Monday

மீன் வளர்ப்பு பற்றிய சில தகவல்கள்

மீன் வளர்ப்பு பற்றிய சில தகவல்கள்

Fish-Tank
வீட்டில் மீன்கள் வளர்ப்பது பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்று. மீன் வளர்ப்பதிலும் அதற்கென மீன் காட்சியகம் வைப்பதிலும் பலருக்கு அச்சமும் கவலையும் உண்டாகிறது. சொல்லப்போனால் இந்த பொழுதுபோக்கை சுற்றி பல கட்டுக்கதைகள் புனையப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் நம்ப ஆரம்பித்தால், இந்த அற்புதமான பொழுதுபோக்கை இழந்துவிடுவீர்கள். அப்படிப்பட்ட சில கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா.
இயற்கை சூழலில் அழியும்
மீன் காட்சியகத்தில் விற்கப்படும் மீன்கள் சிறைப்பட்ட சூழலில் இனப்பெருக்கமானவை. அதனால் இந்த மீன்களால் இயற்கையான சூழலில் வாழ முடியாது. அதனால் ஏரி அல்லது ஆற்றில் இந்த மீன்களை விட்டால் சுற்றுச்சூழல் பாதிப்படையும். இந்த இயற்கை சூழலில் அவைகளை விட்டால் அவைகள் உணவு தேட கஷ்டப்படும். மேலும் தன் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாக்கவும் கஷ்டப்படும். இதுவும் ஒரு வகை கட்டுக்கதை தான்.
மீன் எண்ணிக்கை அதிகரித்தால் தொட்டிக்கு ஆபத்து
இதுவும் ஒரு மோசமான கட்டுக்கதையாகும். மீன்கள் சுவாசிப்பதற்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும். இல்லையென்றால் அவைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். மேலும் அவைகளின் கழிவுகள் அவைகளுக்கு விஷமாக மாறும் முன், அவைகள் நீர்த்து போய் ப்ராசஸ் செய்யப்பட்டு விட வேண்டும். இவை இரண்டையும் குறிப்பிட்ட அளவிலான நீரே செய்துவிடும். அதனால் தண்ணீரை போதுமான காலகட்டத்தில் மாற்றுங்கள்.
புதிதாக மீன் வளர்க்க விரும்புபவர்கள் சின்ன தொட்டியை தான் வாங்க வேண்டும்
கண்டிப்பாக அப்படி இல்லை. சின்ன தொட்டிகளை பராமரிப்பது கடிமானதாகும். இதுவே பெரிய தொட்டி என்றால் பராமரிப்பது சுலபமாகும். மீனின் ஆயுட்காலமும் நீடிக்கும். மீன்களை, முக்கியமாக தங்க மீன்களை பௌலில் போடவே கூடாது. அதில் போட்டால் மீன்கள் சுற்றி வர போதுமான இடம் கிடைப்பதில்லை. அதனால் வேகமாக இறக்கக் கூடும்.
உறிஞ்சலகு மீன்கள் தொட்டிகளை சுத்தமாக வைக்கும்
உறிஞ்சலகு மீன்கள் ஒன்றும் வேட்டை மீன்கள் கிடையாது. மீன்களின் கழிவை ஒன்றும் அவைகள் உண்ணுவதில்லை. சொல்லப்போனால் அவை மீனுக்கு ஆரோக்கியமும் கிடையாது. தொட்டியில் பாசி உருவாகியிருந்தால், அதனை நீக்கி விட வேண்டும். எந்த ஒரு மீனும் தொட்டியை சுத்தமாகவோ தெளிவாகவோ வைத்திருக்காது. தொட்டியை உறிஞ்சலகு மீன்கள் கண்டிப்பாக சுத்தப்படுத்தாது.
தொட்டியின் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்
இது ஒரு ஆபத்தான கட்டுக்கதையாகும். இதனை செயல்படுத்தினால் மீன்கள் செத்து மடியும். தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-20 சதவீத அளவு தண்ணீரை தான் மாற்ற வேண்டும். தொட்டியில் வடிகட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டிருந்தால், 30-50 சதவீத தண்ணீரை மாற்ற ஒரு மாத காலம் கூட காத்திருக்கலாம். தண்ணீரில் உருவாகும் பாக்டீரியா மீன்களை உயிர் வாழச் செய்யும். அதனால் தண்ணீரை முழுமையாக மாற்றினால், அது மீன்களுக்கு ஆபத்தாய் போய் முடியும்.
மீன் தொட்டியை பராமரிப்பதற்கு அதிக செலவாகும்
முற்றிலும் பொய்யான விஷயம் இது. சொல்லப்போனால் மீன் தொட்டி பெரிதாக பெரிதாக அதை பராமரிப்பது சுலபம். தூய்மையான நீரில் வளரும் மீன்களை வளர்த்தால் பராமரிப்பதும் சுலபம், செலவும் குறையும். தூய்மையான நீரில் வாழும் மீன்கள் புது சூழ்நிலைக்கு ஏற்ப சுலபமாக தன்னை மாற்றிக் கொள்ளும். செலவு என்று பார்த்தால் மீன்களுக்கு தேவையான உணவு, வடிக்கட்டுதல் மற்றும் தேவையான விளக்குகள். ஆனால் இந்த செலவுகள் எல்லாம் குறைவாக தான் இருக்கும். இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் பராமரிப்பதும் சுலபம்.
குறிப்பு
ஆரோக்கியமான மீன் தொட்டி வைத்திருப்பது சுலபம். தேவையானது எல்லாம் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். இதனால் மீன்கள் அதன் போக்கில் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆகவே தண்ணீர் நல்ல நிலையில் இருந்தாலே போதும், வேறு எதுவுமே தேவையில்லை.
Source:boldsky
Sathyamtv

No comments: