காளான்
காளான் என்பது பூசண
வகையைச் சேர்ந்த பச்சையில்லாத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் மற்றும்
நிறங்களிலும் தோன்றுகின்றன. காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன் மேல் ஒரு தலைப்பகுதியும்
காணப்படும். பொதுவாக தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும்.
தலைப்பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும். இவற்றுக்கிடையில்
லட்சக்கணக்கான காளான் பூசண நுண் வித்துக்கள் நிறைந்திருக்கும். இயற்கையில் இவ்வித்துக்கள்
மக்கிய பண்ணைக் கழிவுகள் மற்றும் அங்ககப் பொருட்களில் வளர்ந்து பூசண இழைகளாய் படர்ந்திருக்கும்.
சாதகமான சூழல் நிலவும் போது, அதாவது மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்குப்பின்,’ பூசண இழைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காளானாக வளரும்.
சாதகமான சூழல் நிலவும் போது, அதாவது மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்குப்பின்,’ பூசண இழைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காளானாக வளரும்.
உணவுக்காளான்
இயற்கையில் காணப்படும்
அனைத்து காளான்களையும் உணவுக்காக பயன்படுத்த இயலாது. ஏனெனில் சிலவகை காளான்கள் நச்சுத்தன்மை
உடையது. வெண்மை நிறக் காளான்கள் அனைத்தும் உணவுக்கு பயன்படுத்தலாமென்றும் வேற்று நிறமுடைய
காளான்கள் அனைத்துமே நச்சுத்தன்மை கொண்டவைகள் என்றும் கூறிவிடயியலாது. உதாரணத்திற்கு
பொலிடாஸ், மேர்செல்லா,
சிடேக், வால்வெரியல்லா போன்ற சுவை மற்றும் மருத்துவ குணங்கள்
நிறைந்த காளான்கள் நிறம் உடையவை. அதே சமயம் அமோனியா பாலாய்டஸ், அமானிடா வெர்ணா, பிளிரோட்டஸ் ஒலியேரியஸ் போன்ற வெண்மை நிறக்காளான்கள்
நச்சுத்தன்மை மிக்கவை.
உணவுக் காளான்களையும்
நச்சுக் காளான்களையும் வேறுபடுத்த சரியான முறைகள் இதுவரை கண்டறியப்படவில்லை,
சாதாரணமாக உணவுக் காளான்கள்
தொடும் பொழுது அல்லது வெட்டும் பொழுது நிறம் மாறாமல் இருத்தல் வேண்டும் மற்றும் காளான்
மணம் வீசப்பட வேண்டும். நச்சுத்தன்மையற்ற காளான் இரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை
தேர்வு செய்து வளர்த்து பயன் பெறலாம்.
காளான் வளர்ப்பின்
முக்கியத்துவம்
நம் நாட்டில் ஆண்டுதோறும்
சுமார் 3000 மில்லியன் டன் பண்ணைக் கழிவுகள் கிடைக்கின்றது. இதில் ஒரளவு மட்டுமே கால்
நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பண்ணைக்கழிவுகள் எரிக்கப்பட்டு
வருகின்றன. சுமார் 25 விழுக்காடு பண்ணைக் கழிவுகளை காளான் சாகுபடிக்கு உபயோகப்படுத்தினால்
400 மில்லியன் டன் காளான் உற்பத்தி செய்ய இயலும். தற்போது 13,000 மெட்ரிக் டன் காளான்கள்
மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் கிடைக்கும் 30 கோடி டன்
பண்ணைக் கழிவுகளில் சுமார் 10 விழுக்காடு கழிவுகளை காளான் உற்பத்திக்கு பயன்படுத்தினால்
3.4 லட்சம் டன் காளான் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் 100 கோடி ரூபாய்
வர்த்தகம் செய்ய முடியும்.
காளான் சாகுபடியில்
உள்ள நன்மைகள் காளான் வளர்ப்பிற்கு சிறிய இடம் போதுமானது.
பண்ணையில் கிடைக்கும்
சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை முறையே காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்கு
பயன்படுத்தலாம்.
காளான் எடுத்த பின்பு
உள்ள எஞ்சிய பொருட்களை இயற்கை உரமாக மாற்றி உபயோகிக்கலாம்.
கிராம மகளிர் மற்றும்
வேலையில்லா பட்டதாரிகள் காளான் வளர்ப்பை சுய தொழிலாக தொடங்கலாம்.
வறுமைக் கோட்டிற்கு
கீழ் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு காளான் வளர்ப்பு உறுதுணையாக
இருக்கும்.
புரதம் மற்றும் பல்வேறு
மருத்துவக் குணங்களைக் கொண்ட காளான்களை உட்கொள்ளுவதால் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை
உருவாக்கலாம்.
காளான் வளர்ப்பில்
ஏற்படும் பிரச்சினைகளும்
தீர்வு முறைகளும்
காளான் வளர்ப்பின்
போது களைப் பூசணங்கள், பூச்சிகள்,
நோய்கள் மற்றும் இயற்கைச்
சூழல் மாறுபாடுகளால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். காளான் என்பது பூசண வகையைச் சார்ந்த
நுண்ணுயிர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயற்கையில் தோன்றும் பல்வேறு நுண்ணுயிர்கள்
காளான் பூசணத்துடன் போட்டியிட்டு வித்துப்பை அல்லது படுக்கைகளில் தோன்றி அவற்றைச் சேதப்படுத்தலாம்.
எனவே காளான் பண்ணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருப்பது
அவசியம்.
காளான் அறுவடைக்குப்பின்
எஞ்சிய படுக்கைகளை உடனுக்குடன் அகற்றி எருக்குழிகளில் இட்டு மண்ணால் மூட வேண்டும்.
பண்ணையைச் சுற்றி சாக்கடை நீர் தேங்காதவாறும். மாட்டுத் தொழுவங்கள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் ஆகியன இல்லாமலும் பராமரிக்க
வேண்டும். வித்துத் தயாரிக்கும் அறை, வித்துப் பரவும் அறை, காளான் தோன்றும் அறைகளில்
அதிக தூசு படியக்கூடாது.
காளான் வித்துப் பைகளில்
ஆஸ்பெர்சில்லஸ், பெனிசிலியம்,
டிரைக்கோடெர்மா, ரைசோபஸ் போன்ற களைப் பூசணங்கள் தோன்றலாம். இதனைத்
தவிர்க்க
நன்கு முற்றிய,
பூச்சி, பூசணங்கள் தாக்காத சோளத்தைப் பயன்படுத்த வேண்டும்.
வித்துத் தயாரிக்கும்
அறையைத் தொற்று நீக்கம் செய்து, பத்து அல்லது பதினைந்து
நாள் இடைவெளியில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் திரவத்தை 1:2 என்ற விகிதத்தில்
கலந்து புகையூட்டம் ஏற்படுத்திப் பராமரித்தல் அவசியம்.
வித்துப்புட்டிகளை
ஈரம் உறிஞ்சாத பஞ்சினால் நன்றாக அடைக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும்
வித்துத் தயாரிக்கும் முன் யு.வி.விளக்கை அதாவது புறஊதாக் கதிர் விளக்கை 20 நிமிட நேரம்
ஒளிர விட வேண்டும்.
வித்து மாற்றம் செய்யும்போது
புன்சன் குழல் விளக்கின் நீல வண்ண தீச்சுடருக்கு அருகில் வித்து ஊட்டியின் வாய்பாகம்
இருக்குமாறு கவனித்துச் செய்ய வேண்டும்.
வெண்மை நிறகாளான்
பூசணத்தைத் தவிர படுக்கைகளில் பசு நிறத்தில் ஆஸ்பெர்சில்லஸ், பரைக்கோடெர்மா, பெனிசிலியம் பூசணங்கள், வெளிர் பச்சை நிறத்தில் தோன்றும் கீட்டோமியம். கருமை
நிறத்தில் தோன்றும் ரைசோபஸ் வகை பூசணம், பழுப்பு நிறத்தில் கடுகு போல் தோன்றும் ஸ்கிளிரோசியம் வகைப் பூசணம் போன்றவை விளைச்சலை
பாதிக்கும். இவை தவிர, குப்பைக் காளான் எனப்படும்
கோப்ரைஸ் வகைக் காளான்களும் சில சமயங்களில் படுக்கைகளில் தோன்றுவதுண்டு. இவற்றிலிருந்து
படுக்கைகளைப் பாதுகாக்க கீழ்க்காணும்.
நன்கு உலர்ந்த,
புதிய வைக்கோலைத் தேவையான
அளவு தண்ணீரில் குறைந்தது 45 நிமிட நேரம் நன்றாக வேக வைத்து உபயோகப்படுத்த வேண்டும்.
நீராவியில் ஒரு மணி நேரம் பதப்படுத்திய வைக்கோல் மிகச் சிறந்தது. இரசாயண முறையில் பதப்படுத்தும்
போது சிலவகைப் பூசணங்கள் குறிப்பாகக் குப்பைக் காளான் பூசணம் கட்டுப்படுத்தப் படுவதில்லை.
தவிர. அவ்வகைக் களைப் பூசணங்களில் விரைவில் எதிர்ப்பு சக்தி தோன்றும். மேலும் இரசாயண
முறை உடல் நலத்தை பாதிக்கக் கூடும்.
காளான் படுக்கைகளைச்
சுத்தமான அறையில், சிமெண்ட் தளம் அல்லது
மூங்கில் தட்டிகளால் அமைந்த பெஞ்சு போன்ற அமைப்புகளில் தயாரிக்க வேண்டும்.
கிருமி நாசிகளில்
நனைத்துப் பிழிந்து நன்கு உலர வைக்கப்பட்ட சாக்குப் படுதாக்களில் வைக்கோல் துண்டுகளை
உலர வைக்க வேண்டும்.
படுக்கை தயாரிக்கும்
முன் வைக்கோல் துண்டுகளில் சரினா ஈரப்பதம் இருத்தல் மிகவும் அவசியம். அதிக அளவு ஈரம் அல்லது ஈரமின்மையைத் தவிர்க்க
வேண்டும்.
பூசண வளர்ச்சி நிறைவுற்ற
படுக்கைகளில் சிறு புள்ளிகளாகவோ, திட்டக்காளகவோ களைப்
பூசுண வளர்ச்சி காணப்பட்டால் அந்த இடத்திலுள்ள வைக்கோல் துண்டகளை கவனமாக வெட்டி எடுத்துப்
பின் அந்த இடத்தை 0.05 சத கார்பென்டசிம் அல்லது 0.2 சத மே்கோசெப் புஜசணக் கொல்லிகளில்
நனைத்த பஞ்சினால் நன்றாகத் துடைக்க வேண்டும்.
காளான் வித்துப் பரவும்
அறையிலோ, காளான் தோன்றும் அறையிலோ
அடிக்கடி படுக்கைள் கெட்டுப் போனாால், சிறிது காலம் படுக்கைகள் அடுக்கி வைப்பதைத் தவிர்த்துப் பார்மலின் பகையூட்டம் செய்ய
வேண்டும். சுவர், கூரை மற்றும் அடுக்குகளின்
மேல் 0.1 சத கார்பென்டசிம் அல்லது 0.25 சத மேன்கோசெப் போன்ற பூசணக் கொல்லிகளைத் தெளித்துச்
சுத்தப்படுத்தி பின் உபயோகிக்க வேண்டும்.
அறையில் தொங்கவிடப்படும்
சாக்குப்படுதா, கூரை வேயப் பயன்படுத்தியு்ளள
ஒலை ஆகியன இற்றுப் போகாதவாறு கவனித்துப் புதியவற்றைப் பயன்படுத்துதல் நல்லது.
