Wednesday

உயிரியக்க ஆற்றல் பண்ணை


1. முகவுரை:
1924-ம் ஆண்டு ஜெர்மனியில், முனைவர் ரூடால்ப் ஸ்டெய்னர் வேளாண்மையைப் பற்றிய புதிய முறையை விவசாயிகளுக்கு பிரசங்கம் செய்யும் போது உயிர் சக்தி வாய்ந்த வேளாண்மை என்பது உலகுக்கு தெரியவந்தது. ரூடால்ப் ஸ்டெய்னர், ஆஸ்டிரிய தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி ஆவார். இவருடைய கருத்துக்கள் கிழக்கத்திய நாடுகளின் தத்துவம் முக்கியமாக புத்த மதம், இந்து மதம் மற்றும் வேதப் புத்தகங்கள் தாக்கத்தால் உருவானது. இந்த தாக்கங்கள் மற்றும் அவருடைய கருத்துக்களால் ஆந்தராபோஸாப்பி அல்லது மனித இனத்தினுடைய அறிவு என்பது உருவானது.

மக்கு எரு தொழில்நுட்பம்


மட்கு உரம் தயாரித்தல்



1.மட்கு உரம் ஒரு மேலோட்டம்

2.பயிர் குப்பையை மட்கு உரமாக்குதல்
3.கரும்பு சருகை மட்கு உரமாக்குதல்
4. கோழிப் பண்ணைக் கழிவுகளை மட்கு உர தொழில்நுட்பம் மூலம் மதிப்புக் கூட்டுதல்



1.மட்கு உரமாக்குதல் - ஒரு மேலோட்டம்



இயற்கை முறையில் அங்ககப்பொருள்களை நுண்ணுயிரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் மட்கச் செய்தல் அல்லது அழுகச் செய்தே மட்கு உரமாகும். அங்ககப் பொருட்களான பயிர்க்குப்பைகள், விலங்குகளின் கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள், ஆகியன மட்கச் செய்தபின் மண்ணில் உரமிடுவதற்கு ஏற்ற தகுதியைப் பெறுகிறது. ம

Vermiculture

Vermiculture

'Vermiculture' literally means worm growing or worm farming. When earthworms are used primarily for the production of compost, the practice is referred to as vermicomposting.

Why all the excitement about earthworms?
Earthworms are truly amazing creatures that hold vast potential for addressing many of our current ecological concerns, including climate change and food security. Perhaps surprisingly, this is not breaking news.

NEWS ARTICLE ON VERMICULTURE

Vermiculture unit aims at holistic organic projects for dairy farms.

A vermiculture unit has been set up by Korgao Collective Farming Cooperative Society under a corporate social responsibility project of Goa Shipyard Ltd. implemented by Tata Institute of Social Sciences (TISS) under the technical support of Krishi Vigyan Kendra (KVK), Indian Council of Agricultural Research (ICAR) at Korgao village in Pernem taluk of north Goa.

The project includes distribution of Jersey/HF (Holstein Friesian) cows to the members of the society along with small-scale vermiculture units to convert dairy waste into high value vermicompost. The project also includes creating facility for green fodder production using hydroponics, said Hiralal Prabhudesai, Subject Matter Specialist of ICAR.

மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் (vermiculture)

மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் 

முன்னுரை

இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.

மூலிகை சாகுபடியில் மானியம்

இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90% மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகையால் மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது.

பயிர் பாதுகாப்பில் வேம்பு


பயிர் சாகுபடியில் ரசாயன மருந்துகள் அதிகம் உபயோகிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது. எனவே ரசாயன மருந்துகளை குறைத்து, இயற்கையில் கிடைக்கும் பொருட்களை உபயோகித்து விவசாயிகள் பயன் பெறலாம்.

அவ்வாறு இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் பிரதானமானது வேம்பு. வேம்பின் கசப்பும், மணமும் எதிரியினங்களை சாப்பிட விடாமலும், பயிரை அண்டவிடாமலும் விரட்டுகின்றன.

பனையைக் காக்க ஒரு பயணம் !

பனையைக் காக்க ஒரு பயணம் !
பனை மரம் எங்கள் தாய் என்றால்,பதநீர் என்பது தாய்ப்பாலே...
பனையைக் காக்க குழந்தைகளின் பயணம்...
பனை மரம் எங்கள் அடையாளம் அதைப் பாதுகாப்பது நம் கடமை...
பனைமரம் எங்கள் தாய் என்றால், பதநீர் என்பது தாய்ப்பாலே ..
இப்படி 9-ம் வகுப்பு ஷோபனா ராகம்போட்டுப் பாட, 250 சிறுவர்கள் அந்தப் பாடலை உடன் பாடிக்கொண்டு சென்றது, எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. நமது மாநில மரமான பனையின் சிறப்புகளைக் கூறி, அவை அழிக்கப்படாமல் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த நடைப் பயணம்.

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அரசு மானியம்

நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் சூழலில் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து அதிக மகசூல் பெறலாம். தோட்டக்கலைத் துறை அளிக்கும் 100 சதவீத மானியத்தைப் பெற்று சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
100 சதவீதம் மானியம்: அபரிமிதமாக நீரைப் பயன்படுத்துவதை விட, அளவாக நீரைப் பயன்படுத்துவதால் நிறைவான மகசூல் பெற முடியும் என்பது அறிவியல்பூர்வமாகவும், அனுபவரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீர் சிக்கனம் நிறைவான மகசூலுக்கு வழிவகுக்கும். சொட்டுநீர்ப் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் வழங்குகிறது.

Friday

இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி..!

இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி..! 

'வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.

ஒருங்கிணைந்தப் பண்ணையம் - நெல், தென்னை, ஆடு, கோழி, புறா, முயல், வாத்து.

புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''