மரபணு பொறியியல்
என்பது மரபணுவை நேரடியாக கையாண்டு உருவாக்கப்படும் விளைவுகளைக் குறிக்கும். கூடிய உற்பத்தி
தரும் விதைகள் பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (Genetically modifie
organism), செயற்கை உடல் உறுப்புகள்
(Artificial Organ), செயற்கை இன்சுலின் என பல தரப்பட்ட பயன் பாடுகள் மரபணு பொறியியலுக்கு
உண்டு.
இது இன்னும் வளர்ச்சி
பெற்றுவரும் ஒரு தொழில்நுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும் சில பக்க
விளைவுகளும் உண்டு. எடுத்துக்காடாக புதிய வகை உயிரினங் களை உருவாகும் பொழுது அவை சில
வேளைகளில் சூழ்நிலை மண்ட லங்களுக்கு ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு மாற்றப்பட்ட சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின்
சுவை சற்று குறைந்துள்ள தாக கூறப்படுகிறது.
மரபணு பொறியாளர்கள்
சிலபோது நீர்ப்பாசனம், வடிகால் பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவற்றை ஈடுசெய்யக் கூடிய
மரபணு மாற்ற தாவரங்களை உருவாக்கலாம். அல்லது விளைச்சலை தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்
கவோ செய்யலாம்.
இதுபோன்ற உரு வாக்கங்கள்
சாதாரணமாக உலர்ந்தும் தொடர்ந்து நீர்ப்பாசனம் தேவைப்படு வதாகவும் உள்ள பகுதிகளிலும்
பெரிய அளவிலான பண்ணைகளிலும் தொட ரலாம். இருப்பினும், தாவரங்களின் மரபணு பொறியியல் முரண்பாடுள்ளது
என்பதையே நிரூபித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பையும்
சுற்றுச் சூழல் தாக்கங்களையும் சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளும் மரபணு மாற்ற முறைகள்
குறித்தே எழுந்துள்ளன.
நோய் எதிர்ப்பு
விதைகள் தற்போது கடுமையான சர்வதேச எதிர்ப்பையும் உலகளவில் தடைசெய்வதற்கான தொடர் முயற்சிகளையும்
எதிர்கொள்கிறது.
மற்றொரு முரண்பாடான
பிரச்சினை மரபணு மாற்ற விதையை உருவாகும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமை
பாதுகாப்பு ஆகும். நிறுவ னங்கள் தங்கள் விதைகளுக்கான அறிவுசார் உரிமையைப் பெற்றிருப்ப
தால், தங்கள் காப்புரிமை பெற்ற தயாரிப்பிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிவிக்கும்
அதிகாரத் தைப் பெற்றிருக்கின்றன.
தற்போது உலகின்
விதை விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கை பத்து விதை நிறுவ னங்கள் கட்டுப்படுத்துகின்றன.
இந்த நிறுவனங்கள் வாழ்க்கையை காப்புரிமை செய்வதாலும் இலாபத்திற்காக உயிர்ப் பொருட்களை
பயன்படுத்திக் கொள்வ தாலும் உயிர்மத் திருட்டு என்ற குற்ற த்தை செய்பவர்கள் என வாதிடுகிறார்
கள். காப்புரிமை பெற்ற விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் அதற்கடு த்து பயிரிடுவதற்காக
அவற்றை சேமி த்து வைப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார் கள். அது விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும்
புதிய விதைகளை வாங்கும் நிலைக்கு ஆளாக்குகிறது.
பெரும்பாலான பயிர்களில்
சாகுபடி செய்யும் பொழுது அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால்,
மரபணு மாற்றப்பட்ட பயிர் களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்
தித்தான் பெற வேண்டும்.
வளர்ந்த நாடுகளிலும்
வளரும் நாடுகளிலும் விதை சேமிப்பு என்பது விவசாயி களுக்கு ஒரு பாரம்பரியமான முறை யாக
இருப்பதால் மரபணு மாற்ற விதைகள் அவர்களது விதை பாதுகாப்பு முறையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்
புதிய விதை வாங்கும் முறைக்கு மாற சட்ட பூர்வமான முறையில் கட்டாயப் படுத்துகிறது.
ஆரம்பத்தில் இவற்றைப்
பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்களை, பிற் காலத்தில் கட்டணத்தை
உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து
விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இதனால்
பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப் போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்க வும் சாத்தியக்கூறு
உள்ளதாகவும் ஆர் வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மரபணுப் பொறியியல்
என்பது உயிரித் தொழில் நுட்பத்தின் ஒரு பிரிவாகும். இது தாவர நோய்கள் மற்றும் நோய்ப்பூச்சிகளிடம்
போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மரபணுப் பொறியியல்
பயிர் வளர்ப் பவர்களுக்கு புதிய பயிர்களுக்கான விரும்பிய விதை முளைகளை உரு வாக்கிக்
கொள்வதற்குப் பயன்படுத் திக்கொள்ளும் விதத்தில் மரபணுக்கள் கிடைக்கச் செய்வதை ஊக்குவிக்கிறது.
