Sunday

வெகுமதி கொடுக்கும் வெள்ளரி! 60 சென்ட்... 3 மாதங்கள்... 47 ஆயிரம்!

வெகுமதி கொடுக்கும் வெள்ளரி!
60 சென்ட்... 3 மாதங்கள்... 47 ஆயிரம்!
சுட்டெரிக்கும் கோடை வெயில் காலங்களில் பகல் நேரப் பேருந்துப் பயணங்களை குளிர்ச்சியாக மாற்றுவது, ஜன்னல் ஓரங்களில் விற்கப்படும் 'நாட்டு வெள்ளரிக்காய்’ பிஞ்சுகள்தான். பயணிகளைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையோடு சாகுபடி செய்யும் விவசாயிகளின் மனதையும் வருமானத்தால் குளிர்ச்சியடைய வைக்கிறது, வெள்ளரி. இந்த சூட்சமம் தெரிந்த பலரும் கோடை காலத்தில் அறுவடைக்கு வருவது போல வெள்ளரியை சாகுபடி செய்வது வழக்கம்.

Saturday

தண்ணியில்லா காட்டுக்கு மிளகாய்... கூடவே ஜோடி போட சீரகம்...


தண்ணியில்லா காட்டுக்கு மிளகாய்... கூடவே ஜோடி போட சீரகம்...
கவலையை விரட்டும் கலப்புப் பயிர்கள்!
உணவின் உன்னதம் பசியில் வாடுபவர்களுக்குத்தான் தெரியும். அதேபோல, தண்ணீரின் அருமை, வறண்டப் பகுதி விவசாயிகளுக்குத்தான் தெரியும். அந்த வகையில், தமிழகத்தில் தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைத்தான் சொல்ல முடியும். மழை நீரை நம்பி... அல்லது சிலர் அமைத்திருக்கும் குழாய்க் கிணறுகளில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கித்தான் விவசாயம் செய்ய வேண்டும். இதுதான் இம்மாவட்டத்தில் காலகாலமாக நிதர்சனம்.

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்... பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்... பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!
காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கள்.