Wednesday

வெள்ளாட்டுப்பண்ணை பதிவேடு பராமரிப்பு

பதிவேடுகள் என்றால் நாம் நம் பண்ணையில் செய்யக்கூடியவைகளையும் பண்ணைகளில் கவனிக்க வேண்டியவைகளையும் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் குறித்து வைத்துக் கொள்வதுதான். பதிவேடுகள்தான் பண்ணையின் திறனாய்வுக்கு உதவியாய் உள்ளவை.

பதிவேடுகள் ஒரு பண்ணையில் வரவு செலவுகள், அங்குள்ள ஆடுகளின் திறன் மற்றும் ஆடுகளின் முக்கிய பொருளாதார குணங்களை அறிய உதவுகின்றன. பதிவேடுகள் உபயோகத்திற்குத் தகுந்த முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். பதிவேடுகள் பராமரிக்கப்படாத ஆட்டு மந்தைகளின் மதிப்பு குறைத்தே மதிப்பிடப்படும்.


உதாரணமாக ஓர் ஆட்டுப்பண்ணையில் ஒவ்வொரு ஆட்டின் பாராம்பரியம், அதன் திறன், வளர்ச்சி போன்ற மற்ற விவரங்கள் பதிவேடுகள் மூலம்தான் அறியப் படுகிறது. எனவே குறைந்தபட்சம் சில முக்கிய தகவல்கள் கிடைப்பதற்காக வேண்டியாவது சில பதிவேடுகள் அவசியம் வைக்க வேண்டும். தற்போது நாம் ஒரு வெள்ளாட்டுப் பண்ணையில் வைக்கப்பட வேண்டிய முக்கியமான பதிவேடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

Sunday

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்

வறண்ட நிலத்திலும் வளமான வருமானம்...
மரங்களோடு கூட்டணி போடும் கரும்பு!
 ஒருகாலத்தில், பச்சைக் கம்பளம் விரித்தது போல பயிர்கள் காட்சி அளித்த நிலங்களில் எல்லாம்... இன்று விலையின்மை... விளைச்சலின்மை...  என பலவிதமானப் பிரச்னைகள்தான் அதிகமாக முளைத்துக் கிடக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க நினைப்பவர்களின் ஒரே தேர்வு... மரப்பயிர்கள்! இப்படி மாறிவிட்டால், 'பிரச்னை தீர்ந்தது' என்று நின்றுவிடாமல், அதிலும் சிலபல வித்தைகளைக் கையாண்டு... லாபம் பார்க்கும் விஞ்ஞானி விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், சேந்தமங்கலம், ராஜமாணிக்கம் போல. இவர், மரங்களுக்கிடையில் கரும்பை ஊடுபயிராகப் பயிரிட்டு நல்ல வருமானம் பார்த்து வருகிறார்!
திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில், பதினைந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது பெரியகுளம்

முத்தான வருமானம் தரும் சத்தான நிலக்கடலை !

முத்தான வருமானம் தரும் சத்தான நிலக்கடலை !
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து, ஆரோக்கியமற்ற விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு, நஷ்டப்பட்டுப் புலம்பும் விவசாயிகள் பலர் உண்டு. அதேநேரத்தில், குறைவான செலவில் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு, கூடுதல் மகசூல் மற்றும் லாபத்தையும் பெற்று வருகிறார்கள், பல இயற்கை விவசாயிகள். அத்தகையோரில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம்!
தேவர்குளத்திலிருந்து கயத்தாறு போகும் வழியில், நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பன்னீர்ஊத்து கிராமம். இந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் நிலக்கடலை சாகுபடிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இங்கே... எலுமிச்சை, தென்னைக்கு நடுவே...

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - வான்கோழி வளர்ப்பு

வான்கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை
  



ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளை அடுத்து, அசைவப் பிரியர்களின் சாய்ஸாக மாறி வருகிறது வான்கோழி. விலை குறைவான அதே நேரத்தில் ஆரோக்கியமான இறைச்சியைத் தேடுவோரின் கவனம் வான்கோழி இறைச்சி பக்கமாகத் திரும்பி வருகிறது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அசைவ ஓட்டல்களில் கிடைக்கும் வான்கோழி பிரியாணி, இப்போது அனைத்து நாட்களிலும் கிடைக்கிறது.

Saturday

முருங்கை மல்லிகை வெண்தேக்கு மணக்குது மகா கூட்டணி...


முருங்கை மல்லிகை வெண்தேக்கு மணக்குது மகா கூட்டணி...
ரேபயிரை நம்பி உழுதா... உலை வைக்க முடியாது...’
-இது, கிராமத்தில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் சொலவடை. அந்தளவுக்கு ஊடுபயிர் விவசாயம் நம் முன்னோர்களுக்குள் ஊறிப்போன ஒன்று. பசுமைப் புரட்சி என்ற மாயையால் காணாமல் போனது, இந்த கலப்புப் பயிர் விவசாயம். ஆனாலும், வழக்கத்தை விடாத விவசாயிகள் சிலர், இன்றும் ஊடுபயிர் சாகுபடியை விடாமல் செய்து வருகிறார்கள் இந்த ராஜேந்திரனைப் போல!
தேனி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான ராஜேந்திரன், கொஞ்சமாகக் கிடைக்கும் கிணற்று நீரை வைத்தே மல்லிகைப் பூ விவசாயத்தை முதலில் துவங்கி, பிறகு படிப்படியாக முருங்கை, வெண்தேக்கு என அதற்குள்ளேயே நடவு செய்து, நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

மாடித் தோட்டம் ஒரு மகத்தான மகசூல்!

