Thursday

புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்... கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!

புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்...
கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!
''விவசாயத்துல வெற்றி, தோல்வி சகஜம்தாங்க. ஆனா, குதிரைக்குக் கடிவாளம் போட்டமாதிரி எல்லாரும் செய்றதையே நாமளும் செஞ்சுட்டு 'நஷ்டம், நஷ்டம்’னு புலம்பக் கூடாது. நம்ம மண்ணுக்கு, சூழலுக்கு எது தோதுப்பட்டு வருமோ... அதை ஆர்வத்தோடயும் அர்பணிப்போடயும் செஞ்சா வெற்றி தானா வரும். இது என் அனுபவத்துல பாத்த உண்மை''
-இப்படி நம்பிக்கைத் தெறிக்கப் பேசுகிறார், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி அருகேயுள்ள மருதன்குடி கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன்.
முழுநேர விவசாயிகளே விழிபிதுங்கி நிற்கும் இக்காலக்கட்டத்தில்... பகுதி நேரத் தொழிலாக விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வரும் நாச்சியப்பனை, உச்சிவெயில் வேளையில் அவருடைய பண்ணையில் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார், அவர்.

Saturday

வறண்ட பூமியில் இயற்கை விவசாயம்

நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.

பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.

Wednesday

செலவு குறையுது...வரவு கூடுது... ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !


செலவு குறையுது...வரவு கூடுது...
ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !

'ஜீரோ பட்ஜெட்’ விவசாயத்தின் முக்கிய இடுபொருட்கள்... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ஆகிய இரண்டும்தான். விவசாயிகளே எளிதில் தயாரித்துக் கொள்ளக்கூடிய இந்த இடுபொருட்களை, ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் பயன்படுத்தி, கண்கூடாக பலன்களை உணர்ந்திருக்கிறார்கள். அத்தகையோரில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து-ஈஸ்வரி தம்பதிக்கும் இடமுண்டு. இவர்கள், மரப்பயிர்களுக்கு இந்த இடுபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பத்து ஏக்கரில் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் இவர்களின் பண்ணையில், காலைவேளையில் கால் வைத்தோம். வாய் நிறைந்த சிரிப்புடன் வரவேற்று உபசரித்தனர் தம்பதியர். வேப்பமர நிழலில் கட்டியிருந்த நாட்டுமாடுகளுக்கு வைக்கோல் போட்டபடியே பேச ஆரம்பித்தார், புரவிமுத்து.