Wednesday

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயி


மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி, வாடிப்பட்டி அருகே திருவாலவாயநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதியில் ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இடையில் 8 ஆண்டுகளாக முற்றிலும் இயற்கை வழி விவசாயத்தை மேற்கொண்டுள்ள பார்த்தசாரதி, "ரசாயன உரங்களால் உடல்நலத்துக்கு கேடு விளைகிறது. எனவே இயற்கை உரங்களை பயன்படுத்துகிறேன்,' என்கிறார்.


திருவாலவாயநல்லூரில், 25 ஏக்கரில் இவரது விவசாய நிலம் பரந்து விரிந்துள்ளது. பெரும்பாலும் தென்னை மரங்களே நிறைந்துள்ளன. அவர் தென்னையின் காய்களை மட்டுமே பறிக்கிறார். அடிமுதல் நுனிவரை பயன்படும் தென்னையின் ஓலைகள், மட்டைகள் எதையும் அவர் தொடுவதில்லை. அவை அப்படியே மரங் களினூடே தரையில் கிடந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போகின்றன. இதனால் நுண்ணூட்டச்சத்துக்கள் அப்படியே மண்ணில் தங்குகின்றன.

ஜப்பானியக் காடைவளர்ப்பு


ஜப்பானியக்காடை கோழிகள் சிறிய கூண்டுகளில் வாழக்கூடும் ஒரு திடமான பறவை இனமாகும். கறி மற்றும் முட்டைக் கோழிகளில் காணப்படும் பொதுவான நோய்களுக்கு காடைகள் மட்டும் விதிவிலக்கல்ல.

இனம் குஞ்சுகளைப் பராமரித்தல்: புதிதாக பொறிக்கப்பட்ட காடைக் குஞ்சுகள் மிகவும் சிறியதாக (6-7 கிராம் எடை) காணப்படும். இந்த இனம் குஞ்சுகளுக்கு சரியான அடைகாத்தலுக்குரிய சீதோஷ்ண நிலையை உருவாக்கிக் கொடுப்பது மிக மிக அவசியமானதாகும். இக்குஞ்சுகளுக்குப் பிறந்த நாள் முதல் 3-4 வார வயது வரை கூடுதல் வெப்பம் தேவைப்படுகிறது. ஒரு வர்த்தக வெப்பப் பதனக்கருவி மூலமோ அல்லது மின் விளக்குகள் மூலமோ போதுமான அளவு வெப்பத்தை வெற்றிகரமாக கொடுக்க இயலும்.

Sunday

சத்தான வருமானம் தரும் சம்பங்கி..! 70 சென்ட் நிலத்தில்... ஆண்டுக்கு 3 லட்சம்!


சத்தான வருமானம் தரும் சம்பங்கி..!
70 சென்ட் நிலத்தில்... ஆண்டுக்கு 3 லட்சம்!
'ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தில், வருட வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் என்று கிடைக்குமாறு கலப்புப் பயிர்களை சாகுபடி செய்தால்... நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்பதுதான் காலகாலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதை நிரூபிக்கும் விவசாயிகளும் இங்கே நிறைய! அந்த வகையில், தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் முதலிடத்தில் இருப்பது மலர்கள். குறிப்பாக, சம்பங்கி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தினசரி வருமானத்துக்குப் பஞ்சமே இல்லை. அதனால்தான் பலரும் சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள ரெங்கப்பநாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன்.

மல்பெரி பயிரிடுங்கள்... மாத வருமானம் பெற்றிடுங்கள்!’ பட்டு விவசாயத்துக்கு

மல்பெரி பயிரிடுங்கள்... மாத வருமானம் பெற்றிடுங்கள்!’
பட்டு விவசாயத்துக்கு
 விவசாயிகளுக்கு அதிக வருமானத்தைக் கொடுத்து வரும் விவசாய உபதொழில்களில் முக்கியமானது, 'பட்டுக்கூடு’ உற்பத்தி. இந்தியாவில், பட்டு நூலுக்கு எப்போதுமே தேவை இருந்து கொண்டே இருப்பதால்... தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை, விவசாயிகளை அதிக அளவில் இத்தொழிலுக்கு இழுத்து வருகிறது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மானியங்களும் வழங்கப்படுகின்றன.  
இதுபற்றி துறை சார்ந்த வல்லுநர்கள் பகிரும் தகவல்கள், இங்கே இடம்பிடிக்கின்றன.
பஞ்சாயத்துக்கு ஒரு பட்டு விவசாயி!

Wednesday

இயற்கை விவசாயம் ஒரு வழக்கறிஞரின் அனுபவம்


திருச்செந்தூரில் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் ராமகிருஷ்ணன் இயற்கை விவசாயம் பற்றிகூறுகிறார். "நான் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, நாசரேத் அருகில், பிடானேரி என்ற கிராமத்தில் 8 ஏக்கர் நிலம் 1993ல் கிரையம் வாங்கி விவசாயம் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சுமார் 1000 முருங்கை மரங்கள் வளர்த்தேன். அதில் ஓரளவு லாபமும் கிடைத்தது. ஆனால் நாளடைவில் பல சமயங்களில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. எனவே ஒரு விதமான பயிரை பயிரிடுவது சரியல்ல என்று முடிவு செய்து,

Friday

மண்புழு உறவு – நம் வழி வேளாண்மை

நம் வழி வேளாண்மைக்கும் மண்புழுவுக்கும் உள்ள உறவு நித்தியமானது. இங்கு நான் குறிப்பிடப்போகும் விஷயம் சென்னையிலிருந்து ஓய்வு பெற்றதும் நம் வழி வேளாண்மை பத்திரிக்கை நடத்தும் திரு பி.விவேகானந்தனிடம் நான் பெற்ற பல பயிற்சிகளில் மண்புழு வளர்ப்பில் அடைந்த வெற்றிக்கதையும் உள்ளடக்கம். சென்னையிலிருந்தபோது மண்புழு மாஸ்டர் முகமது இஸ்மாயில், புதுக்கல்லூரி உயிரியல் பேராசிரியர், மண்புழு வளர்ப்பைப் பற்றிய பயிற்சி வகுப்புக்கு அப்போது திருவான்மியூர் காமராஜ் அவென்யூவில் அமைந்திருந்த இந்திய பாரம்பரிய அறிவியல் மைய அலுவலகத்தின் பின்புறம் தேர்வானது. 
1994-95 காலகட்டத்தில் மண்புழுவைப் பார்ப்பதே அபூர்வம். அவர் சொல்லிக் கொடுத்த வழி விவசாயிகளால்