Sunday

உழவில்லை... உரமில்லை... செலவில்லை... மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !

உழவில்லை... உரமில்லை... செலவில்லை...
மணியாய் விளளயும் ஜூரோ பட்ஜெட் நெல் !
 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை என்றாலே... இடுபொருட்களாக பயன்படுத்தப்படும் ஜீவாமிர்தம் உள்ளிட்ட அமிர்தங்கள்... அக்னி அஸ்திரம் உள்ளிட்ட அஸ்திரங்கள்... ஆகியவை முக்கியமாக கவனத்தில் வந்து நின்றுவிடும். இவையில்லாமல்... ஜீரோ பட்ஜெட் இல்லை.
ஆனால், ''இவை மட்டுமே ஜீரோ பட்ஜெட் இல்லை'' என்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு.
''அமிர்தங்கள் மற்றும் அஸ்திரங்கள் மூலமே சிறந்தப் பலன்கள் கிடைக்கும் என்றாலும், காற்றுத் தடுப்பு வேலிகள், இயந்திரங்கள் பயன்படுத்தாமை, உயிர்மூடாக்கு... என 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர் சொல்லும் அத்தனை வழிமுறைகளையும் கடைபிடித்து, முழுமையாக ஜீரோ பட்ஜெட் வேளாண்மை செய்யும்போது... கூடுதல் பலன் என்பது கண்கூடு'' என்று சொல்லும் சக்திவேலு, பாலேக்கர் சொல்லும் பெரும்பாலான ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களையும் கடைபிடித்து அரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்.

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி ! 16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...

கரிசலில் காய்த்துக் குலுங்கும் நெல்லி !
16 ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்...
ஒரு காலத்தில்... 'விவசாயத்துக்கே லாயக்கில்லை’ என பலரும் ஒதுக்கியதால், கரும்போர்வைக்குள் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது, களி கலந்த கரிசல் பூமி அது. தற்போது காய்த்துக் குலுங்கும் நெல்லி மரங்களுடன் பசுமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பசுமை மாற்றத்தை ஏற்படுத்தியவர், மதுரையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி பாண்டியன்.
மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லைகள் தொட்டுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறது, புளியங்குளம் விலக்கு சாலை. அரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது 'பாண்டியன் அக்ரோ ஃபார்ம்ஸ்’. அதிகாலை வேளையில் தோட்டத்தில் இருந்த புகழேந்தி பாண்டியனைச் சந்தித்தோம்.
''வருஷம் முழுக்க பயங்கர பிசியா இருந்தாலும், நமக்கான இளைப்பாறுதல்னு ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கும். அந்த வகையில எனக்கான இளைப்பாறும் இடம்... இந்தத் தோட்டம். விருதுநகர்தான் சொந்த ஊர். எங்க உறவினர்கள்ல பெரும்பாலானவங்க மருத்துவர்கள்தான். ஒரு இன்ஸ்ட்டியூட் அமைக்கணும்னுதான் இந்த இடத்தை வாங்கினேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு அமையல.

Saturday

ரசாயன விவசாயத்தில் 70 லட்சம்... ஜீரோ பட்ஜெட்டில் 82 லட்சம்...

ரசாயன விவசாயத்தில் 70 லட்சம்... ஜீரோ பட்ஜெட்டில் 82 லட்சம்...
லாபத்தைக் கூட்டும் ஜீவாமிர்தம்..!
 வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரின் 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் ரசாயன விவசாயத்தில் இருந்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறத் தயாராகும் தென்னை விவசாயிகளுக்கு எழும் பெருத்த சந்தேகம், 'ஏற்கெனவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அமைத்த தென்னந் தோப்புகளை ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாற்ற முடியுமா?’ என்பதுதான்.
அவர்களுக்கெல்லாம் பாலேக்கர் சொல்லும் பதில்... 'ஜீவாமிர்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து ஜீரோ பட்ஜெட் முறைக்கு எளிதாக மாறி விடலாம்’ என்பதுதான். இதை நடைமுறையிலும் நிரூபித்து வெற்றிபெற்று வருகின்றனர் தென்னை விவசாயிகளில் பலரும்!
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, அருகில் உள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ். உதயகுமார்... அவர்களில் ஒருவர்!

5 சென்ட் குளம்... 8 மாத காலம்... 1,25,000 லாபம்... வீறுநடை போடும் விரால் வளர்ப்பு !

5 சென்ட் குளம்... 8 மாத காலம்... 1,25,000 லாபம்...
வீறுநடை போடும் விரால் வளர்ப்பு !
 'மீன் வளர்ப்புத் தொழில் செய்ய வேண்டுமென்றால்... ஏக்கர் கணக்கில் குளம் வேண்டும்’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ''குறைவான அளவு இடம் இருந்தாலே போதும் என்பதுதான் உண்மை. குறிப்பாக, குறைவான இடத்திலேயே விரால் மீன்களை வளர்த்து, நிறைவான வருமானம் பெறலாம்'’ என்கிறார், வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அருகேயுள்ள ஓமகுப்பம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை.
'சலசல’வென சாரல் அடித்துக் கொண்டிருந்த காலைப் பொழுதொன்றில்... அண்ணாத்துரையைச் சந்தித்தோம்.
''சின்ன வயசுல இருந்தே நான் விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். போதுமான வருமானம் இல்லாததால... வேற தொழில் ஏதாவது செய்யலாம்னு பக்கத்து ஊர் ஏரியை குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். 20 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சேன்.. 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுது. அதுல இருந்து 15 வருஷமா தொடர்ந்து ஏரி, குளங்களைக் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்தேன். மூணு வருஷத்துக்கு முன்னதான் சொந்தமா இருந்த நிலத்துல 10 சென்ட் அளவுல குழி எடுத்து, தேளி மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் கிடைச்சுது.

Friday

கலங்க விடாத கடலை....அள்ளிக்கொடுக்கும் ஆமணக்கு.... மானாவாரியில் மகத்தான மகசூல் கூட்டணி !

கலங்க விடாத கடலை....அள்ளிக்கொடுக்கும் ஆமணக்கு....
மானாவாரியில் மகத்தான மகசூல் கூட்டணி !
 ''மானாவாரி வெள்ளாமையில எள், உளுந்து, நிலக்கடலைனு தனித்தனியா சாகுபடி செய்யாம... ஊடுபயிரா ஆமணக்கையும் சேர்த்து சாகுபடி செஞ்சா... அருமையான விளைச்சல் பார்க்கலாம்'' என்று தன்னுடைய  அனுபவத்தை சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்கிறார், முன்னாள் ஆசிரியரும்... எந்நாளும் விவசாயியுமான கோதண்டராமன்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், இயற்கை வழி விவசாயத்தில் மானாவாரியாக கடலை விதைத்து, ஊடுபயிராக ஆமணக்கையும் பயிர் செய்திருக்கிறார். நிலக்கடலை அறுவடைப் பணியில் மும்மரமாக இருந்த நேரத்தில்தான் நாம் கோதண்டராமனைச் சந்தித்தோம்.

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி! 60 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 2,50,000

சாஃப்ட்வேர் இன்ஜினீயரின் சம்பங்கி சாகுபடி!
60 சென்ட் நிலத்தில் ஆண்டுக்கு 2,50,000
''பல வருஷமா விவசாயம் பாத்தாலும், நிறையபேரு 'நஷ்டம், நஷ்டம்’னுதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முக்கியமான காரணமே... வர்ற வருமானத்தையெல்லாம் கொண்டுபோய் உரக்கடையில கொட்டிக் கொடுக்கறதுதான். முறையா திட்டம் போட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சா, விவசாயத்தை மாதிரி வருமானம் கொடுக்கக் கூடிய தொழில் எதுவுமே இல்லீங்க'' என்று சொல்லும் திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து-வாசுகி தம்பதியர்,

Monday

அள்ளிக் கொடுக்கும் அடுக்குப் பயிர்கள்... ஒன்றரை ஏக்கரில் இரண்டரை லட்சம்!

