட்டில் டியூப்கள்... என, செலவில்லாமல் கிடைக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, தன்னிடம் உள்ள மரங்களுக்கு சொட்டுநீர் முறையில் தண்ணீர் பாய்ச்சி அசத்தி வருகிறார், பாலசுப்ரமணியன்!
சின்னச்சின்ன தொழில்நுட்பங்கள், குட்டிக்குட்டிக் கருவிகள்... என தங்களுக்குத் தேவையானவற்றை, தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளை 'பசுமை விகடன்’  தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் இங்கே அறிமுகமாகிறார் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலூகா கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்த பாலசுப்ரமணியன்!

சொட்டுநீர்ச் சிக்கல்கள்... தீர்வு உங்கள் கையில்!


சொட்டுநீர்ச் சிக்கல்கள்... தீர்வு உங்கள் கையில்!

தண்ணீரைச் சிக்கனமாக்கி, ஆட்கள் தேவையைக் குறைக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், சொட்டுநீர் பாசனத்தில் பயன்படும் பாகங்கள், அவற்றின் பயன்பாடு மற்றும் பராமரிப்புகள் குறித்து பலரும் அறிந்து வைத்திருப்பதில்லை. எதற்கெடுத்தாலும், அத்துறை சார்ந்த நிபுணர்கள் அல்லது சர்வீஸ் செய்பவர்களைத்தான் தேடி... ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால், மொத்த ரிப்பேரையும் பார்க்காவிட்டால்கூட, குறைந்தபட்சம் என்ன பிரச்னை என்பதையாவது நாமே கண்டுபிடிக்கலாம்தானே! இங்கே, இந்த விஷயத்தில் உங்களுக்குக் கைகொடுக்க வருகிறார்... திண்டுக்கல் நகரைச் சேர்ந்த நீர்மேலாண்மை ஆலோசகர், பொறியாளர் இளமுருகு.

பத்து சென்ட் நிலத்துக்கும் சொட்டுநீர்..!


பத்து சென்ட் நிலத்துக்கும் சொட்டுநீர்..!

தரிசு நிலங்கள் அதிகரிப்பதற்கு பற்பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் 'தண்ணீர் பற்றாக்குறை' என்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல் முதற் காரணமாகவே இருக்கிறது. ஆனால், வழக்கமான பாசன முறையைக் கைவிட்டு, சிக்கனமாகக் கையாளும் முறைகளைக் கடைபிடித்தால், தண்ணீர் பற்றாக்குறையை எளிதாக சமாளிக்க முடியும் என்பதுதான் அனுபவ விவசாயிகள் பலரும் சொல்லும் உண்மை. அப்படிப்பட்ட நீர் மேலாண்மை முறைகளில் ஒன்றுதான் சொட்டுநீர்ப் பாசனம்!
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அதிக செலவு பிடிக்கும் என்பதால், ஆரம்ப காலங்களில் வசதியுள்ள விவசாயிகளால் மட்டும்தான் இதை அமைக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இதை மாற்றி, சிறு மற்றும் குறு விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்குக் குறைந்த விலையில் சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது 'கே.பி. டிரிப்’ நிறுவனம்.

செழிப்பு தரும் 'தெளிப்பு' ! 10 ஆயிரம் ரூபாய் செலவில் பலே தொழில்நுட்பம் !

செழிப்பு தரும் 'தெளிப்பு' !
10 ஆயிரம் ரூபாய் செலவில் பலே தொழில்நுட்பம் !

ஆறு, ஏரி, ஏற்றம், கமலையேற்றம், ஆயில் இன்ஜின், பம்ப்-செட், போர்வெல்... என்று நீர் மேலாண்மை படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாசன மேலாண்மை மட்டும் 'மண்வெட்டி கொண்டு மடை திருப்பும்' முறையிலிருந்து பலகாலமாகவே மாறவில்லை. காலத்தின் கட்டாயம், சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் என்று அதிலும், இப்போது மாற்றங்கள் பரவிக் கொண்டிருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது!
பாசனத்தைப் பொறுத்தவரை நிலத்தின் தன்மை, தண்ணீரின் அளவு... போன்ற காரணிகளை வைத்து அவரவர்க்கு வசதியான பாசன முறைகளைப் பயன்படுத்துவதில்தான் வெற்றியே இருக்கிறது. இதில் சொட்டுநீர்ப் பாசனம் போலவே விவசாயிகளுக்கு வலுவாகக் கைகொடுக்கும் மற்றொரு பாசனம்தான் இந்தத் தெளிப்பு நீர்!