Wednesday

வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள்


வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் பண்டைக்காலம் முதலே தொன்று தொட்டு அனைத்து மக்களாலும் உண்ணப்பட்டு வந்துள்ளது. வாத்து இறைச்சியில் மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முக்கியமாக அதிக அளவிலான பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. தற்போது கோழி இறைச்சி பிரபலமடைந்துள்ளது போல் வாத்து இறைச்சி அனைவராலும் விரும்பி உண்ணப்படுவதில்லை.


சாதாரணமாக, வாத்துக்கள் அதிக அளவில் பெரிய முட்டைகளை இடவல்லவை. மேலும் வாத்துக்களை வீட்டுப்புறத்தில் வளர்ப்பதன் மூலம் வீட்டின் அன்றாடத் தேவையான உணவும், வருமானமும், கிடைக்க ஏதுவாக அமையும். அது மட்டுமல்லாமல் வாத்துக்கள் குறைந்த அளவிலான தீவனத்தை உட்கொண்டு நல்ல உடல் எடையை அடைந்து முட்டையிடும் திறனையும் கொண்டுள்ளதால், குறைவான உற்பத்திச் செலவில் வாத்துக்களை வளர்த்து அதிக இலாபம் அடையலாம்.

சாண எரிவாயு தயாரிப்பு

'வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது போல, தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. 'ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்...’ என கறார் காட்டுகிறது, அரசு. 'இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே எரிகிறது, சாமானியனின் வயிறு.

Monday

ஏக்கருக்கு ஒரு லட்சம்... பந்தல் காய்கறி... பக்காவான வருமானம்...


ஏக்கருக்கு ஒரு லட்சம்... பந்தல் காய்கறி... பக்காவான வருமானம்...
குதூகலமூட்டும் குறும்புடலை!
'வேலையாட்கள் குறைவாகத்தான் தேவைப்பட வேண்டும்; அதிக வேலை வைக்கக் கூடாது; நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும்...'
-நீங்கள், இப்படியெல்லாம் கணக்குப் போட்டு விவசாயம் செய்பவராக இருந்தால், உங்களுக்கான விவசாயம்... பந்தல் காய்கறிகளாகத்தான் இருக்க முடியும். ஆம், இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் விவசாயிகள் பலரும், தொடர்ந்து பந்தல் வகை காய்கறிகளைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்... திருவண்ணாமலை, வேங்கிக்கால், சுரேஷ்குமார்! இவர், குறும்புடலை சாகுபடியில், குதூகல வருமானம் பார்த்துக் கொண்டிருப்பவர்!

Sunday

கல்வி, விவசாயம், கழிவுநீர் மேம்பாடு உட்பட பல துறைகளில் தமிழகத்திற்கு கைகொடுக்கும் இஸ்ரேல்

சென்னை அருகே நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி மூலம் வேளாண்மைக¢கு பயன்படுத்துதல் போன்றவற்றில் இஸ்ரேல் & தமிழகம் இடையே தொழில் உறவுகள் மேம்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்று  இந்தியாவுக¢கான இஸ்ரேலிய தூதர் அலான் உஷ்பிஸ் தெரிவித்தார்.

Friday

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி
காய்கறி விவசாயம் எப்போதுமே கைவிடாது’ என்பதை அனைத்து விவசாயிகளுமே நன்கு புரிந்து வைத்திருப்பர். ஆனால், பாசன வசதி இருந்தால் மட்டுமே காய்கறி விவசாயம் சாத்தியப்படும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்... கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதி விவசாயிகள் மானாவாரியில் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்... என காய்கறிகளை சாகுபடி செய்து கலக்கி வருகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் பருவமழை, அதிகளவில் வெயிலும், குளிரும் இல்லாத மிதமானச் சூழல் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துவதுதான் இவர்களின் வெற்றிக்கான சூத்திரம்!
கர்நாடக மாநிலம், உடையார்பாளையா பகுதியைச் சேர்ந்தவர், ராபர்ட். இவர், கேழ்வரகு, கொடி பீன்ஸ் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறார். விட்டு விட்டுப் பெய்த லேசான மழைத் தூறலில் நனைந்தபடியே அவருடைய வயலுக்குள் நுழைந்தோம்.

தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்


தலைச்சேரி... சிரோஹி... போயர்... 4 ஆண்டுகளில் 50 லட்சம்...
அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!
ஆசை இருக்கு அரசாள... அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க’ என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட... இது மேல் என்று சொல்லும் அளவுக்கு... மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல்!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகளவில் உருவாகி வரும் ஆட்டுப்பண்ணைகளே அதற்கு சாட்சி! அவர்களில் ஒருவராக... நிறைவான லாபம் பார்த்து வருகிறார்,

Thursday

4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம் - கைகொடுத்த மரம் வளர்ப்பு!

4 ஏக்கர்... 7 ஆண்டு... 20 லட்சம்

விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்வாழ்க்கை முறை, பணிச்சூழல் ஆகிய காரணங்களால், விவசாயத்தைத் தொடர முடியாத பலரும், நிலங்களைப் பராமரிக்க முடியாமல், விற்று விடுவது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட நிலத்தை விற்க மனமில்லாமல், அதில் மரங்களை வளர்த்து, விவசாயத்தைத் தொடர்பவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர்சென்னை, மாங்காடு, விநாயகமூர்த்தி.

குன்றத்தூர் நால்ரோட்டிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் குறுகிய சாலையில் இரண்டு நிமிடம் பயணித்தால், சிமெண்ட் காம்பவுண்டுக்குள் கம்பீரமாகக் காட்சி தருகிறது