Wednesday

முயல் இறைச்சி


மனிதர்களுக்குத் தேவையான புரதச்சத்து மிகுந்த உணவினை அளிப்பதில் வளர்ப்பு விலங்குகளின் பங்கு வெகுவாக இருந்து வருகின்றது. இத்தகைய வளர்ப்பு விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சியானது பெருமளவு புரத அமிலங்களையும், கொழுப்பு அமிலங்களையும் மற்றும் கனிமச் சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இறைச்சி என்பது முழுவதுமாகச் செரிக்கப்படக் கூடியதும், அனைத்துச் சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான சரிவிகித உணவுப் பொருளாகும்.

இன்றைய மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், மேலைநாடுகளின் நாகரீக மோகம் மற்றும் மென்பொருள் தொழிலகங்களில் பணிபுரியும் இன்றைய யுவன்களும் யுவதிகளும் அதிக உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்துகொண்டே செயல்படும் நிலையில் உள்ளனர். அதனால் எரிசக்தி அவர்களில் அவ்வளவாக செலவாவதில்லை. ஆனால் அதே சமயத்தில் எரிசக்தி நிறைந்த, கொழுப்புச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.

Tuesday

மண் புழு உரம் தயாரிப்பு - தொழில்

இன்றைய தேதியில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான். செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண் புழு உரம்.    
வ்வொருவர் வீட்டிலும்  காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க  முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம்,