1960 ஆம் ஆண்டுகளில்
இயந்திரமய உருளைக்கிழங்கை அறுவடையாளர்கள் உருவாக்கிய பிறகு, விவசாய விஞ்ஞானி கள் இயந்திரமயமாக
கையாளுவதற்கு ஏற்ற வகையில் அதிக, எதிர்ப்புத் திறனுள்ள உருளைக் கிழங்குகளை மரபணு ரீதியில்
மேம்படுத்தியுள்ளனர். மிகச் சமீபத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலும், பிற பயன்தரும்
தன்மை கொண்டவற்றோடு பயிர்களை உருவாக்கும் விதமாக மரபணுப் பொறியியல் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணற்ற நன்மைகள்
பெறப்பட்டா லும் சமூக நெறிமுறைகளுக்கு ஏற்ற மரபணு தொழில்நுட்பங்களுக்கு குறிப் பிட்ட
முன்னேற்றம் காணும்போது எதிர்பாராத வகையில் உயர்கொல்லி நோய்கள் அல்லது மரபணு பேருருத்
தன்மைக்குக் காரணமான சில புதிய நச்சுக்கிருமிகள் உருவாகக்கூடும்.
சில கட்டுப்பாட்டுடன்
கூடிய பரிசோதனைத் தளங்களின் மூலமாக ஆய்வு செய்ததில் மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்துவதால்
பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தின் அளவு கணிசமாகக் குறைந் துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள். ஆனால் விவசாய நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்தால் மண்ணின்
தன்மையுடன் நுண்ணுயிரின் மரபணு எப்படிச் செயல்படும் என்று ஆராய்ச்சி யாளர்களால் திட்டவட்டமாகச்
சொல்ல முடியவில்லை.
மரபணு மாற்ற உயிர்கள்
காட்டு உயிர்களுடன் கலப்பு சேர்க்கை கொண்டு இயற்கையான இனங்களின் மரபு ஒருங்கிணைப்பை
நிலையாக மாற்றிவிடும் என்ற கவலையும் உள்ளது. மரபணுமாற்ற இனங்களில் உள்ள மரபணு சம்பந்தப்பட்ட
களை உயிர்களிடத்திலும் சென்று சேர்கிறது என்பதும், மரபணு மாற்றப்படாத பயிர்களோடு கலப்பு
சேர்க்கை செய்துவிடுகின்றன என்பதும் கவலைக்குரியதாக உள்ளது.
மரபணு பொறியியலின்
இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளை யும் பயிர்களை
அழிப்பது உள்ளது.
அத்தியாவசிய மரபுரிமையைப்
பெற்றிருக்கும் உள்ளூரில் உருவாக்கப் பட்ட விதைகள் தற்போதைய கலப்பு பயிர்கள் மற்றும்
மரபணு மாற்ற விதை களிடம் தொலைந்து போகக்கூடிய சூழ்நிலையைப் பெற்றிருக்கின்றன.
நில இனங்கள் அல்லது
பயிர்சூழல் வகை என்றும் அழைக்கப்படுகிற உள்ளூரில் உருவாக்கப்பட்ட விதைகள் குறிப்பிட்ட
நுண் காலநிலைகள், மண், பிற சுற்றுச் சூழல் நிலைகள், நில அமைப்புகள், மற்றும் பயிரிடுவதற்கு
உரிய இடத்திற்கு மட்டுமான உள்நாட்டு முன்னுரிமை என்பவனவற்றை காலத்தை தாண்டிய திறனைப்
பெற்றிருப்பதால் அவை முக்கியத்துவம் வாய்ந்தவை யாகும்.
ஒரு பகுதியில்
கலப்பு வணிக விதை களையும், மரபணு மாற்ற விதைகளை யும் அறிமுகப்படுத்துவது உள்ளூர் நில
இனங்களோடு கலப்பு சேர்க்கைக்கான அபாயத்தை கொண்டு வருகிறது. ஆகவே மரபணு மாற்றம் நில
இனங் களின் நீடிப்புத் தன்மை மற்றும் பாரம் பரிய கலாசாரங்களை அச்சமூட்டுகிறது.
மரபணுப் பொறியியல்
முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும்
உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப்
புதைவதனால் மண் முழுவதும் நச்சுத் தன்மை கொண்டதாக மாறி விடுகிறது.
இந்த நச்சுத் தன்மையையும்
அப்பயிர் கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்தி ற்கு சேவை
செய்யும் தேனீ சுருள் பூச்சி வண்ணத்துப் பூச்சி மற்றும் முக் கியமாக விவசாயிகளின் நண்பனாக
மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங் களில் மேயும் ஆடு,
மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன.
ஆந்திராவில் பி.டி
பருத்திச் செடியை சாப்பிட்ட 1500 க்கும் மேற்பட்ட ஆடு கள் இறந்துவிட்டன. ஆந்திராவில்
கரீம் நகரிலிருந்து 80 கி. மீ. தொலை வில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத் தில் பி. டி.
பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.
சில காலத்திற்கு
முன்னதாக மான் சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக் கப்பட்ட
பருத்தி விதைகளை இந்தியா வில் அறிமுகப்படுத்தியது. அதிக சிறந்த அறுவடை கிடைக்கும் என்ற
இந்த கம்பெனியின் பொய்ப் பிரசார த்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த
விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடி யும் பயிரிட முடியாத மலட்டு விதை கள் என்பதாலும்
அதிக அறுவடை கிடைக்காததாலும் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.
Source: http://www.thinakaran.lk/2012/11/06/?fn=f1211062
No comments:
Post a Comment