போரிட் மற்றும் சியாரிட்
இன ஈக்களும் அவற்றின் புழுக்களும் காளான் படுக்கைகளைத்
தாக்கி சேதப்படுத்தும். இவை காளான் குடிலுக்கு வெளியே தேங்கிய குப்பை கூளங்களில் இனப்பெருக்கம்
செய்யும் படுக்கையில் இடப்படும் துளைகள் வழியே ஈக்கள் உட்புகுந்து ஒவ்வொன்றும்
30-40 முட்டைகள் இடும். இவற்றிலிருந்து தோன்றும் 4-5 மி.மீ. நீளமுள்ள வெண்மை நிறப்
புழுக்கள் காளான் பூசண இழைகளைத் தின்று வளரும். இதனால் படுக்கைளில் ஈரம் கோர்த்த திட்டுத்திட்டான
வளர்ச்சி காணப்படும். இப்பகுதிகளில் அழுகித் துர்நாற்றமடிக்கும். சில வேளைகளில் களைப்
பூசணங்கள்காளான் ஈ மூலம் எல்லாப் படுக்கைகளுக்கும் பரவும். படுக்கைளில் பாக்டீரியா,
டிரைக்கோடெர்மா, பெனிசிலியம், ரைசோபஸ் வகை நுண்ணுயிர்கள் பெருகிக் காளான் விளைச்சல்
குன்றும். இவற்றைக் கட்டுப்படுத்தக் காளான் பண்ணையிலுள்ள எல்லா அறைகளிலும் சன்னல் மற்றும்
கதவுகளுக்கு 35 காஜ் அளவுள்ள வலைகள் பொருத்த வேண்டும். ஒலை வேய்ந்த குடில்களில் இந்த
சாத்தியக் கூறு குறைவாக இருப்பதால் பெரிய அளவில்
காளான் உற்பத்தி செய்ய விழைவோர் ஆரம்ப நிலையிலேயே முறையான குடில் அமைப்புகளை உருவாக்கினால்
பெரிய இழப்பைத் தடுக்கலாம்.
எண்ணெய் அல்லது கிரீஸ்
தடவிய பைகளை அறைகளில் ஆங்காங்கே கட்டித் தொங்க விடலாம். விளக்குப் பொறி, இனக் கவர்ச்சிப் பொறி ஆகியவற்றை உபயோகித்தும் தாய்ப்பூச்சிகளைக்
கவர்ந்து அழிக்கலாம்.
குடிலின் கூரை,
சுவர் மற்றம் சுற்றுப் புறங்களில்
10 லிட்டர் தண்ணீருக்கு டைக்ளோர்வால் 6 மி.லி. அல்லது மாலதியான் 10 மி.லி கலந்து தெளிக்கலாம்.
ஆனால் காளான் மொட்டுகளில் இம்மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.
படுக்கையில் இடும்
துளைகளில் 2 சத வேப்பெண்ணெய் தடவுதல் அல்லது படுக்கை தயாரிக்கும்போது தேவையான வைக்கோலுடன்
சுமார் 20 கிராம் வேப்பம் புண்ணாக்குத் தூள் கலந்து தயாரிக்கலாம்.
காளான் மொட்டுக்கள் அல்லது முழு வளர்ச்சியடைந்த
காளான்களின் மேல் அதிகப்படியான தண்ணீர் தெளிப்பதால், சில வேளைகளில் பாக்டீரியா போன்ற கிருமிகள் தோன்றி
காளான்கள் அழுகிவிடும். சில வேளைகளில் அறையில் நல்ல காற்றோட்டம் இன்மை, பாலிதீன் பைகளில் தேவையான துளைகள் அல்லது கீற்றுகள்
இட்டு காற்றோட்டம் ஏற்பட வழியில்லாதிருத்தல், காளான் ஈயின் தொல்லை, தரமற்ற பிசு பிசுப்பான வித்து உபயோகித்தல்,
வைக்கோல் துண்டுகளில் அதிகப்படியான
ஈரம் இருத்தல் ஆகியனவற்றாலும் பாக்டீரியாக் கிருமிகள் அதிகமாகும்.
இதனைத் தடுக்க
முழுவதும் வளர்ந்த
காளான்களைப் பறித்த பின் படுக்கைளில் தண்ணீரைத் தூவனமாகத் தெளிக்க வேண்டும்.
காளான் வளர்ப்பறையில்
குளோரின் கலந்த தண்ணீரை அதாவது 10 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து
உபயோகிக்க வேண்டும்.
காளான் படுக்கையின்
உட்பகுதியிலும், பராமரிப்பு அறையிலும்
வெளிச்சம் மிகவும் குறைந்தோ, கரியமில வாயு 30 சதவிகிதத்துக்கும்
அதிகமானாலோ தண்டு நீண்டு இதழ் அல்லது தலைப்பகுதி சிறுத்துக் காணப்படும்.
இதனைத் தடுக்க
காளான் படுக்கைகளை
மிகவும் இறுக்கமாகத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அறையின் சன்னல்கள்,
கதவு முதலியவற்றைக் காற்றோட்டம்
ஏற்படும் வகையில் அமைத்துத் தேவைப்படும் நேரங்களில் திறந்துவிட்டுப் பராமரிக்க வேண்டும்.
வெண்மையாகத் தோன்றம்
காளான் மொட்டுகள் வளராமல் சில சமயம் காய்ந்து கருகிவிடும். காளான் தோன்றும் அறையில்
காற்றின் ஈரத்தன்மை 80 சதத்திற்குக் குறைந்து வெப்ப நிலை 30 செ. க்கு அதிகமானால் மொட்டுக்ள
கருகிவிடும். எனவே அறையில் நீர் தெளித்தல், காற்று ஈரப்படுத்திகளை அமைத்தல், காற்றுப் போக்கிகளை அமைத்துச் சூடான் காற்றை வெளியேற்றுதல்
போன்ற முறைகளில் இப்பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் எனினும் ஒலை வேய்ந்த குடிலக்ளில் நான்
முழுவதுமு் சீரான வெப்ப நிலை மற்றும் இரப்பதத்தைப் பேணுதல் கடினமானதொன்றாகும். சிப்பிக்
காளான் வளர்ப்பறையில் போகதிய அளவு வெளிச்சம் இல்லாதபோதும் வெப்பநிலை 15 செல்சியஸ்க்கும்
கீழ் குறையும் போதும் சிலந்தி வகை பூச்சிகள் படுக்கை மற்றம் ஈரம் தேங்கிய அடுக்குளில்
அதிகமாகும். இத்தகைய பூச்சிகள் படுக்கைகளில் அதிகமானால் காளான்கள் வளர்ச்சியடையாது உருவிழந்து காணப்படும் தவிர,
பாக்டீரியாக் கிருமிகள் தாக்கி
படுக்கையில் மஞ்சள் நிற பிசுபிசுப்பான திட்டுக்ள அதிகமானாலும் காளான்கள் போதயி அளவு
விரியாமல் பூக்கோசு வடிவில் உருவிழந்து காணப்படும். இதனைத் தவிர்க்கச் சாயினா காரணத்தைக்
கூர்ந்து கவனித்துத் தடுப்பு முறகைள் மேற்கொள்ள வேண்டும். சில சமயம் வைரஸ் நோய் காரணிகளாலும்
இத்தகைய மாற்றம. ஏற்படலாமாகையால் தரமான தாய் வித்து உபயோகிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு,
source:
http://agritech.tnau.ac.in/ta/farm_enterprises/Farm%20enterprises_%20Mushroom_ta.html
2 comments:
use full tips for kaalaan growers,thank u sir
goods
Post a Comment