பதிவேடுகள் என்றால்
நாம் நம் பண்ணையில் செய்யக்கூடியவைகளையும் பண்ணைகளில் கவனிக்க வேண்டியவைகளையும் ஒரு
குறிப்பிட்ட படிவத்தில் குறித்து வைத்துக் கொள்வதுதான். பதிவேடுகள்தான் பண்ணையின் திறனாய்வுக்கு
உதவியாய் உள்ளவை.
பதிவேடுகள் ஒரு பண்ணையில்
வரவு செலவுகள், அங்குள்ள ஆடுகளின்
திறன் மற்றும் ஆடுகளின் முக்கிய பொருளாதார குணங்களை அறிய உதவுகின்றன. பதிவேடுகள் உபயோகத்திற்குத்
தகுந்த முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். பதிவேடுகள் பராமரிக்கப்படாத
ஆட்டு மந்தைகளின் மதிப்பு குறைத்தே மதிப்பிடப்படும்.
உதாரணமாக ஓர் ஆட்டுப்பண்ணையில்
ஒவ்வொரு ஆட்டின் பாராம்பரியம், அதன் திறன்,
வளர்ச்சி போன்ற மற்ற விவரங்கள்
பதிவேடுகள் மூலம்தான் அறியப் படுகிறது. எனவே குறைந்தபட்சம் சில முக்கிய தகவல்கள் கிடைப்பதற்காக
வேண்டியாவது சில பதிவேடுகள் அவசியம் வைக்க வேண்டும். தற்போது நாம் ஒரு வெள்ளாட்டுப்
பண்ணையில் வைக்கப்பட வேண்டிய முக்கியமான பதிவேடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.