1. முகவுரை:
1924-ம் ஆண்டு
ஜெர்மனியில், முனைவர் ரூடால்ப் ஸ்டெய்னர்
வேளாண்மையைப் பற்றிய புதிய முறையை விவசாயிகளுக்கு பிரசங்கம் செய்யும் போது உயிர்
சக்தி வாய்ந்த வேளாண்மை என்பது உலகுக்கு தெரியவந்தது. ரூடால்ப் ஸ்டெய்னர், ஆஸ்டிரிய தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி ஆவார். இவருடைய
கருத்துக்கள் கிழக்கத்திய நாடுகளின் தத்துவம் முக்கியமாக புத்த மதம், இந்து மதம் மற்றும் வேதப் புத்தகங்கள் தாக்கத்தால்
உருவானது. இந்த தாக்கங்கள் மற்றும் அவருடைய கருத்துக்களால் ஆந்தராபோஸாப்பி அல்லது
மனித இனத்தினுடைய அறிவு என்பது உருவானது.