Wednesday

மண்புழு உரத்தின் சிறப்பியல்புகள்

நீர்சேகரிப்புத் தன்மை அதிகம். மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாத்து பயிர்களுக்கு அதிக நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்கிறது.
நிலத்தில் மண்புழு உரம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நிலத்தின் அங்ககச் சத்துக்கள் அதிகரிக்கிறது. நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், உயிரினங்கள், மண்புழுவின் வளர்ச்சி ஆகியவைகளால் மண் இளக்கம் அடைந்து காற்றோட்ட வசதி மற்றும் மண்களின் கெட்டித் தன்மை மாற்றம் ஏற்பட்டு வடிகால் வசதி ஊக்குகிறது.
பயிர்களுக்குத் தேவையான சமச்சீரான பேரூட்டச்சத்துக்கள் நுண்ணூட்டச் சத்துக்களை பயிர்களுக்கு எடுத்துச் செல்கிறது.
ரசாயன உரங்களைப் போல் எந்த பின் விளைவுகளையும் உண்டாக்குவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியையும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் மண்புழு உரம் அளிப்பதால் நோய் இயற்கையிலேயே கட்டுப்படுத்தப்படுவதால், ருசியான சத்துள்ள உணவுப் பொருட்கள் நமக்குக் கிடைக்கிறது. தொழுஉரம் இடுவதால் களைகள் முளைக்கும். ஆனால், மண்புழு உரம் மக்கிய நிலையில் இருப்பதால் களைகள் முளைக்காது.
காய்கறிகளின் நிறம், மணம், சுவை அதிகரிக்கிறது.
காய்கள், கனிகள், தானியங்கள் இயற்கையாக வளர்வதால் அவற்றில் இருப்புத்தன்மை (Storage Capacity) கூடுகிறது. உதாரணமாக 5 நாட்கள் தற்போது வைத்திருக்கும் பொருட்கள் 10 நாட்கள் வரை வைத்திருக்க முடியும்.
வெளி நாடுகளுக்கு விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கிறது. தாவரங்களின் இயற்கை பசுமை மாறாமல் அழகு கூட்டுகிறது. நாட்டின் பொருளாதாரம் வளம் பெறுகிறது. அன்னிய செலாவணி பாதுகாக்கப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரத்தை தாங்களே தயாரிப்பதால் விவசாய இடுபொருள் செலவு குறைந்து பொருளாதார தன்னிறைவு பெறுகின்றனர்.
ஏற்கனவே உள்ள எண்ணற்ற நோய்கள் மேலும் புதுப்புது நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்துகிறது. உணவே மருந்தாகும். சத்துள்ள உணவு, தூய்மையான காற்று, குடிநீர் இவைகள் அனைத்தையும் நமக்கு வழங்கியது மண்புழு உரமே ஆகும்.
பசுமை புரட்சிக்குப்பின் தற்போது ""மண்புழு'' நாட்டை நோய் நொடிகளிலிருந்து காக்கும்.
உற்பத்தி மற்றும் விற்பனை: மண்புழு, மண்புழு உரம், பஞ்சகாவ்யம், மூலிகை பூச்சி விரட்டி, மண்புழு உரப்பண்ணை அமைத்தல், இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கப்படும். 

தொடர்புக்கு: 98426 88456, 98425 24480
என்.பழனிச்சாமி,
கு.கு.மண்புழு உரத்தொழிற்சாலை,
பாண்டியராஜபுரம், மதுரை மாவட்டம்.

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19496&ncat=7

No comments: