Monday

மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் (இஸ்ரேல் விவசாயம்)

மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் (இஸ்ரேல் விவசாயம்)


இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின் பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர்.

இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீ பொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும் .ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை  இருந்ததுஅன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாத தொழில்.

Thursday

மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க மானியம்


வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

"நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

Wednesday

மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...

பட்டையைக் கிளப்பும் பட்டுரோஜா..!
மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...
'உணவுப் பயிர்களை மட்டும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கலாம். உணவாக உட்கொள்ளாத மலர்களுக்கு, எதற்காக இயற்கை உரம்?’
-இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். இத்துடன் 'மலர் சாகுபடிக்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தவில்லையென்றால், மகசூல் கிடைக்காது’ என்கிற நம்பிக்கையும் விவசாயிகள் பலருடைய மனங்களில் அடர்த்தியாக முளைத்துக் கிடக்கிறது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் தயவில்தான் மலர் சாகுபடியே நடக்கிறது. இதற்கு நடுவே, அத்தனைப் பேரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக... பட்டுரோஜாவை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி.

வீட்டுத் தோட்டங்கள்...

'வீட்டுத் தோட்டங்கள்...'
குடும்ப ஆரோக்கியத்துக்கு 100% உத்தரவாதம்!
'ஆர்வமும் உழைப்பும் இருந்தால், அடுக்குமாடி வீடுகளில்கூட அழகாக விவசாயம் செய்ய முடியும்’ என்பதை சமீபகாலமாக நகரவாசிகள் பலரும் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தனது அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார், திண்டுக்கல், சின்னசாமி.
''திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலரா வேலை செய்றேன். எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். அதனாலதான், வீட்டுலயே 1,500 சதுர அடியில தோட்டம் போட்டு இயற்கை முறையில, தக்காளி, கத்திரி, மிளகாய், பொன்னாங்கண்ணி, தண்டுகீரை, சிறுகீரை, ரோஜா, முள்ளங்கி...னு சாகுபடி செய்றேன். மாடியில தோட்டம் அமைக்கறதுங்குறது, இப்போ ரொம்ப சுலபமான விஷயமாகிடுச்சு.

காளான் வளர்ப்பு

காளான்
காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையில்லாத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் மற்றும் நிறங்களிலும் தோன்றுகின்றன. காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன் மேல் ஒரு தலைப்பகுதியும் காணப்படும். பொதுவாக தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும். தலைப்பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும். இவற்றுக்கிடையில் லட்சக்கணக்கான காளான் பூசண நுண் வித்துக்கள் நிறைந்திருக்கும். இயற்கையில் இவ்வித்துக்கள் மக்கிய பண்ணைக் கழிவுகள் மற்றும் அங்ககப் பொருட்களில் வளர்ந்து பூசண இழைகளாய் படர்ந்திருக்கும்.