அள்ளிக் கொடுக்கும் அடுக்குப் பயிர்கள்...
ஒன்றரை ஏக்கரில் இரண்டரை லட்சம்!
இடைவெளியில் சாகுபடி.
வேலி, வரப்பிலும் வருமானம்.
'ரசாயன முறை விவசாயமாக இருந்தாலும் சரி... பாரம்பரிய இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... முதன்மைப் பயிரோடு ஊடுபயிர்கள், கூட்டுப்பயிர்கள் ஆகியவற்றையும் சேர்த்து சாகுபடி செய்தால் மட்டும்தான் விவசாயத்தில் லாபம் எடுக்க முடியும்' என்பதை நிரூபித்து, நல்ல லாபத்தை ஈட்டி வரும் விவசாயிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, அடுக்குப்பயிர் சாகுபடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் விழுப்புரம் மாவட்டம், குமளம் கிராமத்தைச் சேர்ந்த சோமு.

வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்

வாழையில் மகசூல் கூட்டும் ஊட்டமேற்றிய தொழுவுரம்

வாழையில மட்டைக்காய்ச்சல், வாடல், இலைப்புள்ளினு ஏகப்பட்ட நோய்கள் தாக்கி, படாதபாடு பட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, 'ஊட்டம் ஏத்தின தொழுவுரம்' பயன்படுத்த ஆரம்பிச்சதுக்கு அப்பறம் எந்த நோயும் வர்றது இல்லை. ஆறு வருஷமா நிம்மதியா விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். உண்மையிலேயே இந்தத் தொழுவுரம், விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்தான்'' என்று சிலாகித்து

Thursday

மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்

மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணைக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் இலை மற்றும் தழைகள், சந்தையில் இருந்து பெறப்படும் வேண்டாத சொத்தை காய்கறிகள், பழங்கள் மற்றும் இலைக் கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து பெறப்படும் இலை, வீணாகும் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மண் புழுக்களுக்கு உணவாகக் கொடுத்து தரமான மண்புழு உரத்தை பெற முடியும்.

Tuesday

மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி

வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்த நாம் உண்ணும் அனைத்துப் பொருள்களிலும் விஷத்தை உருவாக்கும் புதிய உயிரித்தொழில் நுட்பம் உண்மையில் மனித உயிர்களைக் கொல்லும் நுட்பமாக மாறிவருவதை இந்தியர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.

வேளாண்மையில் விஷத்தைப் பரப்பும் மரபணு மரண ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்ட சூழ்நிலையில், நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியங்களில் மெல்ல மெல்ல அணுசக்தி விஷமும் கதிர்வீச்சாகப் பரவுவதை யாரேனும் கவனித்தது உண்டா?

Thursday

தென்னை, கோகோ, கீரை... முத்தான வருமானம் தரும் மூன்றடுக்கு சாகுபடி..

தென்னை, கோகோ, கீரை... முத்தான வருமானம் தரும் மூன்றடுக்கு சாகுபடி..!
விருது வாங்கித் தந்த இயற்கை விவசாயம்
நிலம் முழுவதும் பயிர்கள்.
ஆண்டு முழுவதும் வருமானம்.
குறைவானப் பராமரிப்பு.
'குறைவானச் செலவில், நிறைவான மகசூல் பெற இயற்கை விவசாயம்தான் ஒரே வழி. அதிலும் ஊடுபயிர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால்... வளமான வருமானம் நிச்சயம்' என்று அடித்துச் சொல்கிறார்... கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் மைக்கேல் ஹென்றி.

Wednesday

மண்புழு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்புக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

வளர்ந்து வரும் நாகரிக உலகில் மனிதன் பல்வேறு நோய்களுக்கு உட்படுகிறான். சுற்றுச்சூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் மேலும் விவசாயத்தில் இரசாயண உரங்கள் மற்றும் நச்சு விளைவிக்க்கூடிய பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்துதலே காரணம். இதற்கு மாற்றாக இயற்கை வேளாண்மைக்கு தேவையான முக்கிய இடுபொருளாக மண்புழு உரம் பயன்படுகிறது. மண்புழு உரம் அதிக அளவில் உற்பத்தி செய்ய விழிப்புணர்வும், பயிற்சிகளும் அவசியமானவை

Thursday

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!
tamil news, tamil koli valarppu, nattu koli valarppu


சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது: 

Saturday

வண்ணமீன் வளர்க்க ஆர்வம் இருக்கா

ன்றைக்கு வண்ண அலங்கார மீன் வளர்ப்பு மிகவும் நல்ல தொழிலாக வளர்ந்து வருகிறது. மீன் வளத்தை சார்ந்திருப்பவர்கள் அலங்கார மீன்வளர்ப்பிலும் ஈடுப்பட்டு நல்ல லாபம் பார்க்கலாம். உங்களுக்கு கூடுதல் வருமானமாகவும் அமையும். இதற்கான வாய்ப்பு வகைகளை பற்றி பார்ப்போம்.
குட்டிபோடும் மீன்கள்: முதல் முதலில் வண்ணமீன் உற்பத்தியைத் தொழிலாக ஆரம்பிப்பவர்கள் குட்டிபோடும் வண்ணமீன் ரகங்களைத் தேர்வு செய்து ஆரம்பித்தல் நல்லது. ஏனெனில் ஆண், பெண் வித்தியாசத்தை சுலபமாகப் பிரிக்க முடியும். ஆண் மீன் சிறியதாகவும் அதிக நிறமுடையதாகவும், கோனாபோடியம் எனும் மாற்றமடைந்த துடுப்புடனும் காணப்படும். பெண் மீன் பெரியதாகவும், சற்று நிறம் குறைந்தும் காணப்படும்.

Wednesday

வெள்ளாடு வளர்ப்பு


வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

Saturday

'குறைந்த நாட்களில், அதிக மகசூல்’ என்பதுதான் வீரிய ஒட்டு ரக நெல் விதைகளுக்குச் சொல்லப்படும் தாரக மந்திரம். ஆனால், அதைச் சாகுபடி செய்வதற்குள் மூட்டைக் கணக்கில் ரசாயன உரங்களையும்... லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் அள்ளி இறைக்க வேண்டியிருக்கும். அதேசமயம், இவ்வளவெல்லாம் பாடுபடாமல், இயற்கை முறையிலேயே வீரிய ரகங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடிய பாரம்பரிய விதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.


1 ஏக்கர்... 3 மாதம்... 20,000...
குறைவில்லாமல் லாபம் கொடுக்கும் குள்ளங்கார் நெல்...
'குறைந்த நாட்களில், அதிக மகசூல்’ என்பதுதான் வீரிய ஒட்டு ரக நெல் விதைகளுக்குச் சொல்லப்படும் தாரக மந்திரம். ஆனால், அதைச் சாகுபடி செய்வதற்குள் மூட்டைக் கணக்கில் ரசாயன உரங்களையும்... லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் அள்ளி இறைக்க வேண்டியிருக்கும். அதேசமயம், இவ்வளவெல்லாம் பாடுபடாமல், இயற்கை முறையிலேயே வீரிய ரகங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடிய பாரம்பரிய விதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நூறு ஏக்கருக்கு... இரண்டே வேலையாள்..

ஏக்கருக்கு 42 மரங்கள்.

இடுபொருட்களே தேவையில்லை.
களையெடுக்கும் கால்நடைகள்.

காவேரிராஜபுரம்...  அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் பெரிய அளவு இல்லை. அதேகதைதான் இங்குள்ள பெரும்பாலான மாந்தோட்டங்களிலும். ஆனால், 'லியோ இயற்கை வேளாண் பண்ணை'யில் மட்டும் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காரணம்... ''முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே நான் பராமரிக்கறதுதாங்க'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார், பண்ணைக்குச் சொந்தக்காரர்களில் ஒருவரான பாரதி!

Monday

தனம் தரும் சந்தனம்

தனம் தரும் சந்தனம்
வேம்பு வளரும் இடங்களில் வளரும்.
ஏக்கருக்கு 200 மரங்கள்.
ஒரு மரம்  50 ஆயிரம்.
 ஒரு ஏக்கரில் இருந்து வருமானம் பார்க்க முடியுமா? என்றால்... நிச்சயம் முடியும். அதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.... சந்தன மரங்களை நடவு செய்தாலே போதும்!

கூடுதல் லாபம் + இயற்கை உரம்... ஊடுபயிர் தரும் இனிய வரம்!

