Wednesday

சொட்டுநீர் பாசனத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி

ரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் கடந்து விட்டது. தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. சமுதாயத்தின் பெரிய பொருளாதார ரீதியாக கரும்பு பயிர் உள்ளது.
"கரும்பு சாகுபடியில் இடுபொருள் மற்றும் நீர்பாசனம் போன்றவற்றை குறைத்து மகசூல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட "நீடித்த நவீன கரும்பு சாகுபடி' என்ற புதிய தொழில் நுட்பத்தினை தேசிய வேளாண்மைத்துறை அறிமுகம் செய்துள்ளது.

காய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்

நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள்கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப்பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன.
அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன. அதில் இரண்டு முட்டைகளை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன.
மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன். இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது.
மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு நித்திரை வந்து விட்டுது போலும், சித்திரை முடிய செடிகளும் நித்திரையில் ஆழ்ந்து விட்டன. அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும் இந்த வருட ஆடியில் முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.
இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.
- ஆர்.ரத்தினம்,
போடிநாயக்கனூர் தாலுகா,

தேனி மாவட்டம். 94424 94427

Source: Dinamalar

சிவகங்கையில் மணக்கும் "சம்பங்கி பூ'


வானம் பார்த்த பூமி சிவகங்கை. இம் மாவட்ட நிலத்தில் பூக்கள் விளைவது விவசாயிகளுக்கு அரிய விஷயம். ஆனாலும் சிவகங்கை கவுரிபட்டி விவசாயி எஸ்.மோகன், தனது நிலத்தை பண்படுத்தி நவீன சொட்டுநீர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி, "சம்பங்கி பூ' சாகுபடி செய்து சாதித்து வருகிறார்.

விவசாயி மோகன் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் விவசாயம் செய்ய 23 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். கவுரிபட்டியில் வாங்கிய நிலத்தை பண்படுத்தி, 3 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி நடவு செய்தோம். சேலம், ஜெயங்கொண்டானில் நாட்டு, ஒட்டு ரக(பிரிஜ்வார்)சம்பங்கி விதைகளை (கிழங்கு வகை) வாங்கி நடவு செய்தேன். 6 மாதங்கள் பராமரித்த பின் பூக்கள் பூக்க துவங்கும்.
பூச்செடிகளுக்கு தண்ணீர் சிக்கனத்திற்காக "பட்டர்பிளை' சொட்டு நீர் பாசன கருவி பொருத்தியுள்ளேன். பூச்செடி நடவிற்கு உரம், இயற்கை உரம், சொட்டு நீர் கருவி பொருத்துதல் போன்றவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கிலோ வரை சம்பங்கி பூக்கள் விளையும். இவற்றை மதுரை மார்க்கெட்டில் விற்று வருகிறோம்.
பூக்களை மொட்டுகளாக மட்டுமே பறிக்க வேண்டும். மதுரை மார்க்கெட்டில் தற்போது சம்பங்கி பூ கிலோவிற்கு ரூ.40 மட்டுமே கிடைக்கிறது. முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்றால் தான், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சம்பங்கி பூக்கள் குறைந்த விலைக்கு விற்பதால் ஆண்டுக்கு ரூ.1.08 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். செடிகள், ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு போக குறைந்த வருவாயே கிடைக்கும். முகூர்த்த காலங்களில் நல்ல விலை போனால் லாபம் கிடைக்கும், என்றார். ஆலோசனைக்கு 99766 50101.

-என்.வெங்கடேசன், சிவகங்கை.

Source: Dinamalar