மாடித் தோட்டம்
ஒரு மகத்தான மகசூல்!
'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்து, முதுமையிலும்கூட சம்பாதிக்க முடியும்’ என்பதை நிரூபித்து வருகிறார், சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
''நான், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். இந்த வீட்டுக்குக் குடிவந்தப்ப... இந்த ஏரியாவே... செடி, கொடி இல்லாம பாலைவனம் மாதிரி இருந்துச்சு. மொத்த ஏரியாவை மாத்த முடியாட்டியும்... நம்ம வீட்டையாவது பசுமையாக்குவோம்னு நினைச்சுதான் இந்த வீட்டுத்தோட்டத்தை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு சொன்னவர், தொடர்ந்தார்.

மஞ்சள் + வெங்காயம் + மிளகாய் + சேனை... உற்பத்திச் செலவை ஈடுகட்டும் உற்சாகக் கூட்டணி!

மஞ்சள் + வெங்காயம் + மிளகாய் + சேனை...
உற்பத்திச் செலவை ஈடுகட்டும் உற்சாகக் கூட்டணி!

ஆண்டுப் பயிரான மஞ்சள் விதைக்கும் விவசாயிகள், அதன் அறுவடைக் காலத்துக்குள், குறுகிய காலப் பயிர்களான வெங்காயம், மிளகாய், துவரை... போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து, கூடுதல் வருமானம் பார்ப்பது வழக்கம். அந்தவகையில் நாட்டு மஞ்சளுக்கு இடையில் வெங்காயம், மிளகாய், சேனைக்கிழங்கு மூன்றையும் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கும்பிக்கருக்கு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ். பாலசுந்தரம்!
அளவெடுத்து அமைக்கப்பட்ட பாத்திகளுக்குள் அணிவகுத்து நிற்கும் மஞ்சள் செடிகள்; அதனூடே பச்சைக் குடைகள் பிடித்தது போல சேனைச்செடிகள்; வெள்ளை மூக்குத்திகளாய் பூவெடுத்து நிற்கும் மிளகாய் செடிகள்; பயிர்களுக்குப் பதமாகப் பாசனம் செய்யும் சொட்டுநீர்க் கருவிகள்... இத்தகைய கண்கொள்ளாக் காட்சிகளுக்கு நடுவே, பராமரிப்புப் பணிகளில் மூழ்கியிருந்தார் பாலசுந்தரம். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும்... குஷியானவர், கை வேலைகளை முடித்துவிட்டு, நம்முன் வந்தார்.

8 ஏக்கரில் ரூ.4 லட்சம் ஏற்றம் தந்த ஏழு ரக வாழை..!

8 ஏக்கரில் ரூ.4 லட்சம் ஏற்றம் தந்த ஏழு ரக வாழை..!
அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி...

ஊடுபயிர் என்றைக்குமே விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை'' என்று அடித்துச் சொல்கிறார், சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.
பாதை காட்டிய பசுமை விகடன் !
ஒரு காலைப் பொழுதில் அவரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கிய வரதராஜன், ''எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சு முடிச்ச கையோடு, விவசாயத்துக்கு வந்துட்டேன். இப்போ 30 வருஷமாச்சு. தென்னைக்கு இடையில 18 வருஷமா வாழையை ஊடுபயிரா சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கேன். கோடைக் காலங்கள்ல கிணத்துப் பாசனம், மழைக் காலங்கள்ல ஏரிப்பாசனம். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான். சம்பாதிக்கிறதுல முக்கால்வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்துச்சு. அதில்லாம கட்டுபடியான விலையும் கிடைக்கலை.

ஏற்றம் தரும் எலுமிச்சை...வாரிக்கொடுக்கும் வாழை ! சுவைமிகு கூட்டணி...

ஏற்றம் தரும் எலுமிச்சை...வாரிக்கொடுக்கும் வாழை !
சுவைமிகு கூட்டணி...
மின்சாரப் பிரச்னை, தண்ணீர் தட்டுப்பாடு... என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.
குடை பிடித்து நின்ற எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்தில்... பராமரிப்புப் பணியில் இருந்த சந்திரசேகரனை 'பசுமை விகடன்’ ஊடுபயிர்கள் சிறப்பிதழுக்காக ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.

Tuesday

மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் உலகில் உயிரின வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்து

மரபணு பொறியியல் என்பது மரபணுவை நேரடியாக கையாண்டு உருவாக்கப்படும் விளைவுகளைக் குறிக்கும். கூடிய உற்பத்தி தரும் விதைகள் பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (Genetically modifie organism),  செயற்கை உடல் உறுப்புகள் (Artificial Organ), செயற்கை இன்சுலின் என பல தரப்பட்ட பயன் பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு.

இது இன்னும் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு தொழில்நுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில் பயன்பட்டாலும் சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காடாக புதிய வகை உயிரினங் களை உருவாகும் பொழுது அவை சில வேளைகளில் சூழ்நிலை மண்ட லங்களுக்கு ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு. இவ்வாறு மாற்றப்பட்ட சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை சற்று குறைந்துள்ள தாக கூறப்படுகிறது.