Friday

அன்னாசி சாகுபடி


மலைச்சரிவுகளில் மட்டுமே நல்ல விளைச்சல் தரக்கூடிய அன்னாசிப் பயிரை, தட்ப வெப்பநிலை இயைந்து வரும் சமவெளிப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், ஆற்றுப்படுகை கிராமங்களில் ஒட்டுமொத்தமாக நெல் சாகுபடி செய்வது போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்கவே அன்னாசியை சாகுபடி செய்து வருகிறார்கள்!

தலைமுறைகளைக் கடந்த அன்னாசி சாகுபடி!
தக்கலையிலிருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையில் மலவிளையைத் தாண்டியதும் வருகிறது, கொட்டூர் எனப்படும் மலையடிவார கிராமம். ஊருக்குள் நுழையும் போதே  அன்னாசிப் பழ வாசனை மூக்கைத் துளைக்கிறது. அன்னாசிக்கு ஊடாகத்தான் வீடுகளை எழுப்பி இருக்கிறார்களோ.. என நினைக்கும் வகையில், அன்னாசித் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. கிராமம்! தலைமுறைகளைக் கடந்து அன்னாசி சாகுபடியைக் கொண்டாடி வருகிறார்கள், மக்கள். காரணம் , அது கொடுக்கும்

Thursday

மண்புழு உரம் தயாரித்தல் விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும்

உடன்குடி வட்டாரம் சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சியில் பெரியபுரம் கிராமத் தில் விவசாயிகள் பங்கேற்ற மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நடைபெற்றது.அதில் உடன்குடி வேளாண்மை உதவி இயக்குநர் .பாரதி முன்னிலையில் தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) .மலர்விழி மண்புழு உரம் தயாரித்தலின் செயல்முறைகளை விளக்கங்களுடன் கூறினார்.அவர் கூறியதாவது:
 மண்புழுவைக் கொண்டு மக்கு உரம் தயாரிக்க சாணம், மண் மற்றும் நிழலான இடம் தேவைப்படும். நன்கு சமமான சற்றே மேடான நிலப் பகுதியில் 3 மீட்டர் அகலம் 2 மீட்டர் நீளம், 1 அடி ஆழத்திற்கு தொட்டி அமைக்க வேண்டும். அடியில் உடைத்த செங்கல் மற்றும் மணல் பரப்ப வேண்டும்.

Wednesday

மா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை


Aadu Valarppu

மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மூலம் லாபம் பார்க்கலாம்,'' என்கிறார், வாசுதேவன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தேவி நாயக்கன்பட்டியில் உள்ள "அருவங்காடு' தோட்டத்திற்கு சொந்தக்காரரான வாசுதேவன், கவிதா தம்பதியினர் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

Thursday

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி!


பலம் தரும் பஞ்சகவ்யா... விரட்டியடிக்கும் வசம்பு...

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி!

வீரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... பாரம்பரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... அதிக பாடும் இல்லாமல்... பண்டுதமும் பார்க்காமல்... எளிதான சாகுபடி மூலமாகவே... நிறைவான லாபத்தைப் பார்ப்பதுதான் இயற்கை வழி விவசாயச் சூத்திரத்தின் குறிக்கோள்!
இதைச் சரியாகப் புரிந்துகொண்ட விவசாயிகளில் ஒருவராக, இயற்கை முறையில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை சாகுபடி செய்து அசத்தலான வெற்றியை அறுவடை செய்து வருகிறார்... திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்.
''பரம்பரையா விவசாயம்தான் தொழில். நெல் அரவை மில், உரக்கடையெல்லாம் அப்பா வெச்சுருந்தார். நான் ஊட்டி கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சுட்டிருந்தேன். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பத்தியும், அவர் இயற்கை விவசாயம் செஞ்சதைப் பத்தியும் ஸ்கூல்ல தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் லீவுக்கு வரும்போது, அப்பாகிட்ட சொல்லுவேன். அதையெல்லாம் கேட்டுட்டு,