Monday

செண்டுமல்லி 77 ஆயிரம் ரூபாய்…குண்டுமல்லி 34 ஆயிரம் ரூபாய்…

 மகத்தான லாபம் கொடுக்கும் மலர்கள் 

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

விவசாயத்தில் ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் எனக் கிடைக்குமாறு பிரித்துக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று விவசாய வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி வருமானம் தரும் பயிர்களில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்றவை தினசரி வருமானத்துக்கு ஏற்ற பயிர்களாக இருந்தாலும், அவற்றில் முதலிடம் வகிப்பவை பூக்கள்தான்!

Wednesday

சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 20 டன் மகசூல்


சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று லாபம் அடையலாம் என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சின்ன வெங்காயம் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் வளர்ச்சிக்கு 15 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அவசியம். நன்கு தண்ணீர் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும்.
மண்ணின் கார, அமிலத் தன்மை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருத்தல் சிறந்தது. மண் ஆழம் குறைவாக இருந்தாலே போதுமானது.

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு

அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம்.