கூடுதல் லாபம் + இயற்கை உரம்...
ஊடுபயிர் தரும் இனிய வரம்!
 ''மண்ணையும் வளமாக்கி, மரத்தையும் செழிப்பாக்கும் கோகோவைவிட, தென்னைக்கு சிறந்த ஊடுபயிர் எதுவும் இல்லை. கோகோவுல இருந்து அதிகளவுல இலைகள் உதிர்ந்துகிட்டே இருக்கறதுனால, மண்ணுல தழைச்சத்தும் நுண்ணூட்டமும் அதிகமாகுது'' என்று சான்றிதழ் கொடுக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன். இவர், வழக்கறிஞரும்கூட!

18 மாதம்... ரூ. 3,60,000 ரூபாய்... ''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!

18 மாதம்... ரூ. 3,60,000 ரூபாய்...
''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!
அன்றாடம் தேவைப்படும் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய விளைபொருட்களில் வாழை இலையும் ஒன்று. கோயில் விழாக்கள், குடும்ப விழாக்கள்... என எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அங்கே வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய சந்தை வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இலைக்காகவே வாழை சாகுபடி செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவராகத் தொடர்ந்து இயற்கை முறையில் இலை வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அடுத்துள்ள பெரியவீரச்சங்கிலி கிராமத்தைச் சேர்ந்த நல்லசிவம்.

Thursday

செடி வளர்ப்பில் செல்வம் கொழிக்குது

அழகு, பயன் தரும் செடிகளை வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். வீடு, நிறுவனங்களில் இவை முக்கிய இடம் பிடிப்பதால் செடிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு நாற்றுப்பண்ணை (நர்சரி) நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவையில் ரோஜா ராஜா நர்சரி கார்டன் நடத்தி வரும் விஜயகுமார். அவர் கூறியதாவது: கோவையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது அழகு செடிகளுக்கான தேவை அதிகம் உள்ளது குறித்து அறிந்துகொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன் கோவை அவிநாசி சாலையில் நாற்று பண்ணை தொடங்கினேன். முதலில் குறைந்த விலையுள்ள அழகு, பழ செடிகளை விற்றேன். பின்னர் படிப்படியாக அனைத்து வகை செடிகளையும் விற்க தொடங்கினேன். ஒரு செடியை ரூ.1 லட்சம் வரை கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள். ரோஜா உள்ளிட்ட மலர்செடிகள், புல் வகைகள், லில்லி, தாமரை, ஆர்கிட்ஸ், அந்தூரியம், சைக்கஸ் பல்வேறு வகை செடிகளை விற்கிறோம்.

ஏக்கருக்கு 40 குவிண்டால்....






ஏக்கருக்கு 40 குவிண்டால்....
சொட்டுநீர் + இயற்கைக் கூட்டணி... மக்காச் சோளத்தின் மகசூல் பேரணி ! 
பாத்தி பிடிக்க தேவையில்லை.

வளர்ச்சியைக் கூட்டும் பஞ்சகவ்யா.
ரசாயனத்தில் 30 குவிண்டால்.
இயற்கையில் 40 குவிண்டால்.

இறவைப் பாசனம் மற்றும் மானாவாரி இரண்டுக்குமே ஏற்றது; அதிக தண்ணீர் மற்றும் பராமரிப்பு தேவையே இல்லை; குறுகிய காலத்தில் மகசூல்; ஓரளவுக்குக் கட்டுபடியான விலை; வில்லங்கமில்லாத விற்பனை என்பது போன்ற பல காரணங்களால், மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Friday

9 ஏக்கர்...8 லட்சம்....

9 ஏக்கர்...8 லட்சம்.... 
உலகுக்கே பாடம் சொல்லும் ஒருங்கிணந்த பண்ணை ! 

விவசாயம்+ ஆடு, மாடு, 

கோழி, மற்றும் மீன் வளர்ப்பு.
பால் நேரடி விற்பனை.  
மதிப்புக்கூட்டி விற்பதால் கூடுதல் வருமானம்.

''நெல் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கணவன்-மனைவி மாதிரி. இதுல ஏதாவது ஒண்ணு இல்லைனாலும்...

Wednesday

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் ""ஆடு வளர்ப்பு'' ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

Thursday

சிப்பிக்காளான் வளர்ப்பு 200 சதுர அடி குடிசையில் மாதம் ரூ.10 ஆயிரம்

குறைந்த இடவசதியே போதும். ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ. மாதம் ரூபாய் பத்தாயிரம் வருமானம்.

''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி.