Monday

ஆடுகளை கொட்டில் முறையில் அடைத்து வளர்த்தால் அதிக லாபத்தை பெறலாம்


ஆடுகளை கொட்டில் முறையில் அடைத்து வளர்த்தால், அதிக லாபத்தை பெறலாம் என்று கூறுகிறார், நவலடி ஆட்டுப்பண்ணை நடத்தி வரும் செல்வராஜ். சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு விவசாயத்தை விரும்பி செய்து வரும் அவர் மேலும் கூறியதாவது:

அதிக லாபம் தருவதால் வெள்ளாடு வளர்ப்பை, படித்த இளைஞர்கள் அதிக அளவில் செய்து வருகின்றனர். பராமரிப்பு மிகவும் குறைவு என்பதால், ஏராளமா னோர் ஆடுகளை வளர்க்க விரும்புகிறார்கள்.
பண்ணை கள் அமைத்து ஆடு வளர்ப்பவர்கள் குறைவாக இருக்கின்றனர். எங்கள் பண்ணை யில் கொட்டகை முறையில் ஆடுகளை வளர்க்கிறோம். வெள்ளாடு வளர்க்க குறைந்த முதலீடே தேவைப்படுகிறது.

சிறிய அளவில் 25 ஆடு கள் கொண்ட ஆட்டு பண் ணை (பரண்மேல் குடில்) அமைக்க குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் போதுமானது. நாட்டு வெள்ளாடு களை விட தலைச்சேரி ஆடுகள் விரைவாக வளரும். எடையும் அதிகரிக்கும். எனவே இந்த கொட்டகை முறையில் 25 தலைச்சேரி ஆடுகளை வளர்க்கலாம். இதற்கு ஒரு போயர் கிடாய் போதும். 25 ஆடுகளுக்கு தீவனம் வளர்க்க, ஒரு ஏக்கர் நிலம் போதும். போயர் கிடாயை இனக்கலப்பு செய்து பெறப்படும் இனம் தரமானதாக உள்ளது.
தலைச்சேரி பெட்டை ஆடுகள் 30 முதல் 40 கிலோ வரையிலும், கிடாக்கள் 40 முதல் 50 கிலோ வரையும் எடை இருக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் வரை பால் கறக்கும் திறன் இந்த ஆடுகளுக்கு உண்டு. முதல் முறை குட்டி போடும் போது மட்டும் ஒரு குட்டி போடும். அதன் பின்னர் ஒரு ஈற்றுக்கு 2 முதல் 3 குட்டிகள் வரை ஈனும்.
தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த போயர் ஆடுகள், இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த ஆட்டின் குட்டிகள் பிறந்த உடன் மூன்றரை கிலோ எடை இருக்கும். பெட்டை ஆடுகள் 60 முதல் 70 கிலோவும், கிடா 100 கிலோ எடையும் இருக்கும். தலைச்சேரி பெட்டை ஆட்டு டன், போயர் கிடாயை சேர் க்கும் போது அதிக எடை உள்ள குட்டியை ஈனுகிறது. 
இந்த குட்டி ஒரு மாதம் 6 கிலோ வரை எடை அதிகரிக்கும். மேலும் இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இந்த கலப்பின பெட்டை ஆடுகள் இன விருத்தியாகவும், கலப்பின கிடாய் இறைச்சிக்காகவும் பயன்படுகிறது. இதனுடைய கறி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். சாதாரண ஆட்டை விட போயர் ஆடு விரைவில் வளர்வதால் தீவன செலவு மிச்சமாகும். 
ரூ4 லட்சம் லாபம்:
ஆடுகளை புதியதாக வளர்ப்பவர்களுக்கு முதல் ஆண்டு லாபம் இல்லை. 2வது ஆண்டில் ஒரு ஆடு 6 குட்டிகள் வரை போடும். எனவே 25 ஆடுகள் மூலமாக 150 குட்டிகள் கிடைக்கும். இதை 3 மாதம் வளர்த்து விற்கும் போது ஒருகுட்டி ரூ3 ஆயிரத்து 500க்கு விற்கலாம். 25 ஆடுகள் மூலமாக ஆண்டுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
25 ஆடுகளை வளர்க்க வேலையாள் கூலி, பசுந்தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு என ரூ1 லட்சம் ஆகும். எனவே ஆண்டுக்கு ரூ4 லட்சம் லாபம் கிடைக்கும். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

2 comments:

Meyyan said...

very useful report update more.. thanks

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238