சென்னை அருகே நெம்மேலியில்
கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இதேபோல் கல்வி, வேளாண்மை,
தொழில்நுட்பம், கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி மூலம் வேளாண்மைக¢கு பயன்படுத்துதல் போன்றவற்றில் இஸ்ரேல் &
தமிழகம் இடையே தொழில் உறவுகள்
மேம்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்தியாவுக¢கான இஸ்ரேலிய தூதர் அலான் உஷ்பிஸ் தெரிவித்தார்.
இஸ்ரேல் தூதர் அலான் சென்னையில் தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:தமிழகத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் செயல்படும் திட்டங்கள் என்ன?இந்தியாவுடன் இஸ்ரேல் உறவுகள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் நெம்மேலியில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் கடல் நீரை குடிநீராக¢கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், தமிழகத்தில் திண்டுக¢கல், தளியில் காய்கறிகள், மலர்கள் உற்பத்தியில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகரிக¢க திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தூதர் அலான் சென்னையில் தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:தமிழகத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் செயல்படும் திட்டங்கள் என்ன?இந்தியாவுடன் இஸ்ரேல் உறவுகள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் நெம்மேலியில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் கடல் நீரை குடிநீராக¢கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், தமிழகத்தில் திண்டுக¢கல், தளியில் காய்கறிகள், மலர்கள் உற்பத்தியில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகரிக¢க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில்
இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதா?இல்லை, நாடு முழுவதும் 10 மாநிலங்களில் மலர்கள், பழங்கள், காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக¢க 29 தொழில்நுட்ப மையங்கள் அமைப்பதற்கு கடந்த 2008ம் ஆண்டில் Ôஇந்தியா
& இஸ்ரேல் வேளாண்மை
கூட்டுறவு ஒப்பந்தம்Õ மூலம் திட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் காய்கறிகளுக¢கும் அரியானா மாநிலம் சிர்ஸாவில் பழங்களுக¢கும் தொழில்நுட்ப மையங்கள் அமைக¢கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் சிறப்பாக செயல்பட்டு
வருகின்றன. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4 மையங்களும், தமிழ்நாட்டில் 2,
அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் அமைக¢கப்பட உள்ளன. 2ம் கட்டமாக 6 மையங்கள் அமைக¢கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு
இறுதிக¢குள் இவை திறக¢கப்படும். இந்த தொழில்நுட்ப மையங்களின் நோக¢கம்...?இஸ்ரேல் வேளாண்மை தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியாவுக¢கு வந்து இந்த மையங்களில் (அரசு மற்றும் விவசாயிகளால்
தேர்வு செய்யப்பட்ட விவசாய நிலங்களில்) நேரடியாக களப்பயிற்சி அளிப்பர். பருவ காலங்களில்
பாதுகாக¢கப்பட்ட முறையில்
சாகுபடி செய்வது என்பது குறித்து விவசாயிகளுக¢கு பயிற்சி அளிப்பார்கள்.
கிடைக¢கும் பாசன நீரை சிக¢கனமாக பயன்படுத்துதல், பயிர்களுக¢கு ஏற்ப சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்துதல்,
பயிர் பாதுகாப்பு உட்பட இஸ்ரேல்
தொழில்நுட்பத்தை இந்திய சூழலுக¢கு ஏற்ப மாற்றி பயன்டுத்தி
விவசாய விளைபொருள் உற்பத்தியை அதிகரித்தல்.
தொழில்நுட்பத்தை நாங்கள் தருவோம். இதற்கான திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் அமல்படுத்தப்படும்.
இந்தியாவில் பயிற்சி பெற்ற விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள், இஸ்ரேல் வந்து அங்கும்
நேரடியாக பயிற்சி மற்றும் அங்கு செயல்படுத்தப்படும் முறைகளை கண்டு, கேட்டு தெரிந்து கொள்வார்கள். இதனால், பெற்ற அனுபவங்களை விவசாயிகள் தொடர்ந்து கடைப்பிடித்து
விளைபொருட்கள் உற்பத்தி அதிகரித்து பயன்பெறுவர். வேளாண் தொழில்நுட்பத்தில் முன்னணியில்
உள்ள இஸ்ரேல் விவசாயிகள், வெள்ளரி, குடைமிளகாய், மாழ்பழம், பேரீச்சம் பழம், மூலிகை செடிகள் கொய் மலர்கள் ஆகியவற்றின் விதைகள்,
பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள்
ஆகியவற்றை இந்திய விவசாயிகளுக¢கு வழங்குவார்கள்.
பரஸ்பரம் பங்களிப்பால் இரு நாடுகளும் பலன் பெறும். பயிர் சாகுபடி தொடர்பான அனுபவ அறிவு,
தொழில்நுட்பத்தை பகிர்ந்து
கொள்ளுதல், இந்தியா முழுவதும்
பல்வேறு பயிர் தொழில்நுட்ப மையங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை அதிகரித்தல்,
இரு நாடுகளின் விவசாயிகள்,
நிபுணர்கள் பரஸ்பரம் சென்று
நேரடி பயிற்சி பெறுதல், இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள்
தங்களது உயர்நிலை ஆய்வு பணிகளை இஸ்ரேலில் மேற்கொள்ளும் வசதிகள் செய்து தரப்படும். வேளாண்மை,
ஆராய்ச்சிகள் இரு நாடுகளும்
ஒன்றிணைந்து செயல்பட்டு பயன்பெறுதல் இதன் பிரதான நோக¢கம்.
இதன் ஒரு பகுதியாக
இஸ்ரேலில் கடந்த 22ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் நடைபெற்ற சர்வதேச தண்ணீர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கில் இந்தியாவின் சார்பில்
பல்வேறு துறைகளின் நிபுணர்கள், அதிகாரிகள்,
விவசாயிகள் என 30 பேர் கொண்ட குழு சென்று கலந்து கொண்டது குறிப்பிடத்தக¢கது. இந்தியாவுக¢கு சமீபத்தில்
இஸ்ரேல் பொருளாதார துறை அமைச்சர் நாப்தாலி பென்னட் விஜயம் பற்றி...இந்தியாவில்
அமைக¢கப்பட்டுள்ள வேளாண் தொழில்நுட்ப
மையங்களை பார்வையிட்டார். இரு நாடுகளுக¢கும் இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக¢கு என்று தனியாக நிதி ஒதுக¢கீடு செய்வது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன்
ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக¢கும் இடையிலான வர்த்தகம்,
கல்வி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு வாய்ப்புகளை வலுப்படுத்தும்
முயற்சியை மேற்கொண்டார். இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக¢கையாக இந்திய அமைச்சர்கள் இஸ்ரேல் வந்து பேச்சு
நடத்த உள்ளனர்.இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரித்தல்...இந்தியாவில் இஸ்ரேலிய தொழில்நுட்ப
உதவியுடன் வேளாண் விளைபொருள் உற்பத்தியை அதிகரிக¢க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல்,
வேளாண்மையின் துணைத் தொழிலான
கால்நடை பராமரிப்பில் கவனம் செலுத்தி, பால் உற்பத்தியையும் 5 மடங்கு அதிகரிக¢க உறுதி அளித்து செயலில் இறங்கியுள் ளோம். (இந்தியாவின்
பால் பொருள் உற்பத்தி அடுத்த ஆண்டில் (2014ல்) 4.5 சதவீதம் அதிகரித்து
சாதனை அளவாக 14.06 கோடி டன்னாக உயரும்
என்று எதிர்பார்க¢கப்படுகிறது.)
இஸ்ரேலின் முன்னேற்றம்...இஸ்ரேலியர்கள்
இந்த அளவுக¢கு முன்னேற்றம் அடைந்ததற்கு
முக¢கிய காரணம் கல்வி,
உழைப்பு, சாதிக¢க வேண்டும் என்ற மன உறுதி, கட்டுப்பாடு தான்.
நிர்பந்தம், தேவை, கிடைத்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தியது ஆகியவையும்
கூட. பொதுவாக கல்வி, குடும்ப பாரம்பரியம்,
கலாசாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த
மதிப்பு அளிப்பார்கள். நாட்டில் குறைவாக உள்ள வளங்களை பயன்படுத்தி நிறைவான பயன்பாட்டை
பெறும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதே இந்த முன்னேற்றத்தின் பின்புலம். எங்களிடம்
இருக¢கும் நவீன தொழில்நுட்பத்தை
உங்களுக¢கும் (இந்தியாவுக¢கும்) வழங்குவதன் மூலம் பரஸ்பரம் முன்னேற்றம் காணலாம்.இஸ்ரேலின்
முன்னேற்றம் என்பது, “இருப்பதைக¢
கொண்டு சிறப்புடன் வாழும்
இலக¢கணம் படித்தவன் தொழிலாளி;
உருக்கு போன்ற தன் கரங்களை
கொண்டு ஓங்கி நிற்பவன் தொழிலாளிÓ என்று கவிஞர் கண்ணதாசன்
வடித்த திரைப்பட பாடலின் வரிகளைத்தான் நினைவு படுத்துகிறது. சிறிய நாடு... பெரும் முன்னேற்றம்
என்பது நினைத்தால் ஆச்சரியம் தான் ஏற்படுகிறது.
மதிப்பு, மரியாதை, பாரம்பரியம்
இதுதான் இந்தியா
இந்தியர்கள் மிகுந்த
மதிப்பு, மரியாதை, பாரம்பரியம் மிக¢கவர்கள். கடின உழைப்பாளிகள். இங்கு கல்வி இருக¢கிறது, அபரிமித வளங்கள் இருக¢கிறது. மனித வளம்
உள்ளது. மிகப் பெரிய ஜனநாயக நாடு. இரு நாடுகளுக¢கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றது மகிழ்ச்சியைத்
தருகிறது.கல்வித் துறையில் இந்தியாவில் உள்ள யு.ஜி.சி. மற்றும் பல்வேறு பல்கலைக¢கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இஸ்ரேல் கல்வி நிறுவனங்களுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இந்திய மாணவர்கள் இஸ்ரேலில் படிப்பதற்கு தேவையான
வசதிகள், வாய்ப்புகள் உருவாக¢கப்பட்டுள்ளன.
கல்வி, பொருளாதாரம், கலாசாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, சுற்றுலா, வர்த்தகம், பாதுகாப்பு துறை, ராஜீய உறவுகள் ஆகியவை உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன்
ஒத்துழைப்பை மேம்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் இரு நாடுகளின்
தலைவர்களும் அவ்வப்போது, மற்ற நாட்டிற்கு சென்று
பேச்சு நடத்துவது, ஒப்பந்தங்கள் செய்வது
என்ற ரீதியில் ஆண்டுக¢கு ஆண்டு உறவுகள்
மேம்பட்டு வருகிறது.
Source:http://dinakaran.com/News_Detail.asp?Nid=66535
No comments:
Post a Comment