Wednesday

பலன் தரும் பப்பாளி சாகுபடி

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.
பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம். எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.

பலன் தரும் பப்பாளி சாகுபடி

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.
பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம். எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.

நிலவளம் காக்க தக்கைபூண்டு


நிலவளம் காக்க தக்கைபூண்டு

நிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது. தக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை.

""தக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம். மேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வேறு இடங்களில் இருந்து சேகரிப்பது சிரமம். அதற்கு பதிலாக தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து, அதேநிலத்திற்கு உரமாக மாற்றலாம்.

தக்கை பூண்டு விதை கிலோ ரூ.30க்கு கிடைக்கும். இதற்கு ரூ.15 மானியம் உண்டு. இதனை நிலத்தில் பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும். அதன்பின், நெல், பயறு வகைகள், கடலை என எதனை சாகுபடி செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
எனது நிலத்தில் தற்போது 5 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளேன். கிடைக்கும் கொஞ்ச நீரை பயன்படுத்தியதில் செழித்து வளர்ந்துள்ளது. இதுபோன்ற இயற்கை உரத்தையும் பயன்படுத்தியே எக்டேருக்கு 20ஆயிரத்து 680 கிலோ நெல் கிடைத்து சாதனை விவசாயியாக மாறினேன். இதற்காக ஜனாதிபதி, முதல்வர் விருதுகள் எனக்கு கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய துணைஇயக்குனர் கனகராஜ் கூறுகையில், ""ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் அந்த நேரத்தில் பயிருக்கு சத்து கிடைக்குமே தவிர, மண்வளம் அதிகரிக்காது. ஆனால் தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்வதால் கார்பன், நைட்ரஜன் விகிதாச்சாரம் அதிகரித்து, மண்வளம் காக்கப்படும். கொழிஞ்சி செடியை தொடர்ந்து 3 ஆண்டுக்கு சாகுபடி செய்தால், பின் அது தானாகவே நிலத்தில் வளர்ந்து நிலவளத்தை காக்கும்'' என்றார். 
தொடர்புக்கு: 93441 31977
ஜி.மனோகரன்,
மதுரை.
Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21687&ncat=7

Monday

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...
நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...
விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.

Wednesday

உயர்வுக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்: ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சாதனை புரியும் இளைஞர்

தனது பண்ணை வயலில் ஜெயக்குமார்.
தனது பண்ணை வயலில் ஜெயக்குமார்.
படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு, குறிக்கோள் எல்லாமே. ஆனால் விவசாயத்தில் பட்டம் பெற்று சென்னையில் உலகத்தரமான தனியார் பள்ளியொன்றில் நல்ல ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதையெல்லாம் ஒரேநாளில் உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு களமிறங்கி, அதிலும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார்.
அந்த சாதனை இளைஞரின் பெயர் கு.ஜெயக்குமார். வைத்தீஸ் வரன்கோயில் அருகேயுள்ள மேலாநல்லூர் அவரது சொந்த ஊர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி விவசாயம் படித்து முடித்தவுடன் சென்னை சர்வதேச பள்ளியில் பணி. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணி முடித்துவிட்டு ஒரே நாளில் அதை உதறி விட்டு தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். மேலாநல்லூரில் தனது தந்தையின் கடின உழைப்பால் வாங்கப்பட்ட 20 ஏக்கரில் இயற்கை விவசாயத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து பயன் ஈட்டி வருகிறார்.

வறட்சி பூமியிலும் லாபம் தரும் மிளகு சாகுபடி

வாசனைப் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மிளகு. குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த மிளகு, புதுக்கோட்டை போன்ற வறட்சி பகுதிகளிலும் இப்போது சாகுபடி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே அணவயல்-பட்டிபுஞ்சையைச் சேர்ந்த விவசாயி தங்கையன் தனது தென்னந்தோப்பில் ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்து வருகிறார்.
தனது மிளகு சாகுபடி அனுபவம் குறித்து தங்கையன் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கரில் மட்டும் தென்னையில ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யத் தொடங்கினேன். தற்போது அது 3 ஏக்கராக விரிவடைந்திருக்கிறது. மிளகு கொடிகளை தென்னை மரம், பலா மரத்துல ஏத்தி விட்டேன். அதிகமான இடை வெளி உள்ள இடத்துல 5 அடி இடைவெளியில கிலுவை, முருங்கை, கொன்றை மரங்களை நட்டு வைத்து அதிலும் மிளகு கொடியைப் படரவிட்டுள்ளேன்.

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்

சொட்டு சொட்டாய் தண்ணீர்... கொத்து கொத்தாய் மாங்காய்

வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன.
அடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது. 
காலாப்பாடு, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி நிற்கின்றன. ஆறு ஏக்கரிலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, சாதித்துள்ளார் விவசாயி மகாராஜன். தொட்டவுடனே சாதிக்கவில்லை. தோல்வி தந்த பாடம் தான், சாதிக்கத் தூண்டியது என்கிறார்.
ஏற்கனவே ஆறு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரி திருமுருகு, " 5 எக்டேர் வரை அரசு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கச் சொல்லும் போதெல்லாம்', "இதெற்கு... காசை கரியாக்கவா' என்று விட்டுவிட்டேன். தண்ணீரின்றி தென்னை கருகிப் போனது. ஆறுஏக்கர் மாந்தோப்பிற்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் தண்ணீர் ஊற்றிய மரத்திற்கு, மீண்டும் தண்ணீர் கிடைக்க ஒருவாரமானது.
மீண்டும் சொட்டுநீர் பாசனம் பற்றி கூறியதும், முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று சம்மதம் சொன்னேன். ஆறு ஏக்கர் வரை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, அரசே மானியம் தந்தது. கொஞ்சம் கூடுதலாக செலவு செய்து சொட்டுநீர் கருவிகளை அமைத்தேன். மின்மோட்டார் மூலம் உரம் தண்ணீரில் கலக்க தனி ஏற்பாடு செய்தேன். தற்போது ஆறு ஏக்கருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் தண்ணீர் கிடைத்து விடுகிறது. மின்செலவு குறைந்துள்ளது. களைகள் குறைந்து விட்டன. கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரில் மரங்கள் நன்றாக காய்த்து, மகசூலும் கிடைத்தது. மா மட்டுமல்ல... ஓராண்டுக்கு முன் கொய்யாவில் லக்னோ 49 ரகத்தில் 300 மரங்கள் வைத்து, பராமரித்து வருகிறேன். மாட்டு எரு, உரம் தருகிறேன்.
வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது, மரத்திற்கு ஒரு டன் காய்கள் தான் கிடைத்தன. இப்போது சொட்டு நீர் பாசனம் மூலம் மரத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைப்பதால், இரண்டு டன் காய்கள் கிடைக்கின்றன. மழை பெய்தால் இன்னும் மகசூல் கிடைக்கும்.சொட்டுநீர் பாசனம் அமைத்ததால், ஆறு ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற முடிந்தது, என்றார்.
இவரிடம் பேச: 97867 51903.
எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21587&ncat=7