Tuesday

ஆண்டுக்கு 400 காய்கள்...

ஆண்டுக்கு 400 காய்கள்...
இனிக்கும் இளநீர்...கொழிக்கும் மகசூல்...!

'தென்னை செழித்தால்... பண்ணை செழிக்கும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை உண்மையாக்கி, தனது வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும்! இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு!
இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், 'தென்னையில் பெரிதாக லாபம் இல்லை’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக இருக்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலத்தான் தேங்காயின் விலை நிரந்தரமாக 2 ரூபாய் 3 ரூபாய் என்றே நீடித்துக் கொண்டிருக்கிறது! ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரி என்கிற வகையில்தான் பலரும் தென்னை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

Wednesday

பசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...

பசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...
மல்லிகை சாகுபடிக்கு கை கொடுக்கும் 'ஃபாகர்’...
பனிக்காலத்திலும் பணம் பார்க்கலாம்...

'ஊரெல்லாம் செய்ற மாதிரிதான் நானும் விவசாயம் செய்றேன். ஆனா, வருமானம் மட்டும் வர மாட்டேங்குதே’ என்று சொல்லிக்கொண்டிருக்காமல்... 'இருப்பதை வைத்து வருமானம் பார்க்கும் வழி என்ன?’ என யோசித்து, புதுமைகளைப் புகுத்தி சாதனை படைக்கும் விவசாயிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்தவகையில், வழக்கமான விவசாய முறையிலிருந்து கொஞ்சம் மாற்றி சிந்தித்ததால்... மணமான வருமானம் பார்த்து வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்.

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்..

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...
கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்!
தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு... என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
மனைவி சிவகாமி மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, கீரை வயலில் வேலையாக இருந்த பொன்னுசாமியை சந்தித்தோம்.

தெளிப்புநீர்ப் பாசனம் மூலம் கீரை சாகுபடி

தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு… என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.

மனைவி சிவகாமி மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, கீரை வயலில் வேலையாக இருந்த பொன்னுசாமியை சந்தித்தோம்.
‘சுளீர் சுளீர்’ என சுழன்று பூமியில் இருந்து புறப்பட்ட ஊற்றுகள் போல, தண்ணீரைத் தூவிக்கொண்டு இருந்தன ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தெளிப்பு நீர்க் கருவிகள்.