Monday

மரபணு மாற்றம் என்ற மாய்மாலம்

மூல விதைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆடும் ஆட்டமே மரபணு மாற்று விதைத் தொழில் நுட்பம் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து செயல்படுகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளின் அனுபவங்கள் கசப்பானவை என்பதால் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அவை தடை விதித்து விட்டன. இவ்வகை பயிர் பொருட்கள் சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதிகள், ஒவ்வாமை, இதயநோய், புற்றுநோய் என்று 55 வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பி.டி. கத்திரிக்காயை தொடர்ந்து நெல், பருப்பு, கோதுமை மூலிகைகள், காய்கனிகள் சிறு தானியங்கள் என்று பல பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட ரகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பது ஓர் அபாயம்.

Saturday

தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா


தனது சோலைவனத்தில் சதாசிவம்500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?


"திடீர்னு ஒருநாள் எங்க வீட்டுத் தென்னந்தோப்புல இருந்த மரங்கள் எல்லாம் காய்ஞ்சு விழுறாப்பல கனவு கண்டேன். கனவைச் சொல்லி 'மாற்றுப் பயிரை பத்தி யோசிக்கணும்'னு நான் சொன்னத யாரும் நம்பல. எல்லாரும் சிரிச்சாங்க. ஆனா ஒருநாள், கனவு கண்டமாதிரியே என் கண்ணு முன்னாடியே எல்லா மரங்களும் கழுத்தொடிஞ்சு காய்ஞ்சு விழுந்துருச்சு. பக்கத்து தோட்டத்துலயும் அப்படித்தான்!

என்னை உதாசீனப்படுத்துனவங்க மேல கோபமும் ஆத்திரமும் வந்துச்சு. பக்கத்துல இருக்கிற மலங்காட்டுக்குள்ள போய்ட்டேன். காட்டுக்குள்ள கெடச்ச நெல்லி, புளின்னு மரவகை உணவுகளை உண்டு திரிஞ்சேன். இருபது நாள் கழிச்சு மீண்டும் ஊருக்குள்ள வந்தப்ப, பைத்தியக்காரன பாக்குறாப்புல பாத்தாங்க. அதுக்கப்புறம் ஜனங்க என்னை பரிகாசம் பண்றப்ப எல்லாம் வனவாசம் போக ஆரம்பிச்சேன். காடுகளை சுவாசித்து மரங்களோட பேசிப் பேசி நான் இன்னைக்கி இப்படி இருக்கேன்"

முற்றும் துறந்த முனிவர் போல பேசும் விவசாயி இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 1997ல் இந்திய அரசின் இந்திரா பிரியதர்சினி விருஷ்சமித்ர விருது பெற்றவர். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுத்தால், அங்கேயே அவர்களது ஜீவாதாரத்துக்கான வழிவகை களைப் பெற்றுத் தந்தால், காடு வளர்ப்பில் புவி வெப்பமயமாதலை தடுத்தால் பாலைவனத்தில்கூட பலன்தரும் மரங்களை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

எதற்கும் உதவாது என்று வல்லுநர்களே ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றுகிறார் சதாசிவம். திருச்சி டு தஞ்சாவூர் சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள மு.சோலகம்பட்டி கிராமத்தில், தன் நண்பர்கள் துணையோடு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மண்ணின் தரத்துக்கு ஏற்ப மா, பலா, தேக்கு, ஈட்டி, செஞ்சந்தனம், பேரீச்சை என விதவிதமான மரங்களை நட்டார். மூன்று இடங்களில் தலா பத்து ஏக்கரிலான குளங்களை வெட்டி அதில் மழை நீரை சேமித்தார். சுயதேவைக்கு சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்தார். தரிசாகக் கிடந்த அத்தனை ஏக்கரும் சோலைவனமானது. சதாசிவத்தின் சோலைவனத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் பலர் வந்து பாடம் படித்துக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனைகளையும் அள்ளி வழங்குகிறார் சதாசிவம்.

"எனக்கும் மரங்களுக்குமான உரையாடல் ஏழு வயசிலேயே ஆரம்பிச்சிருச்சு.எதுவும் பேசாம நிக்கிறவங்களைப் பார்த்து, 'ஏன் மரம் மாதிரி நிக்கிற?'ன்னு கேப்பாங்க. பலரும் நெனைக்கிற மாதிரி மரம் ஜடமில்லை. அவை ஏதோ ஒன்றை மனிதனுக்கு சொல்ல விரும்புது. இதை நான் சொன்னப்போ ஒருமாதிரியா பார்த்தாங்க. இது சொன்னா புரியாது. அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும். மரங்களை நேசிக்க வேண்டியது நம்ம கடமை. இது புரியாம, மத்தவங்க பரிகாசம் செஞ்சத என்னால தாங்கிக்க முடியல. காட்டுக்குள்ளே போய் மரங்களோட மரங்களா குடியிருக்க ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா காட்டுக்குள்ளே இருந்து புடிச்சுட்டு வந்து படின்னு அனுப்புவாங்க. அடிக்கடி நான் காட்டுக்குள்ள ஓடுனதால பெத்தவங்களும் ஒரு கட்டத்துல பேசாம இருந்துட்டாங்க.

காட்டுக்குள்ள சுத்தும்போதுதான் ஒவ்வொரு மரத்தோட தன்மை, குணாம்சம், அது நம் உயிர் மண்டலத்துக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்குன்னு தேடித்தேடி படிச்சேன். ஆராய்ச்சியும் பண்ண ஆரம்பிச்சேன். காய்கறிகளில் கத்திரிக்காய், முள்ளங்கி போல, காடுகள்லயும் மரக்கத்திரிக்காய், மரத்தக்காளி எல்லாம் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி மனிதனுக்கு நேரடியாக உணவளிக்கும் 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?

கோவையில் சிறுவாணி, போளுவாம்பட்டி, தடாகம், மாங்கரை, பல்லடம், சூலூர், உடுமலை, பெருந்துறை சுற்று வட்டார கிராமங்கள்ல உள்ள தரிசு நில விவசாயிகளிடம் பேசி இந்த மரப்பயிர்களை வேளாண்மை செய்ய ஆரம்பித்தேன். அதில் நான் கண்டது நிரூபணமானது. அதை ஒட்டுமொத்தமா ஒரே இடத்துல செய்து காட்டணும். நான் உருவாக்கியதை இந்த உலகுக்கு அர்ப்பணிக்கணும்ற நோக்கத்தோடுதான் இங்கே இந்த காடுகளை உருவாக்கினேன்"என்கிறார் சதாசிவம்.


தேக்கு, செஞ்சந்தனம், ஈட்டி உள்ளிட்ட 200 வகை மரங்கள் வளர்ந்து செழித்து நிற்கும் சதாசிவத்தின் இந்த சோலைவனம் இயற்கை ஆர்வலர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்!
Source: Tamil.thehindu

Thursday

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்


நாங்கள் சைவம். முட்டையைக்கூடத் தொடுவதில்லை. மீன், முட்டை, இறைச்சி எல்லாமே புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் நிரம்பியவை. இவற்றை ஈடு செய்ய பால், மோர், நெய், நல்லெண்ணெய், பருப்பு, காய்கறிகள் போதுமானவை. சைவ உணவு உண்பவர்களுக்கு நோய் குறைவாக வரும். சைவ உணவு உண்பவர்கள் நிறைய எண்ணெய்ப் பலகாரங்கள் மற்றும் வனஸ்பதியில் செய்யப்பட்ட இனிப்பின் காரணமாக நோயுறுவார்கள். அளவோடு உண்டால் அவ்வளவாக நோய் வராது. உணவில் அதிகளவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும். சென்னையில் வாழ்க்கை ஓடியவரையில் காய்கறிகள் பார்த்துப் பார்த்து வாங்குவதுண்டு. என் மனைவியை எந்தப் பொருளாலும் திருப்தி செய்ய முடியாது. பச்சென்று காய்கறிகளை வாங்கிப் போட்டால் அப்பசுமையைப் பார்த்து அவள் சினமும் தணிந்துவிடும்.

இத்தாலிய தேனீ வளர்த்து லட்சம் வருமானம் ஈட்டும் இல்லத்தரசி...

இத்தாலிய தேனீ வளர்த்து லட்சம் வருமானம் ஈட்டும் இல்லத்தரசி...
தேனீக்கள் மட்டும்தானா?...சுறுசுறுப்பு, அதை வளர்க்கும் இந்த.... இல்லத்தரசியும் படு சுறுசுறுப்புத்தான். இயற்கை எழிலுடன் தென்னை மரங்கள் சூழ்ந்த கோவையை அடுத்த சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள மலை மந்திரிபாளையம் கிராமத்து பண்ணை வீட்டில், தேன்பண்ணை தொழிலில் வருமானம் நல்ல தேடும் இல்லத்தரசியாக திகழ்பவர்

Wednesday

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே… தட்டுப்பாடுதான்!

Tuesday

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்! மண்ணிலிருந்து ‘பொன்’ எடுக்கும் மகளிர்

தினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்! மண்ணிலிருந்து ‘பொன்’ எடுக்கும் மகளிர்





 தினமும் உங்களால 15 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா, வீட்டிலிருந்தபடியே மாசம் ரெண்டாயிரம் சம்பாதிக்கலாம். ரெடியா..? மண்புழு உரம் தயாரிக்க களம் இறங்கலாமா..?!''
- திருவள்ளூர் மாவட்ட கிராமப் பெண்களின் குரலில் அத்தனை உற்சாகம்.

Wednesday

இயற்கை உரமிருக்க செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை



ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.


தோட்டத்திலேயே கிடைமாடுகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி, அவற்றின் சாணத்தை சேகரிக்கிறேன். மாடுகளுக்காக சிறிய குளம் அமைத்துள்ளேன். மலைப்பகுதியில் மேய்ச்சல் முடிந்து, இரவில் இங்கே இளைப்பாறும். மாட்டுச்சாணம், கோமியம், உளுந்து பயறு, நாட்டு சர்க்கரையுடன் கரைசலை ஊற்றப் போகும் இடத்தின் மண்ணையும் கலந்து 48 மணி நேரம் ஊறவைப்பேன். இதுதான் ஜீவார்மித கரைசல். மண்ணையும், என்னையும் வாழவைக்கிறது.

புளித்த தயிரை தண்ணீரில் கரைத்து தெளித்தால், செடிகளுக்கு நல்ல கிரியாஊக்கியாக செயல்படுகிறது. பூச்சி தாக்குதல் இருந்தால் அக்னி அஸ்திரம் இருக்கவே இருக்கிறது.

Tuesday

5 ஏக்கர்... 200 நாட்கள்... 7,50,000! விறுவிறு லாபம் தரும் மிளகாய்!

5 ஏக்கர்... 200 நாட்கள்... 7,50,000!
விறுவிறு லாபம் தரும் மிளகாய்!

''எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...''
-கவிஞர் புலமைப்பித்தனின்  இந்த வரிகள், குழந்தைகளுக்கு மட்டுமல்ல... விவசாயத்துக்கும் பொருந்தும். தேவையான தொழில்நுட்பங்கள், முறையான திட்டமிடல் போன்றவை இருந்தால்... விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம், என்பதை பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். குறிப்பாக, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என அதிக சம்பளம் கிடைக்கும் படிப்பைப் படித்த இளைஞர்கள்கூட... விவசாயத்தின் மீதிருக்கும் பாசம் காரணமாக அதில் கால் பதித்து, அசத்தல் வருமானம் ஈட்டி வருகிறார்கள். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள துவார் கிராமத்தின் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி சரவணன், அவர்களில் ஒருவராக ஆச்சர்யம் கூட்டுகிறார்!
கணினி வேண்டாம்... களத்துமேடு போதும்!
செம்மண் பூமியில் 'பச்சைப் பசேல்’ எனப் படர்ந்து விரிந்திருந்த மிளகாய் தோட்டத்தில் சரவணனை சந்தித்தோம். ''தாத்தா காலத்துல விவசாயம்தான் பிரதான தொழில். அப்பா அரசியல்ல இருந்ததால, விவசாயத்தை கவனிக்க முடியாமப் போச்சு. நான் ஐ.டி. (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) முடிச்சு, முழுக்க நகரவாசியா மாறிட்ட நிலையில... ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அப்ப, விவசாயம்தான் கண்முன்னே வந்துச்சு. சொந்த ஊருக்கு வந்து பார்த்தா... புதர் மண்டி, காடு மாதிரி கிடந்துச்சு எங்க நிலம். அதை சுத்தம் செஞ்சு, விவசாயத்துக்கு ஏத்த நிலமா மாத்தினேன். கிணறு இருந்ததால தண்ணி பிரச்னை இல்ல. நிலம் தயாரானதும்... சோளம் விதைச்சேன். அதுல ஓரளவு லாபம் கிடைக்கவே... அடுத்தடுத்து அடி எடுத்து வைக்கிற நம்பிக்கை உள்ளுக்குள்ள துளிர் விட்டுச்சு'' என்று நம்பிக்கையை விதைத்த சரவணன், தொடர்ந்தார்.

25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்... வெளிநாடு போகும் வெள்ளரி..!


25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்...
வெளிநாடு போகும் வெள்ளரி..!
வியர்வை சிந்தி விளைச்சல் எடுக்கும் விவசாயிக்கு, விலை நிர்ணயம் செய்யும் உரிமை... நாடு அடிமைப்பட்டுக்கிடந்த வெள்ளைக்காரன் காலத்தில் மட்டுமல்ல... இன்றைய சுதந்திர பூமியிலும் இல்லை என்கிற ஆதங்கத்தை, இதைவிட அழகாகச் சொல்ல முடியாது.
என்றாலும், அன்று தொடங்கி... இன்று வரை சிலபல யுக்திகளைக் கையாளும் விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு நிரந்தரமான விலையைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்து, நேரடி விற்பனை மூலம் நிரந்தர வருமானம் ஈட்டி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், ஜே. கிருஷ்ணாபுரம், மோகன் செல்லக்குமார்.
கிராமத்துக்கு வெளியே, வளைந்து நெளிந்து செல்லும் தார்சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன, தென்னைமரங்கள். அவற்றுக்கு இடையே 'பளிச்' என காட்சி தரும் பண்ணை வீடுகளை ரசித்துக் கொண்டே சென்றால்... மோகன் செல்லக்குமாரின் பசுமைக் குடில் வந்துவிடுகிறது.